ஆனையிறவுப் பகுதியில் இராணுவத்தினர் நினைவுத் தூபி அமைந்துள்ள காணி தமது சபைக்குரிய காணி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தாா்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட குறிஞ்சாதீவுப் பகுதியில், உப்பளம் அமைப்பதற்கு குறித்த காணியினை தருமாறு பிரதேச செயலகத்தால் கோரப்பட்டிருந்த நிலையில், அவற்றுக்கான அனுமதி நீண்டகால குத்தைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்குச் சொந்தமான வாடி. வீடுகள் அமைந்த காணி தற்போதும் இராணுவத்தின் பிடியில் உள்ளது எனவும் தெரி விக்கப்பட்டது.
அவை முன்னைய காலத்தில் நெதர்லாந்து நாட்டவர்கள் அங்கு வீடுகள் அமைத்து வெளிநாட்டு மக்களுக்கு சுற்றலா மையாமாக வைத்திருந்தனா். அவை தற்போது இராணுவத்தின் நினைவுச் சின்னம் உள்ள பகுதியாக உள்ளதாகத் தெரிவித்த தவிசாளர்.
இந்தக் காணியினை இராணுவத்தினர் ஒப்படைத்தால் அதனை ஒரு சுற்றுலா மையமாக ஒல்லாந்தர் பயன்படுத்தியது போன்று பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் படையினரின் கடை அமைத்துள்ளதுடன், நடைபாதை வியாபாரிகளும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவை தொடர்பாக பிரதேச சபை அனுமதிகள் பெறப்பட்டுள்ளதா எனக் கேட்டபோது இல்லை எனப் பதிலளித்தார்.