கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக முஸ்லீம் இனவாதியான கிஸ்புல்லா ஆளுனராக நியமிக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அந்த வகையில் ஆங்காங்கே சில சில போராட்டங்களும் சில தினங்களாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் 11.01.2018 வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணம் தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்புவிடப்பட்டு கிழக்கு மாகாணத்தின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த அழைப்பு கிழக்கு மக்கள் ஒன்றியம் என்ற பெயரால் விடப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுனர் கிஸ்புல்லா தான் 1990களில் ஓட்டமாவடியில் இருந்த காளிகோவிலை இடித்து அந்த இடத்தில் மீன் சந்தை கட்டியவன் என்பது குறிப்பட்டத்தக்கது.