ஆட்சி ; அதிகாரத்தினை மக்கள் பணத்தை கொள்ளையிடும் செயலில் குறியாக உள்ள அதிமுகவினர் ஒருநாளேனும் மறைந்த அவர்களின் தலைவி ஜெயலலிதாவுக்காக இரங்கல் கூட்டம் ஒன்றினை ஒருங்கிணைத்து நடத்தியிருப்பார்களா? என விமர்சித்துள்ளது திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலி.
முரசொலியின் இன்றைய பதிப்பில் குறளோவியத்தின் மகனோவியம் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள தலையங்கத்தில், “மறைந்த திமுக தலைவர் கலைஞரையும், ஜெயலலிதாவையும் எவ்விதத்திலும் ஒப்பிட முடியாது. ஆனால், கலைஞர் மறைந்ததன் பின்னர் அனைத்து துறை சார் பிரபலங்கள், அறிஞர்கள், பொதுமக்களைக்கூட்டி இரங்கல் கூட்டங்கள் பல நடத்தப்பட்டது. அவர் இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் ஆற்றிய பணிகள் நினைவு கூறப்பட்டது.
ஆனால், “ஜெயலலிதா இறந்த பின்னர் பதவிக்காகத்தான் அதிமுகவினர் அலைந்தனரே தவிர தங்களின் தலைவியென கூறிக்கொள்ளும் ஜெயலலிதாவுக்காக ஒரு இரங்கல் கூட்டத்தையாவது நடத்தியிருப்பார்களா? அடிக்கும் கொள்ளைக்கு நன்றி காட்டியிருப்பார்களா? உண்ணும் சோறும் அதில் உள்ள உப்பும் அந்த ஒற்றை பெண்மணியால் கிடைத்ததென்ற உணர்வெனும் இவர்களுக்கு இருந்திருக்குமா?” என அதிமுகவினரை காட்டமாக விமர்சிக்கப்பட்டுள்ளது.