மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரண்டு பொலீசார் படுகொலைசெய்யப்பட்டதன் பின்னர் வடக்கில் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு,வவுனியா மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளும்,அமைதிவேண்டி நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணி என்ன என்ற கேள்வி தமிழ்மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மாவட்டங்களில் சிவில்,சமூக அமைப்புக்கள் பல இருந்தும் மக்கள் என்ற போர்வையில் பலரை அழைத்து சமாதானம் வேண்டியும் பயங்கரவாத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தும் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் நடைபெற்றுள்ளன இதன் பின்னணி என்ன? என்ற கேள்வி மக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வாழ்இடங்களை சேர்ந்த புலம்பெயர் மக்கள் பல வாழ்வாதார உதவிகளை வழங்கிவருகின்றார்கள் இதனை தடுக்கும் செயற்பாடாகவே இவை அமைந்துள்ளது.
புலம் பெயர் மக்களை புலிச்சாயம் பூசி அவர்கள்தான் இந்த பொலீஸ் கொலையினை செய்தார்கள் அதனை மேற்கொண்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் திட்டமிட்டு ஒரே வகையான எழுத்துக்களால் எழுதப்பட்ட சுவரொட்டிகளும்,ஆர்ப்பாட்டத்தின் போது எழுதப்பட்ட பதாகைகளும் காணப்படுகின்றன.
இதன் பின்னணி யார் என உண்மையான மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
அண்மையில புதுக்குடியிருபு பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் முற்றிலும் படையினரின் கீழ் இயங்கும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரியும் பணியாளர்களை வைத்தே நடத்தப்பட்டுள்ளது மக்கள் அமைப்புக்களோ மக்கள் தாமாகவோ முன்வந்து இந்த போராட்டங்களை மேற்கொள்ளவில்லை இந்த போராட்டத்தின் பின்னணியில் பாரிஒரு சதிவலையில் ஈடுபடும் சக்தி ஒன்று இருப்பதாக மாவட்டங்களில் உள்ள சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.