டி.பி.விஜேதுங்க . அவரது கடந்த காலத்தைப் பார்த்தால் இது புரியும்.
கண்டி மாவட்டத்தில் கூட்டுறவு பரிசோதகராகக் கடமை புரிந்தார். டிங்கிரி பண்டா விஜேதுங்கா .
இவரைப் பிற்காலத்தில் D.B என்பதற்குப் பதிலாக Deaf and Dumb அதாவது காது கேளாத வாய் பேசாத ( D.B) விஜேதுங்க என நையாண்டியாக கூறினார்கள்.
ஜே.ஆர். ஜெயவர்த்தன ஐக்கிய தேசியக் கட்சியில் அதிகாரமுள்ள தலைவராக நீண்ட காலம் இருந்தவர்.
அப்போது 1970 களின் ஆரம்பத்தில் கண்டி மாவட்டத்திற்கு அரசியல் நடவடிக்கைக்காக போகும் போது சாதுவாக இருந்த கட்சியின் உறுப்பினரான இவரைக் கண்டுள்ளார்.
அமைதியாக இருந்து இவர் புரிந்த கட்சிப் பணிகள் அவரைக் கவர்ந்துள்ளது.
அதனால் 1977 பொதுத் தேர்தலில் கண்டியின் தொகுதி ஒன்றில் நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளார்.
தனது அமைச்சரவையில் பிரதி அமைச்சராக நியமித்தார். பின்னர் அவரை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக்கினார்.
1988 டிசெம்பரில் ஜே.வி.பியின் ஆயுதங் தாங்கிய போராட்டத்தின் காரணமாக ஏற்பட்ட அச்சுறத்தலால் ஜே.ஆர் பிரேமதாசவிடம் கட்சிப் பொறுப்பைக் கையளித்தார்.
மூன்றாவது தடவையாக ஜனாதிபதி பதவியை வகிக்க முடியாது என யாப்புச் சொன்னது.
ஆனாலும் தன்னிடம் இருந்த 4/5 பெரும்பான்மையைப் பயன்படுத்தி யாப்பைத் திருத்தி இருக்கலாம்.
ஆனாலும் பிரேமதாசவிடம் கொண்ட அச்சம், ஜே.வி.பியிடம் கொண்ட அச்சம் காரணமாக ஜே.ஆர்.ஒதுங்கிக் கொண்டார்.
முதுமையும் ஓர் காரணம்.
தேர்தலில் பிரேமதாச அரும்பொட்டில் வென்று ஜனாதிபதியானார்.
பிரதமர் பதவியைக் குறி வைத்து காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி ஆகியோர் காத்திருந்தனர்.
அவர்களிடம் பதவியைக் கொடுத்தால் தன்னைக் கவிட்டு விடுவார்கள் என நினைத்து பிரதமர் பதவிக்கு ஓர் அப்பாவியைத் தேடினார்.
டி.பி.விஜேதுங்காவைப் பிரதமராக்கினார். 1991 இல் ஜனாதிபதி பிரேமதாசவைப் பதவி நீக்க அரசியல் குற்றச்சாட்டுப் பிரேரணையை காமினி,லலித் கூட்டாளிகள் கொண்டு வந்து தோற்றனர்.
கட்சியை விட்டு வெளியேறி ஜனநாயக ஐக்கிய தேசியக் கட்சி என்று புதிய கட்சியை உருவாக்கினார்கள்.
1993 மே தினத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பிரேமதாச கொல்லப்பட்டார்.
அதற்கு முன்னர் ஒரு வாரத்திற்கு முன்பதாக லலித் அத்துலத்முதலி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
பிரேமதாச இறந்தவுடன் நாடாளுமன்றம் கூடி பிரதமரான டி.பி.விஜேதுங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தது.
இலங்கை அரசியல் வரலாற்றில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஒருவரை இறந்து போன ஜனாதிபதியின் எஞ்சிய காலத்திற்கு நாடாளுமன்றம் தெரிவு செய்த முதலாவது சந்தர்ப்பம் அதுவாகும்.
அதிகாரப் போட்டிக்குப் போகாமல் அதிஸ்டம் ஒன்றை மட்டும் கொண்டு நாட்டின் அதி உயர் பதவி வரை சென்ற டி.பி.விஜேதுங்க தான் இலங்கை வரலாற்றில் அதி கூடிய அதிஸ்டம் உள்ளவர்.