நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் தொண்மை அழிப்பு செயற்பாடுகளை நிறுத்த உத்தரவு…
பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஶ்ரீஸ்காந்தராசாவின் அழுத்தத்தையடுத்து நடவடிக்கை…..
முல்லைத்தீவு, செம்மலை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட தொண்மையழிப்பு தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கடந்த 17.12.2018 அன்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா அவர்கள் நேரடியாக கொண்டு சென்றதையடுத்து குறித்த செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தி , அதற்கான மேலதிக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளரால் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் 19.12.2018 திகதியிடப்பட்டு இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன் பிரதிகள் ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது