கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வை நிர்வாகத்தின் அனுமதியின்றி ஏற்பாடு செய்திருந்தமையினால் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை கிழக்கு பல்கலைகழக பொது மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு மிகவும் உணர்வுபூர்வமாக தமிழ் மாணவர்களினால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாக்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் கிழக்கு பல்கலைக்கழக வாளாகத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் இன்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வினை அறிக்கையிட சென்ற ஊடகவியலாளர்களை நிகழ்வு நடைபெற்ற ஆலய முன்றலில் இருந்து கிழக்கு பல்கலைகழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களினால் அவ்விடத்தில் இருந்து வெளியேறுமாறு கேட்க்கப்பட்டதிற்கு அமைய ஊடகவியலாளர்கள் வெளியேறியுள்ளனர்.
பின்னர் உரிய விடயத்தினை கிழக்கு பல்கலைகழக பதில் உபவேந்தர் கலாநிதி கே.ஏ.கருணாகரனிடம் மாணவர்களினால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நிகழ்வு தங்களின் நிர்வாகத்திற்கு அறிவிக்காமல் செய்யப்படுவதாகவும், ஊடகவியலாளர்களை எந்த காரணம் கொண்டும் கிழக்கு பல்கலைகழகத்தில் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த மாணவர்கள், கிழக்கு பல்கலைகழகத்திற்குள் வரும் புலனாய்வாளர்களிடம் அனுமதி வழங்கியா? பல்கலைகழகத்திற்குள் அனுமதிக்கின்றீர்கள்’ என பதில் உபவேந்தர் கருணாகரனிடம் கேட்டதிற்கு தனது அலைபேசியை தூண்டித்ததாகவும் மாணவர்கள் கூறியுள்ளனர்.
கிழக்கு பல்கலைகழகத்தின் புதிய உபவேந்தர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பல்கலையில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு ஊடகவியலாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டுவருகின்றது.
இந்த நிலையில் உயிர் நீத்த ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட உறவுகளுக்காக அஞ்சலி செலுத்துவதற்கு வடக்கு மற்றும் மலையக தமிழ் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வைக்கூட பல்கலையின் நிர்வாகத்தின் அனுமதியில்லாமல் செய்யப்பட்டதுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளமை தெரியவருகின்றது.
இதேவேளை, இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை காலை வேளையில் யாழ். பல்கலைகழக ஆசிரியர்கள், பிற்பகல்வேளை யாழ். பல்கலைகழக மாணவர்கள் மிகவும் உணர்வு எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
அது மட்டும் மல்ல விக்னேஸ்வரன் கலந்துகொண்டு ஈகைச்சுடர் ஏற்றி ஆஞ்சலியை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கிழக்கு பல்கலைகழகத்தில் மிகவும் எளிமையாக நினைவேந்தல் நிகழ்வை சமய நிகழ்வுடன் நடத்துவதற்கு தீர்மானித்தபோதும் பல்கலைகழக நிர்வாகம் அனுமதி பெறப்படவில்லை.