கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதிக்கு முன்னர் இருந்த ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தினை மீளமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை பெறக்கூடியவர் என நீங்கள் கருதும் நபரை பிரதமராக நியமிக்க வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களின் கையொப்பமிட்டுள்ளனர்.