சிரிக்கின்றோம் ரசிக்கின்றோம்
மாவீரர்கள் பாடல்கள்
எங்கள் செவிகளில் விழாதவரை
அனைத்தும் சாத்தியமாகி
வாழ்கின்றோம்
உங்களின் பாடல்கள்
எம் செவிப்புலனுக்குள்
பாய்ந்திடும் நொடிகளில்
கலங்கி கண்ணீர் மல்கி
உங்களை பூசிக்க
நீங்கள் நேசித்த காற்றினை
நாமும் நேசிக்கவே
விரும்புகின்றோம்
உங்கள் மீதான காதலும்
உங்களின் எண்ண துடிப்பும்
எம் உயிர் வாழும்வரை வாழும்
என்றே உங்கள் கல்லறைகளில்
சத்தியம் செய்கின்றோம்
மாவீரர்கள் புனிதமானவர்கள்
அவர்களை நேசிக்கும் மக்கள் தூய்மையானவர்கள்
மக்களையும் விடுதலை போராளிகளையும்
வேறாக்கி நாம் என்றும் நோக்கிட முடியாது…
27/11/2018
காவியா
09.49
லண்டன்