சிங்கள பரைடயினராலும் ஒட்டுக்குழுக்களாலும் கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட துன்னாலையைச் சேர்ந்த ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தயார் இன்று உயிரிழந்துள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் வடமராட்சியின் துன்னாலை கலிகை சந்தி இலங்கை இராணுவ படைமுகாமில் வைத்து இராமச்சந்திரன் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.தடுத்து வைக்கப்பட்டிருந்த சூழலில் ஒரிரு நாட்கள் அவர் தொலைபேசி செயற்பட்டுக் கொண்டிருந்தேயிருந்தது. விசாரணையொன்றிற்காக தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையினை அவர் அப்போது பகிர்ந்துள்ளார்.
யாழ்.தினக்குரல் இவலம்புரி நாளிதழ்களது பிரதேச செய்தியாளராக பணியாற்றிக் கொண்டிருந்த இராமச்சந்திரன் தொடர்பில் இன்று வரை தகவல்கள் இல்லாத நிலையில் காணாமல் போன தனது பிள்ளையினை தேடி பெற்றேர்கள் தொடர் போராட்டம் மேற்கொண்டு வந்த வேளை கடந்த மாதம் 05 ஆம் திகதி ஊடகவியலாளரின் தந்தையார் சுப்பிரமணியம் அதனது பிள்ளையை காணாத நிலையில் உயிரிழந்துள்ளார் இன்னிலையில் இவரது தாயர் 09.12.18 அன்று பிள்ளையினை காணாத தாயாக உயரிழந்துள்ளார்
தனது மகன் உடகவியலாளன் படையினராலம் ஒட்டுக்குழுவாலும் இணைந்து கடத்தப்பட்டு இராமச்சந்திரனை தேடியே அலைந்து திரிந்து தாம் சாவதற்குள் மகனை கண்டுவிட வேண்டும் என்றிருந்தவர்கள் மகனைக் காணாமலே அப்பா சுப்பிரமணியம் இறந்து ஒரு மாதமே கழிந்த நிலையில் அம்மா சுப்பிரமணியம் அம்பிகையும் இறந்துவிட்டார்.