வட தமிழீழம் மன்னார் மனித புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் ஆய்விற்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
புளோரிடாவிலுள்ள ஆய்வுக் கூடமொன்றில் இந்த மனித எச்சங்களை ஆய்வுக்குட்படுத்தப்பட உள்ள நிலையில், அவை எதிர்வரும் ஜனவரி மாதம் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் மனித புதைக்குழியிலிருந்து இதுவரை 283 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 20 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையதென நம்பப்படுகிறது.
மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் 120 நாட்களை கடந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.