புதிய வெளிச்சம் அமைப்பின் அனுசரணையுடன் இயற்கைவழி இயக்கத்தின் ஏற்பாட்டில் இயற்கைவழி விவசாய வாரமாகப் இம்மாதம் 08 ஆம் திகதியை முதல் 14 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வாரத்தில் வடக்கின் சகல மாவட்டங்களிலும் இயற்கைவழி ஆர்வலர்களின் பங்கெடுப்புடன் பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ளன.
அந்தவகையில் நாளை [08.01.2019 ] (செவ்வாய்க்கழமை ) அன்று மன்னாரில் தட்சணமருதமடுவில் பண்ணைப் பெண்கள் அமைப்பின் ஒழுங்கமைப்பில் காலை 9 மணி முதல் 1 மணிவரையும் . 09.01.2019 (புதன்) அன்று வவுனியா தாண்டிக்குளத்தில் அமைந்துள்ள இலங்கை விவசாயக் கல்லூரியில் காலை 10 மணி முதல் 1 மணி வரையும் . 10.01.2019 (வியாழன்) அன்று கிளிநொச்சி நகரில், கிளிநொச்சி மத்தியகல்லூரி மைதானத்துக்கு எதிரில் காலை 10 மணி முதல் 1 மணி வரைய்யும் ,, . 11.01.2019 (வெள்ளி) அன்று ஜெயபுரம் பல்லவராயன் கட்டில் அமைந்துள்ள இளைஞர் சேவைகள் மன்றத்தின் விவசாயப் பயிற்சிப் பண்ணையில் காலை 9 மணி முதல்1 மணிவரையும் 12.01.2019 (சனி) அன்று மன்னாரில், அடம்பன் பண்ணையில் காலை 10 மணி முதல் 1 மணிவரையும் நிகழ்வு கள் இடம்பெறவுள்ளன . பாடசாலை மாணவர்களிற்கான விழிப்புணர்வு, உள்ளூர் விவசாயிகளுடனான கலந்துரையாடல், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களிற்குரிய அங்காடிகள் அறிமுக நிகழ்வு என்பனவும் மேற்குறித்த நிகழ்வுகளின் முக்கிய அம்சங்களாகும்.
13.01.2019 (ஞாயிறு) அன்று யாழ்ப்பாணத்தில், புன்னாலைக்கட்டுவனில் உள்ள மார்கோசா கிறீன் இல் காலை 10 மணி முதல் 1 மணி வரை இடம்பெறவுள்ள நிகழ்வில் இயற்கைவழி இயக்கத்தின் இணையத்தளம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.டன் 14.01.2019 (திங்கள்) அன்று முல்லைத்தீவு கைவேலியில் அமைந்துள்ள செல்வபாக்கியம் பண்ணையில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நிகழ்வுகள் இடம்பெறும். பாடசாலை மாணவர்களிற்கான விழிப்புணர்வு, உள்ளூர் விவசாயிகளுடனான கலந்துரையாடல் என்பவற்றுடன்இயற்கைவழி உள்ளீடுகள் உற்பத்தி தொடர்பான பயிற்சி என்பன நிகழ்வின் முக்கிய அம்சங்களாகும். மேற்குறித்த நிகழ்வுகளில் அவசியம் கலந்துகொள்ளுமாறு இயற்கைவழி இயக்கத்தின் சார்பில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . மேலதிக தகவல்களிற்குஇயற்கைவழிச் செயற்பாட்டாளர். . கு. வசீகரன் (077 378 8795 அல்லது 075 973 2169) அவர்களைத் தொடர்புகொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் .
“நஞ்சற்ற உணவையே நாடுவோம் – நம்
நிலத்தில் இயற்கைவழி வாழுவோம்.
அஞ்சிடோம், எழுவோம், மக்கள்
ஆரோக்கியமதைக் காப்போம்.”
யாழ் .தர்மினி பத்மநாதன்