நிலத்தையும் இழப்பவன் அனைத்தையும் இழப்பதற்கு சமன் ஒரு மனிதன் தான் வாழும் உரிமையினை தீர்மானிப்பதே நிலம் இவ்வறு தமிழர்கள் வாழும் உரிமை ஸ்ரீலங்கா சுதந்திரமடைந்த காலம் தொட்டு பறிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன.
போர் முடிவடைந்த பின்னர் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் கேப்பாபுலவு மண்ணும் ஒன்று அந்த நிலங்களை திருப்பி தருமாறு ஸ்ரீலங்கா அரசிற்கும் ஆதரவான தமிழ் தலைமைகளிடமும் ஏன் கடவுளிடமும் இந்த மக்க்ள முறையிட்டு பார்த்தார்கள்.
கடந்த பத்து ஆண்டுகளாக சொந்த மண்ணில் வாழமுடியாத கவலையுடனும் ஏக்கத்துடனும் காத்pருக்கும் பலர் இன்று கடுமமையான மன அழுத்தத்தினால் நோய்வாய்பட்டு இறந்துள்ள நலையினை அறியமுடிகின்றது.
என்ன நெருக்கடிகள் வந்தாலும் எங்கள் நிலத்திற்கு நாங்கள் திரும்புவோம் என்ற நம்பிக்கையில் 685 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
சொந்த நிலத்தில் வாழத்துடிக்கும் மக்கள் செத்துக்கொண்டு இருக்கின்றார்கள் கேப்பாபுலவு மக்களின் வாழ்வியலும் தற்போதைய நிலையும் அரசியல் காய்நகர்த்தல்களில் முக்கிய புள்ளியாக கேப்பாபுலவு மண் காணப்படுகின்றது.
உயிர்நீர்த்த தமது உறவுகளின் உடலங்களை கூட தங்கள் ஊரில் அடக்கம் செய்யமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
மக்களின் இன்றைய நிலையில் போராட்டத்தை வீச்சாக்கி தங்கள் உரிமையினை கோருவதே அவர்களின் இலக்கா இருக்கின்றது இதற்காக அரசியல் வாதிகள் எவரையும் நம்பவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினை சேர்ந்த திருமதி பிரசன்னா தெரிவிக்கையில்
எமது நிலம் மக்கு வேண்டும் என்ற உரிமைப்போராட்டம் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் கேப்பாபிலவு மக்களாகிய நாங்கள் இனி யாரிடமும் போய் எங்கள் துயர்களை சொல்வது என அங்காலாய்த்துக்கொண்டிருக்கின்றோம் 310 குடும்பங்களில் எமது எதிர்ப்பு போராட்டத்தினையடுத்து இதுவரை 36 குடும்பங்களின் காணிகள் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளது.
எமது வாழ்வின் ஆதாரங்களான கடல்பகதி ,பாடசாலை,பொதுநோக்கு மண்டபம்,வைத்தியசாலை,கூட்டுறவு சங்கம்,போன்றவை இன்னும் படையினரால் கையகப்பட்டுத்தப்பட்டுள்ளதால் எமக்கு பல்வேறு வகையில் சிக்கலாக உள்ளது.
இதுவரை தற்காலிகமாக குடியமர்த்தப்பட்ட இடத்தில் 05 ஆம் ஆண்டுவரை பாடசாலை இயங்கியபோதிலும் அதற்கு மேல் கல்விபயில்வதாக இருந்தால் 2 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள வற்றாப்பளை பாடசாலைக்கே போகவேண்டும் எமது இந்த அவலத்தினை நீக்கவே எம்மோடு இணைந்து குரல் கொடுக்கவோ எவரும் இல்லை என்பதை எம்மை மேலும் வேதனை கொள்ளவைக்கின்றது என்று கேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரசன்னா ஆதங்கத்துடன் மனது மன வேதனையினை தெரிவித்துள்ளார்.(Copy)