புதிய அரசியல் அமைப்புக்குள் சமஸ்டி உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறியே கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலே இலங்கை தமிழரசுக்கட்சியைச் சார்ந்தவர்கள் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.
வட தமிழீழம் மன்னாரில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் அரசியல் கைதிகளின் பிள்ளைகள் மற்றும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்பாக புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட இருக்கின்றது என்ற செய்தியை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் சிங்கள இனவாத மகாநாயக்க தேரர்களை பிரதமர் சந்தித்த போது கூட புதிய அரசியல் அமைப்பிற்கு ஊடாக பௌத்த மதத்திற்குத்தான் முன்னுரிமை வழங்கப்படுமெனத் தெரிவித்திருந்தார்.
அதேபோல் ஒற்றையாட்சியையே இந்த நாடு கொண்டிருக்கின்றது என்ற செய்தியை கூறுகின்றதன் பிற்பாடு கூட, இந்த புதிய அரசியல் அமைப்பு எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்பாக கொண்டு வரப்படும் எனக் கூறுகின்றனர்.
இச்செய்தியானது மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினை மீண்டும் இவர்களும், தற்போதைய அரசும் சேர்ந்து ஏமாற்றி, தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த விதமான உரிமைகளையும் பெற்றுக்கொள்ள முடியாது என்கின்ற நிலைக்கே இவர்கள் வழியேற்படுத்தவுள்ளார்கள்” என சிவசக்தி ஆனந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய குறிப்பு:-
சிங்கள இனவாத அரசின் கூலிகளாக ஒட்டுக்குழுக்கள் இயங்கிவருகின்றனர். இவர்கள் தமது குடும்பத்தின் தனிப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்காக சிங்கள அரசால் கொடுக்கப்படும் சலுகைகளை இன்றும் அனுபவித்து வருவதுடன் தொடர்ந்தும் தமிழீழ விடுதலையிற்கு எதிராக இயங்கி வருவதையும் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. EPDP, EPRLF, TELO, PLOT, ஆனந்த சங்கரி போன்ற பலர் இப்பட்டியலில் அடங்குவர்