முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இரணைப்பாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் நெஞ்சுருகி மாவீரர்களை நினைவிற்கொண்டுள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு இரணைப்பாலைப்பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு மாவீரர்களின் பொது நினைவாக கல்லறை அமைக்கப்பட்டு பொதுச்சுடர் வைக்கப்பட்டு அந்தப்பகுதியில் புதைக்கப்பட்ட மாவீரர்களின் நினைவாக பந்தங்கள் ஊண்டப்பட்டு மாவீரர்களின் பெயர் பொறிக்கப்ப்பட்ட படங்கள் வைக்கப்பட்டு அருகில் கமுகம் கன்றும் வைக்கப்பட்டு மாவீரர் பெற்றோர்கள் ஏற்பாட்டுக்குழுவினாரல் வரவளைக்கப்பட்டுள்ளார்கள்.
சரியாக 6.05. மணிக்கு பொதுச்சுடரினை இரண்டு மாவீரர்களின் தாயார் மரியதாஸ் மேரிமெற்ரலின் அவர்கள் ஏற்றிவைத்துள்ளதை தொடர்ந்து மாவீரர்களின் மாதிரி நினைவு இடங்களில் பெற்றோர்கள் உறவினர்கள் சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.
மூவாயிரம் வரையான மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களின் பங்கு பற்றலுடன் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் நினைவேந்தப்பட்டது.!
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களின் பங்கு பற்றலுடன் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் நினைவேந்தப்பட்டது. இன்று கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் தின நிகழ்வில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர். இருபத்தைந்து ஆயிரத்திற்கு அதிகமான ம்களின் பங்கு பற்றலுடன் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்புாது பிரதான சுடரினை மாவீரர் பிரிக்குடியர் தீபனின் தந்தையான இரண்டு மாவீரர்களின் தந்தையான வேலாயுதம்பிள்ளை அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாவீரர்களின் நினைவு சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் ஏற்றி உணர்வு பூர்வமாக கடைப்பிடித்தனர்.
முள்ளியவளையில் சுடரை ஏற்றிவைத்தார் மேஜர் பசீலனின் தாயார்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல மாவீரர் துயிலும் இல்லங்களில் கார்த்திகை 27 அன்று மக்கள் சுடர் ஏற்றி மாவீரர் நாளினை நினைவிற்கொண்டுள்ளார்கள்.
தங்கள் பிள்ளைகள்,உறவுகள்,கணவன் என தாயக விடுதலைக்காக கொடுத்த உறவுகளை நினைந்துருகி மனமார வழிபடும் புனித நாளான கார்த்திகை 27 முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியளை மாவீரர்துயிலும் இல்லத்தில் பல ஆயிரம் மாவீரர்கள் விதைக்கப்பட்டுள்ளார்கள்.
அந்தவகையில் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு வருகை தந்த மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் தங்கள் மாவீரர்களை நினைவிற்கொள்ள அமைக்கப்பட்ட இடத்தில் சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்துமலர் தூவி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.
இதில் சிலர் தங்கள் பிள்ளைகளின் திருவுருவப்படத்தினை கொண்டுவந்து வைத்து சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக்கழு மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மரக்கன்று ஒன்றினை வழங்கியுள்ளார்கள்.
கடந்த ஆண்டும் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுச்சுடரினை முன்னாள் வன்னிமாவட்ட தளபதியாக இருந்த மேஜர் பசீலன் அவர்களின் தாயார் ந.தங்கம்மா அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றினார் இந்த ஆண்டும் வயது முதிர்ந்த நிலையிலும் மாவீரர்களுக்கான பொதுச்சுடரினை மேஜர் பசீலன் அவர்களின் தாயார் ஏற்றிவைக்க தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் சுடர் ஏற்றி தங்கள் மனக்குமுறல்களை வெளிக்கொணர்ந்துள்ளார்கள்.
முள்ளியவளை துயிலும் இல்லத்தில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.
அளம்பில் துயிலுமில்லத்தில் சிறப்புற இடம்பெற்ற மாவீரர் நாள்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது மாவீரர் ஒருவரின் தாயாரான பெரியகறுப்பன் செல்லம்மா அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைக்க தொடர்ந்து ஏனைய மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுடர் ஏற்றினார்கள்.
முல்லைக்கடற்கரை மாவீரர் நினைவு கூரல்
தேவிபுரம் மாவீரர் நினைவு கூரல்
முள்ளிவாய்க்கால் மாவீரர் நினைவு கூரல்
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் மாவீரத்தெய்வங்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட திருக்கோவிலில் மாவீரர் உறுதியுரை கீதம் இசைக்க மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு மாதிரிக் கல்லறைகளுக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றலுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்றது.
தமது உறவுகளை நினைத்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதுடன் மேலும் இங்கு அனைவரும் தமது உறவுகளை நினைத்து கண்ணீர் சிந்தி கதறி அழுவதையும் காணக்கூடியதாக உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.