முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகப்பழமையான வரலாற்று பாரம்பரியம் மிக்க கிராமமான குமுழமுனையில் 21 தலைமுறையாக சித்தவைத்தியத்தை சிறப்பாக செய்து வந்த சித்த வைத்தியர் செல்லையா சாமிநாதன் அவர்களின் வரலாற்றையும் கிராமத்தின் வரலாற்றினையும் ஆவண திரைப்படமாக தயாரித்து 20.01.19 அன்று குமுழமுனை மகாவித்தியாலயத்தில் வைத்து வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது.
ரி.திவாகர் இயகத்தில் உருவான இந்த ஆவணப்பட வெளீட்டில் முதன்மை விருந்திரனராக யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறை தலைவர் கலாநிதி எஸ்.ரகுராம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக குமுழமுனை பாடசாலை அதிபர் க.ஜெயவீரசிங்கம்,கரைதுறைப்பற்று கோட்டக்கல்விப்பணிப்பாளர் த.சிறிபுஸ்பநாதன்,வைத்தியர் ச.சந்திரபாலன்,
முன்னாள் வடமாகண விவசாய அமைச்சர் க.சிவனேசன்,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் அவர்களும்,
கௌரவிருந்தினர்களாக துணுக்காய் பிரதேச முன்னாள் பிரதிக்கல்விப்பணிப்பாளர் சி.இராஜேஸவரன், உடுப்பிட்டி அமெரிக்க மிசன் கல்லூரி அதிபர் சு.கிருஸ்ணகுமார்,முன்னாள்அதிபர் ந.விஜயகுமார்,கலைமகள் வித்தியாலய அதிபர் ம.கமலகாந்தன்,பிரதேச சபை உறுப்பினர் இ.கவாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு ஆவணப்படத்தொகுப்பினை வெளியீட்டு வைத்துள்ளார்கள்.
குறிப்பு:>