கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி யோ.கனகரஞ்சினி இணையம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணில் இதனை தெரிவித்துள்ளார்.
இறுதி போரின்பின்னர் படையினரிடம் சரணைந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் அதற்கான ஆதாரம் அனைத்தும் தன்னிடம் இருப்பதாகவம் நான் இறப்பதற்கு முன் எனது பிள்ளையுடன் ஒர் நாளாவது வாழவேண்டும் என்ற ஆசையுடன் வீதிக்கு இறங்கினேன் என்போன்ற பல உறவுகள் என்னுடன் சேர்ந்து இறங்கினார்கள் இவ்வாறான எமது பிள்ளைகள் உறவுகளை தேடுவதற்கான போராட்டம் தொடர்ந்து கொண்டு செல்கின்றது. அண்மையில் எனது கணவனையும் நான் தொலைத்துவிட்டேன் நோய்வாய்ப்பாட்டு அவரும் இறந்து விட்டார்.
காணாமல் போனவர்களின் எங்கள் உறவுகள் கிடைக்கும் வரை இந்த போராட்டத்தினை தொடரவுள்ளோம். கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவானவர்கள் காணாமல்பேயுள்ளார்கள் பதிவுகளை இப்போதும் தருகின்றார்கள் பதிவுகள் தராமல் பலர் இருக்கின்றார்கள் இந்த உறவுகளை தேடுபவர்கள் பணத்தினையோ வாழ்வாதாரத்தினையோ எதிர்பார்க்காமல் உறவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள். இதுவரை எட்டு மாவட்டங்களை சேர்ந்த 17 உறவுகள் தங்கள் பிள்ளைகள் உறவுகளை தேடிய போராட்டத்தில் கலந்துகொண்டு உயிரிழந்துள்ளார்கள்.
எமது பிரச்சனைகளை தமிழ் தலைவர்கள் அனைவரும் ஒன்று பட்டு பாராளுமன்றத்தில் குரல் கொடுத்திருந்தால் நாங்கள் வீதியில் இறங்கி போராடவேண்டியிருக்கா என்றும் தெரிவித்த அவர்.
இன்னிலையில் இலங்கை அரசின் ஊடாக நீதி கிடைக்காத எமக்கு சர்வதேசம் எமது பிரச்சனையினை கையில் எடுத்து கால இழுத்தடிப்புக்களை தவிர்த்து இலங்கை அரசுக்கு கால அவகாசங்களை வழங்காது எதிர்வரும் மார்ச் மாதமாவது காணாமல் போனோர் பிரச்சனையில் சர்வதேச விசாரணையை மேற்கொள்வதற்கான தீர்மானங்களை நிறைவேற்றவேண்டும்.
இலங்கையில் மனித உரிமை உள்ளதா? எனக்கு தெரியாது மனி உரிமை தினம் என்று ஒன்று உள்ளது அதனை அன்றைய நாள் நாங்கள் கத்துகின்றோம் கதறுகின்றோம்,மனித உரிமையினை போணச்சொல்கின்றோம் ஆனாலும் கடத்தல்,காணாமல்போதல்,கற்பழிப்பு, என்று அந்த வரிசை நீண்டுகொண்டேதான் செல்கின்றது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.