இந்தோனேஷியாவின் அனக்கரகோட்டா எரிமலை மீண்டும் வெடித்து சுனாமி தாக்கும் அபாயம் இருப்பதாக இந்தோனேஷிய அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் இந்தோனேஷிய வானிலை மற்றும் புவியியல் அமைப்பு விடுத்துள்ள தகவலில்,
‘‘எரிமலை வெடித்து நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், ஜாவா மற்றும் சுமத்திரா தீவு கடற்கரைகளில் சுனாமி தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்த இரு தீவுகளுக்கு இடையே உள்ள சுன்டா வளைகுடா கடற்பகுதியில் 500 மீட்டர் முதல் ஒரு கி.மீ. தொலைவு வரை வசிப்பவர்களும், கடற்கரைக்கு செல்பவர்களும் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்’’ என கேட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் உள்ள அனக்கரகோட்டா என்ற எரிமலை கடந்த 22 ஆம் திகதி திடீரென வெடித்து சிதறியதில், சுனாமி ஏற்பட்டது. இது ஜாவா, சுமத்ரா தீவு கடற்கரைகளை தாக்கியதில் 420 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.