ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சியால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்படும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன அறிவித்துள்ளன.
அதேவேளை, பிரதான எதிர்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இப்பிரேரணைக்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐ.தே.க. தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைப்பதற்கான ஆதரவளிக்கப்படும் எனக் கடிதம் மூலம் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எனவே, அந்த முன்னணியால் முன்மொழியப்படும் பிரதமருக்கும் கூட்டமைப்பு பச்சைக்கொடி காட்டும் என்றே கூறப்படுகின்றது.
எனினும், இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி முடிவு அக்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலேயே எடுக்கப்படவுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 12 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர், கூட்டமைப்பின் குழுக்கூட்டம் நடைபெறும் .
தமிழ் முற்போக்குக் கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகியன ஐக்கிய தேசிய முன்னணியில் பங்காளிக் கட்சிகளாக அங்கம் வகித்தாலும் – அரசியல் ரீதியான முடிவுகளைச் சுயாதீனமாக எடுக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன.
இதன் அடிப்படையில் நிபந்தனையின்றி ரணிலை ஆதரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ஆறு எ ம் . பி க் களைக் கொண்டுள்ள ஜே.வி.பி., ரணிலுக்கு ஆதரவான பிரேரணையை எதிர்க்கவுள்ளது