இன்றைய நவீன யுகத்தில் அதனதன் மாற்றங்களுக்கு மாற்றங்களுக்கு அமைய பலரது வாழ்வின் அன்றாட அங்கமாக மன அழுத்தம் மாறிவிட்டது. என்றால் மிகையாகாது. அது குடும்பம், தொழில், சமூக அல்லது பொருளாதார செயற்பாடுகளிலும் சரி கட்டாயம் ஏதேனும் சந்தர்ப்பத்திலும் மன அழுத்தத்தினை உணர்கின்றனர். இது தவிர்க்க முடியாத ஒன்று என்பதுடன். பாரிய ஆய்வுப்பிரச்சனையாக காணப்படும் தலைப்பு என்றால் மிகையாகாது. இவ்வகையில் மனிதர்கள் எல்லோரும் கல்வி எனும் செயற்பாட்டை வாழ்வின் அன்றாட செயற்பாடாக கொள்கின்றனர். வாழ்நாளில் சுமார் 25 வருடங்கள் இதற்கென செலவிடப்படுகின்றது. கல்வியியல் செயற்பாடுகளிலும் மன அழுத்தமானது பாரிய வகிபங்கினை வகிக்கின்றது.
இவ்வகையில் கல்வி சார் மன அழுத்தத்தினை புரிந்து கொள்வதன் முன்னர், மனஅழுத்தம் என்றால் என்ன என்பதனை அறிய வேண்டும். Auerbach & Grambling 1998 இல் ‘தனியனின் அன்றாட செயற்பாடுகளிலும், வாழ்வினை சமப்படுத்தி கொண்டு செல்வதற்கும் இடையூறாகவும், அச்சுறுத்தலாக உள்ளவற்றினை கூறலாம் என்கின்றனர்.
‘ஓரு சூழலினை சமாளிக்க அல்லது முகம் கொடுக்க முடியாத போது தனியனின் எழும் எதிர்மறையான மனவெழுச்சி அறிகை, நடத்தை, மற்றும் உடலியல் சார் செயற்பாட்டினை மன அழுத்தம் என Bernstein, et.al 2008 இல் குறிப்பிட்டு இருந்தார்.
எவ்வகையில் மன அழுத்தம் எனபது ஓரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தனியனது உடல், உள இயல்பினை பாதிக்கும் வகையிலும் அச்சுறுத்தும் வகையில் காணப்படும் போது அவ் தூண்டிக்கு எவ்வாறு துலங்குகின்றான். என்பதனை அப்போது அவனில் எழும் உளவியல், உடலியல், மனவெழுச்சி ரீதியான நடத்தை வெளிப்பாட்டினை குறித்து நிற்கின்றது. இனி கற்றல் என்பது தனியன் ஒருவன் தன் வழக்கமான பாடசாலையிலும், பல்கலைக் கழகங்களிலும் வேறு இடங்களிலும் அவன் பெறுகின்ற கல்வி, திறன் அனுபவத்தினை கற்றலாக பலர் கொள்கின்றனர். ஆன போதிலும் உளவியலினை பொறுத்தவரை நடத்தையில் நிரந்தர மாற்றத்தினை கொண்டு வரும் எவ்விதமான செயற்பாடுகளும் கற்றல் எனக்கருதுகின்றனர். இவ்வகையில் நாம் பெறும் கற்றலின் முடிவுகளாக அறிவு, திறன், மனப்பாங்கு வளர்ச்சி பெறப்படுகின்றன. இவ்வகையில் மனிதனது கற்றலானது குடும்ப மற்றும் இதர அமைப்புக்களினை விட குறிப்பிட்ட கல்வி சார் நிறுவனங்கள், செயற்பாடுகளின் வாயிலாக செயற்படுத்தப்படுகின்றது. இவ்வகையில் கற்றல் சார், மனஅழுத்தம் எனும் பதம் மனித உயிரினத்திற்கானதாகவே பொதுவாக நோக்கப்படுகின்றது.
Wilks 2008 என்பவர் ‘கற்றல் சார் மனஅழுத்தம் மாணவர்களை அழுத்தம் ஓர் விடயமாகவும், இது மாணவர்கள் தம் கற்றலின் ஒவ்வொரு படிநிலையை கடக்கும் போது வேகமான உலக நகர்வின் காரணமாக கற்றல் சார் கேள்;விகளுக்கும் வினைத்திறன் எதிர்பார்ப்புக்களினை நிவர்த்தி செய்யும் வளங்களினை விட தனியனிடம் திறன் காணப்படாத இடத்து, தனியனின் இருப்பு வளங்களினை விட எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் போது அவ்கற்றல் சார் மன அழுத்தம் எழுகின்றது. இதனைப்போல் பெற்றோர், ஆசியர், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், வீட்டு வேலை சுமை, தற்போதைய கற்றல் மற்றும் பரீட்சை முறைமை என்பவற்றில் இருந்து எழும் கல்விசார் சூழ்நிலைகளினை குறித்து நிற்கின்றது. என கல்வியல் உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Gupta & khan 1987 இல் ‘கற்றல் சார் மன அழுத்தம் என்கின்றனர். கல்வி சார் சூழ்நிலையினை நெருக்கடி என உணரும் அளவு மாறுபாடுகள் தனியனை சார்ந்துள்ளது ஏனVD Zeinder (1992) குறிப்பிட்டுள்ளார். கல்வி சார் சூழ்நிலைகளினை ஏற்றுக்கொள்ள, அதற்கமைய இசைவாக்கம் அமைய முடியாத போது ஒருவரில் எழும் தடுமாற்றம் கற்றல் சார் மன அழுத்தம் என Keinan & perlberg (1986) இல் குறிப்பிட்டுள்ளார்.
ஆக மொத்தத்தில் கற்றல் சார் மன அழுத்தம் இனை வரையறுக்கும் யுஉயனiஅiஉ என்ற பதத்தில் கற்றல் சார் நிறுவனங்கள், செயற்பாடுகள், முறைமைகள் அதனை கற்றல் சார் செய்பாடுகளில் இருந்து எழும் கேள்விகள், எதிர்பார்புக்களை அழுத்தத்தினை, சூழ்நிலையினை எதிர்கொள்ள, அதற்கேற்ப இணைந்து செயற்பட முன்னேறி செல்ல முடியாத வகையில் காணப்படும் உடல், உள, நடத்தை சார் எதிர்மறையான துலங்கல்களினை கற்றல் சார் மனஅழுத்தம் எனலாம்.
மன அழுத்தத்தினால் ஏற்படும் பல்வேறு வகைகளினை போலவே இன்றைய காலத்தில் பலதரப்பட்ட சுமார் ஆண்டுக்கு இரண்டாயிரம் வரையிலான ஆய்வுகள் கற்றல் சார் மன அழுத்தத்தினை பற்றியதாகவே காணப்படுகின்றது. இதனை கொண்டு நாம் இது பற்றிய விழிப்புணர்வு எவ்வளவு அவசியம் என்பதனை காணலாம். உலக சுகாதார அமைப்பின் படி கற்றல் சார் மனஅழுத்தம் அதிகமாக பல்கலைக்கழக குறிப்பாக பட்டதாரி கற்கையில் அதிகமாகவும், ஆண்களினை விட பெண்களே அதிகம் உணர்வதாக அறிக்கையிடப்பட்டுள்ளது அதனை sreerama reddy et.al 2007. sapru 2006 இல் அவர்களின் ஆய்வுகள் நிருபித்தும் உள்ளன.
மாணவர்களில் குறிப்பாக இலங்கையில் புலமைபரிசில் மாணவர்களில் அதிகம் ஏற்படுகின்றது அதற்கென பெற்றோர் 3 வயதில் இருந்தே பிள்ளையில் கல்வியில் சார் அழுத்தங்களை பிரயோகிக்கின்றன. சரியான வகையில் அதனை கையாளவிடத்து கற்றலின் மீதான வெறுப்பு ஆளுமை சிதைவு என்பன ஏற்பட்டு எதிர்காலம் வீணடையும். இவ்வகையில் இவ் ஆக்க கட்டுரையில்
– கற்றல் சார் மன அழுத்தத்திற்கான காரணிகள்.
– இதனால் ஏற்படும் விளைவுகள்.
– எவ்வாறு இவற்றினை கையாளலாம் என்பதனை குறித்து எடுத்து காட்டுவதாக காணப்படுகின்றது.
இவ் காரணிகளில் முதலாவது நோக்க வேண்டியது தனிநபர் காரணியாகும். இதில் முக்கியமான இடத்தினை பெறுவது. மாணவரது புலக்காட்சியாகும். ஒரு மாணவன் அழுத்தமாக உணரும் சூழ்நிலையானது இன்னோரு மாணவனிற்கு சாதாரணமான சூழ்நிலையான கொள்வான். மேலும் மாணவனது ஆயத்த நிலையும் அடுத்த காரணியாகும். கற்றல் சார் சூழ்நிலையில் கற்றல் சார் அனைத்து செயற்பாடுகளிலும் மாணவனது ஆயத்த நிலைப்பாடு முக்கியமாக பங்கு வகிக்கின்றது.
தனியனை உள்வாங்கிய குடும்ப காரணியும் மாணவனது கற்றல் சார் மனஅழுத்தத்திற்கான முக்கிய அமைப்பாக உள்ளது. இதில் பெற்றோர்கள் பிள்ளைக்கான அடிப்படையான தேவையான, உணவு, அன்பு, பொருளாதார வளம், கல்வியினை சரிவரகற்பதற்கான வளங்கள் குடும்பத்தில் காணப்படுதல். என்பன போன்ற பல விடயங்கள் அடிப்படை தேவையினுள் அடங்குகின்றது. கூறப்போனால் மாஸ்லோவின் முதலாவது படியாகும். மற்றைய காரணிகளாக, பெற்றோரின் எதிர்பார்பினை பிள்ளையில் அவர்களினால் ஏற்படுத்தப்படும் அழுத்தம் முக்கிய காரணியாகின்றது. உதாரணமாக தரம் 5 புலமைப்பரீட்சையினை நோக்கலாம் சக பெற்றோர்களில் தாம் சிறப்பாக காணப்பட வேண்டும் என்பதினால் பிள்ளைகளை அதிகப்படியான புள்ளிகளை எடுக்க வைக்க வேண்டும் என்பதினால் பல வந்தப்படுத்துவதனை காணலாம். மேலும் தம் விருப்பிற்கமைய பிள்ளையின் பாடத்தெரிவுகளில் அழுத்தம், இத்தனை புள்ளிகளை பெறவேண்டும், விளையாட்டின் தெரிவு, எந்தநேரமும் புத்தகத்தினை எடுத்து படிக்கவேண்டும், கட்டிளமைப் பருவத்தினை எய்தவுடன் சடுதியாக கூடும் கவனிப்பும், கண்டிப்பும், தடைகளும். போன்ற பலவாறான விடயங்கள் காணப்படுகின்றன. பெற்றோர்களின் கல்வியில் புலமைப்பரிசில், சாதாரண தரப்பரீட்சை, உயர்தரப்பரீட்சை, பல்கலைக்கழக தெரிவு ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று பிள்ளைக்கு மேல் பல்கலைக்கழக தெரிவு, இன்னோரன்ன விருப்புக்களை பிள்ளைகளின் மீது திணிக்கும் போது கல்வி வெறுக்கப்படுகின்றது.
பெற்றோர் இருவரும் தொழிலிற்கு செல்லுதல் அல்லது தமக்கு எழும் வினாக்களை பதிலளிக்க முடியாத வகையில் பெற்றோரின் படிப்பறிவு குறைவாக காணப்படுதல், சக உறவினர்களின் குழந்தைகளுடன், சக சகோதர சகோதரிகளுடன் ஒப்பிட்டு காயப்படுத்தல், தனிக்குடும்பம் பிள்ளை தனக்கு பிரச்சினை எழும்போது மனம்விட்டு அதனை கதைக்கவோ தீர்க்கவோ யாரும் இல்லாபோதும் குடும்ப அமைப்பினுள் பல்வாறான காரணிகள் பிள்ளையில் கற்றலில் பாரிய அழுதத்தினை ஏற்படுத்துகிறது. மேலும் குடும்ப பொருளாதாரநிலை, கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொடுக்க முடியாமை, வீட்டில் இருந்து கற்பதற்கான வசதிக்குறைவு, பாடசாலை, மேலதிக தனியார் வகுப்பிற்கான கட்டணத்தை, கட்ட இயலாமை என்பன Gladys Nakalema. joseph Senyonga என்போரினால்.“Academic stress it’s causes and result at ugandan University” என்ற தலைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் குடும்பத்தின் வறுமை, பொருளாதார குறைபாடுகளின் காரணமாக அதிக மாணவர்கள் பல்கலைக்கழ முதலாம் வருடத்தில் கற்றல் சார் மன அழுத்தத்தினை எதிர்கொள்கின்றனர். என்பது கண்டறியப்பட்டது. இதனை போலவே பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லுதல் போன்றன குடும்பம் எனும் அமைப்பினுள் உள்ள காரணிகள் மன அழுத்தத்தினை ஏற்படுத்துவதற்கு காரணியாகின்றது.
இனி பாடசாலை மற்றும் கல்வி அமைப்பு சார் காரணிகளினை நோக்கினால், பாடசாலையின் அமைப்பு, ஆசிரியரின் எதிர்பார்ப்பு மற்றும்,கற்பிக்கும்முறை, ஆசிரியரின் விருப்பு, ஒரு பாரபட்சம், முற்கற்பிதங்கள், வகுப்பறையில் காணப்படும் போட்டி நிலைமை, ஒப்பீடு, நண்பர்களின் அழுத்தம், பரீட்சை, கால அவகாசம் இன்றிய அட்டவணைகள், பாடசாலையில் காணப்படும், சந்தர்ப்பங்களும் வளங்களும் academic commitments வகுப்பறை, என்பன கற்போனின் புற சுழலில் இருந்து எழும் தூண்டிகளாகவும், கற்போனை சார்ந்த தூண்டிகளாக கற்பவரின் உள்ளமைந்த அறிவின் இருப்பும், முன் அனுபவங்களும் கற்போரின் உயிரியல் தொடர்பான காரணி இதில் அடிப்படை தேவை நிறைவேற்றம், மனவெழுச்சி, கற்போனிடத்தில் காணப்படும் விளக்கம், அடைவுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற உள இயக்கம், கற்போனின் தயார்நிலை, விருப்பம் போன்ற பல்வேறான தூண்டிகளினை குறிப்பிடலாம். இவ்வகையில் இவற்றுக்கு சில உதாரணமாக, பல மாணவர்களிற்கு கணித பாடமும், ஆசிரியர் விருப்பில் சில மாணவர்களை கொண்டு சிலரை மதிப்பிடுதல், பாடசாலையின் வகை என்பன மன அழுதத்தினை கற்றல் ரீதியாக தோற்றுவிக்கின்றன.
கற்றல் சார் மன அழுத்தத்;தினை ஏற்படுத்துவதில் காரணிகளின் பங்கும் உண்டு, இதில் சமூகத்தின் எதிர்பார்க்கைகள், சமூக மதிப்பு, அந்தஸ்து, சாதி, போட்டி நிலைமை, தொழில் வாய்ப்பு, அதனை தெரிவு செய்தல், தொடர்ச்சியான ஒப்பிடு சிலருக்கு மட்டுமான அதிகரித்த வாய்ப்பு, ஊடகம், அயலவர்களின் தலையீடுகள், மேற்கத்தைய கலாசாரத்தின் உடுருவல், நவீன மயமாக்கல், தகவல் தொடர்பு சாதனங்கள், சமூக இருப்புக்கள் இதனுள் பறிப்பும், அவலமும், நெருக்குவாரங்களும், ஒடுக்கு முறைகளும், நிலவும், சூழலில் மாணவர் ஒருவரால் கற்றலை அதன் சார்ந்த செயற்பாடுகளை சரிசர மேற்கொள்ளமுடியாத போது கற்றல் சார் மன அழுத்தம் தோன்றுகின்றது. இதனை தவிர்த்து அரசியல், பொருளாதார கல்வி, கல்விக்கட்டணங்கள்.
உதாரணமாக : இலங்கையில் பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி முறை, போட்டி பரீட்சைகள், Speed semester, பரீட்சையின் போதான அயலவர்களினால் எழுப்பப்படும் ஒலி;, ஒளி சார் பிரச்சினைகளை குறிப்பிடலாம்.
Mckean மற்றும் அவரது சகபாடிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி பட்டதாரி மாணவர்களில் உயர் மன அழுத்தமானது ஒவ்வொரு செயல்களிலும் academic commitments மற்றும் Financial pressure, less management போன்ற காரணிகளினால் அதிகம் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார். Gladys Nakalema, Joseph senyonga என்போர் Financial Hardship, academic overload / time, social expectation என்பவையும் x2 =10, 71 p =03 தூண்டிகளாக உள்ளதினை கண்டறிந்தனர்.
சமூகத்தின் நம்பிக்கைகள், சமூகம் உயர்தர பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் கற்பதனை உயர்வாக கருதுதல் உயர் சமூக தரத்தினை எதிர்பார்த்தல் என்பன கற்றல் சார்மன அழுத்தத்தினை ஏற்படத்துவதனை குறிப்பிட்டு Poor study habbits ஆனது இவ்வகை மன அழுத்தத்தினை குறிப்பாக poor time Management (Macan, Shahani) Poor Study Method for Exam (Baldwin, Wilkinson 2000) Lot of Course work (Rohotham 2008) ஏற்படுத்துவதனை காணலாம்.
கற்றல் சார்மன அழுத்தத்தில் குறிப்பாக கட்புளமை பருவத்தினரிடையே, உடலியல் சார் குறைப்பாடு உடையவர்களில் மற்றும் சாதாரண மாணவர்களிடையே உயிரியல்,உடலியல் சார் காரணிகளின் செல்வாக்கு அதிகமாக காணலாம். அவையாவன உடலியல் குறைப்பாடுகள், மூளைசார் விருத்தியின்மை, சார்ந்திருக்கும் வகையிலான குறைப்பாடுகள் என்பன குழந்தையில் காணப்படும் போது பிள்ளைகற்றல் சார் மன அழுத்தத்தினை அதிகம் எதிர்கொள்கிறது.(cang & huan 2006) இதனைப்போல கட்புளமை பருவத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள், முகப்பரு, பாலுருப்புகளின், உடல் உறுப்புகளின் வளர்ச்சி, எதிர்பாலின கவர்ச்சி, குடும்பத்தில் தீடிரென விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், தம் உடல் தொடர்பான வினாக்கள், பெண்பிள்ளைகளில் மாதவிடாய் காலங்கள், தம் அழகு தொடர்பான எண்ணங்கள் ஹோர்மோன்களின் செயற்பாடுகள் என்பனவற்றின் காரணமாக அவை அவர்களின் கல்வியல் சார் செயற்பாடுகளில் பாரிய மன அழுத்தத்தினை தோற்றுவிக்கின்றது. உதாரணமாக வகுப்பறையில் பிந்திய முந்திய பூப்படைதல்கள், பூப்படைந்த பின்னர் ஆண் பிள்ளைகளுடன் சகஜமாக கற்க, குழு செயற்பாடுகளில் ஈடுபட முடியாமை, நண்பர்களின் சேர்கையினால் ஏற்படும் தீய பழக்க வழக்கங்களை எல்லாம் இங்கு உள்ளடக்கலாம்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக நவீன இணையப் பயன்பாடுகள் குறிப்பாக முகப்புத்தகம், டுவிட்டர் போன்ற வலைத்தளங்களினதும், தொலைக்காட்சிக்கும் மாணவர்கள் அடிமையாகும் போக்கு அதிகரித்துள்ளது.. இவற்றின் காரணமாக மாணவர்கள் மாயச்சூழலில் பின்னப்படுவதனால் கல்வி பின்னடைகின்றது இதனால் கல்வி சார் மன அழுத்தங்களிற்கு இலகுவாக ஆட்படுகின்றனர். இதனை தவிர்த்து இவர்கள் பொழுதுபோக்குவதற்கான ஊடகமாக இவற்றினை தெரிவு செய்வதனால் காலப்போக்கில் அவை நிரந்தரமாகவும் கல்வி சார் செயற்பாடுகள் பொழுதுபோக்கிற்காக செய்வது போன்று மாற்றிவிடுகின்றது.
இதனைப் போலவே ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், குறிப்பாக காலை உணவை தவிர்ப்பதனினால் Caffeine, மோனோ சோடியம் குளுடாமேட் போன்றவை கலந்த உணவுகளை உள்ளெடுத்தல் என்பன மன அழுத்தத்தினை இயல்பாகவே அதிகரிக்கும் இயல்பினை கொண்டவை இன்றைய மாணவர்களிடையே அதிகம் இவ்வகையான உணவுப்பழக்கம் உண்டு என்பதனை காணலாம். ஆகவே அவையும் ஒரு வகையில் காரணமாகின்றது. சிறு குழந்தைகளை ஒரே தொடர் இடைவெளியற்ற அட்டவணையில் கல்வி சார் செயற்பாடுகளினை மேற்கொள்ள செய்வதும் கூட கற்றல் சார் மன அழுத்தத்தினை அவர்களில் தோற்றுவிக்கின்றது. கூறப்போனால் எம் நாட்டில் புலமைப்பரிசில் சிறார்கள் இதற்கான உதாரணமாகும். 2007 இல் Harvard Medical School இன் பேராசிரியர் Seung schickyoo தன் ஆய்வின் மூலம் குறைவான நித்திரையினை சிறார்கள் கொள்ளும் போது மன அழுத்தத்திற்கு உள்ளாவதை நிரூபித்து இருந்தார். மேலும் ஒரே நேரத்தில் பல செயற்பாடுகளை மேற்கொள்ள தூண்டுவது குறிப்பாக படிப்பு, விளையாட்டு, இரண்டையும், சமாந்தரமாக கொண்டு செல்ல முனைவதனை குறிப்பிடலாம்.
இவ்வகையில் 2008 இல் Institionen for beteen deveten skap och Larande இல் wycliffeyumba இனால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் கற்றல் சார்; மன அழுத்தத்திற்கான 33 காரணிகளை இனங்கண்டு அவற்றினை முக்கிய 4 வகைப்பாட்டினுள் உள்ளடக்கினார். சூழல் சார் காரணி, தனிப்பட்டகாரணி, கல்வி சார் காரணி, ஏனையக்காரணி என்பவையாகும். மேற்கூறிய 4 காரணிகளும் தெரிவாக்கப்பட்டுள்ளது.
கற்றல் சார் மன அழுத்தத்தினால் ஏற்படும் உடலியல் சார் விளைவுகளை நோக்கினால் தலைவலி, சமிபாட்டு கோளாறுகள், நித்திரை குழப்பம் (அதிகரித்து / குறைவான) வயிறு இறுக்கம், வயிற்றோட்டம், சுவாக கோளாறு, கை,கால் வியர்த்தல், இதயதுடிப்பு, அதிகரித்தல், தலைமுடி கொட்டுதல் முகத்தில் பருக்கள் தோன்;றுதல், சிலவேளைகளில் இவையெல்லாம் இருப்பது போன்ற மெய்ப்பாட்டு கோளாறு என்பனவும் தோன்றவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. உதாரணமாக பரீட்சைக்காலத்தில் வயிற்றுப்போக்கும், சிலருக்கு முன்னால் வரச்சொன்னவுடன் கை, கால், நடுக்கம், வியர்வை போன்றனவும், அண்மை காலங்களில் ஆசிரியர் தண்டிப்பதனால், சகமாணவர்களுடனான முரண்பாடுகளுடனும், கற்றல் சார் மன அழுத்தத்தினை கையாள முடியாத பல மாணவர்கள் தற்கொலை, பாடசாலை இடைவிலகல்கள், சமூக விரோத செயல்கள், கல்வி பின்னடைவு, ஆரோக்கியமற்ற சமூகம், இதனையே வழிவழியாக கடத்தும் பரம்பரை என்பனவற்றை சமூக ரீதியான விளைவுகளாக ஏற்படுகின்றது.
கற்றல் சார் நெருக்கீடுகளானது மேற்பரப்பான உடலியல் சாரந்த விளைவுகளோடு கட்டாயம் உளவியல் சார்ந்த விளைவுகளையும் ஏற்படுத்துகின்றது. Averbach & Gramling 1998 இல் உடலியல் சார் விளைவுகளானது கட்டாயம் மனவெழுச்சி மற்றும் பதகளிப்பு உடன் தொடர்புபடுகின்றது எனக்குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில் உளவியல் சார் விளைவுகளாக பதகளிப்பு, கவனச்சிதைவு, மறதி, நடத்தையில் மாற்றம் அதாவது அவ்வாறான சூழ்நிலையினை தவிர்த்தல், மெய்ப்பாட்டு கோளாறுகளை முன்வைத்தல், உளச்சோர்வு, எரிச்சல் தன்மை, மனநிலை குழப்பங்கள், கூச்சசுபாவம், வாய்திக்குதல், கற்றவற்றினை நனவுப்பரப்பிற்கு கொண்டுவர முடியாமை, Poor Judgement, ஒழுங்கமைப்பின்மை, சுயமதிப்பு குறைதல், ஆர்வம் மற்றும் தன்னார்வம் இல்லாது போதல் புரிந்து கொள்வதில் சிரமம், எதிர்மறையான பேச்சு, சிந்தனை, தர்க்கரீதியான செயற்பாடுகள் என்பன உளரீதியாக தோன்றுகின்றது. உதாரணமாக பரீட்சை காலங்களில் எரிச்சல், சிறு விடயங்களிற்கும், கோபப்படும் தன்மை காணப்படுதல். நடத்தையில் மாற்றம் எனும் போது எனது நண்பி ஒருவர் கற்றல் சார் மன அழுத்தம் குறிப்பாக பரீட்சை காலங்களில், தன் கண்ணிமையை ஒவ்வொன்றாக பிரித்தெடுப்பார், ஆசிரியர் தினமும் தண்டிக்கும் போதும் இதே நடத்தை காணப்படும். இதனால் அவர்க்கு கண்ணில் இமை இல்லை. இது போல் நகம் கடித்தல், சிறுநீர் பெய்தல் (படுக்கையில், பொது இடங்களில்) நித்திரையில் எழுதல் போன்றவற்றை புலமைப்பரிசில் மாணவரிடையேயும் காணலாம். இதனை Chambell & Svenson 1992 இல் உயர் மனஅழுத்த கல்வி நிலையானது கல்விசார் செயற்பாடுகளில் மற்றும் மாணவர்களின் ஆரோக்கியத்தில் எதிரான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் தொழிற்படுகின்றது என்றார். மேலும் கல்விசார்வெற்றிக்கும் தொழில் வாழ்க்கைக்கும் முட்டுக்கட்டையாக அமைகின்றது.
பெற்றோர், குடும்ப உறவுகளிடையே சக நண்பர்கள், இடையே ஒரு முரண்பாட்டு நிலையினை தோற்றுவிக்கின்றது. பலரது இவ் மனஅழுத்தத்தின் காரணமாக பித்துநிலையினை எய்திய நிலைமையும் உண்டு பல மாணவர்கள் சமூக விரோத, தீய வழிகளினை தேர்ந்தெடுப்பதுண்டு. பின்வாங்கும் இயல்பு, பாதுகாப்பற்ற உணர்வு. தனக்கான உதவியே இல்லை என்ற எண்ணப்பாடு, Performance களில் பங்குபற்றாமல் ஒதுங்குதல், கல்வி, தொழில், திருப்தி இல்லாது போதல், வெட்கம் மற்றும் குற்ற உணர்வு, நேரமுகாமைத்துவத்தில் சிக்கல், கல்விசார் நிறுவனங்களிற்கு செல்லும் வரவு குறைதல், நேர்முக அறைகூவல்கள் ஏற்க தயங்குதல், கல்வி சார் மன அழுத்தத்தினை குறுக்கு வழிகளில் கையாள முனைதல்.
குறிப்பிட்ட காலத்தினுள் மீண்டும், மீண்டும் உணரப்படும் மன அழுத்தத்தின் காரணமாக மூளையின் சுரப்பிகள், ஹோல்மோன்களின் இயல்பில் மாற்றம் ஏற்படுகின்றது. இதனால் மூளையில் குறிப்பாக Frontal Lobe பாதிப்படைகின்றது. இதனால் அதிகரித்த தவறுகள் ஏற்படுகின்றன. மேற்படியான பல எதிரான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. என்றால் மிகையாகாது.
மன அழுத்தமானது நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றது. சாதாரணமாக மன அழுத்தம் ஏற்படும் போது எம்மில் Flight, fly, freeze எனும் நடத்தைகளை தோற்றும், இவ்வகையில் கற்றல் சார் மனஅழுத்தம் ஏற்படும் போது மாணவன் ஒருவன் சரியான வகையில், ஊக்கமாக செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். மேலும் எம்மை என்றுமே விழிப்பு நிலையில் வைத்திருக்கும் எவ்வளவு பாரிய செயற்பாடாயினும் செய்து முடிக்கும் விருத்தியினையும் வழங்கும். Dodson law இன் பிரகாரம் கல்வியில் சிறு பரீட்சை பதகளிப்பு காணப்பட்டால் தான் அடைதல்களினை உயர்வாக பெறலாம் எனக்கூறியுள்ளார். மூளையானது எழுச்சி நிலையில் காணப்படுவதினால் தொடர் செயற்பாடுகளை ஏற்படுத்தும். மன அழுத்தமானது சாதாரண அளவில் காணப்பட்டால் மட்டுமே மேல்கூறப்பட்ட நன்மைகளை தரும். உயர்வான நிலைமைய எட்டும் போது உளநோய்களான பதகளிப்பு, பீதிநோய், OCD, Depression என்பவற்றையும் ஏற்படுத்தும்.
கற்றல்சார் மனஅழுத்தத்தினை சமாளித்தல் என்பது தளியாளிடையே முதன் முதலில் ஏற்படுத்த வேண்டியதொன்றாகும். Mckean et.al 2000 இல் கற்றல் சார் மனஅழுத்தமானது தூண்டல் காரணிகள், தனியாளின் புலக்காட்சி, மனஅழுத்தி தூண்டிகளிற்கு தளியாளின் துலங்கள் எனும் மூன்றினது இடைவினை ஏற்படுவதாகும். ஆகவே கற்றல்சார் மனஅழுத்தத்தினால் ஏற்படும் விளைவுகளை குறைப்பதனை விட மேற்கூறிய மூன்றிலும் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும். என் முன்வைத்தார். Transactional model of stress and coping ஆனது 1977 இல் lazarus & cohen முன்வைக்கப்பட்டது.இதன் பிரகாரம் தனியாள், சூழலிடையே மாற்றங்களை ஏற்படுத்துவதன் வாயிலாக மனஅழுத்ததினை குறைக்கலாம் என முன்வைத்தார்.
இவ்வகையில் நாம் சிகிச்சை அல்லது கையாளுவதற்கு முன்னர் நாம் இவ்வகை மன அழுத்தத்திற்கு ஆட்பட்டிருக்கின்றோமா என்பதனை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அதற்கென students Academic stress scale இனை பயன்படுத்தலாம். இதனை தவிர்த்து ஆசிரியர், பெற்றோர், மாணவர்கள் இவ்விடயம் தொடர்பாக சுய அறிவினை பெற்றிருத்தல் அவசியமாகின்றது. மனஅழுத்தமானது பொதுவாக உடலியல் அறிகுறிகளை உளவியல் அறிகுறிகளினை கொண்டே அடையாளப்படுத்தலாம். இதில் தளியாள் எவ்வாறு அதனை உணர்கின்றான் எவ்வாறு அதற்கான நடத்தையினை காட்டுகின்றான் என இரண்டு விடயங்கள் உண்டு. ஆனால் இவை தனிநபரிடையே வேறுபடகூடும். இதனை Social Readjustment Rating scale (SRRS) (Holmes & Rahc 1967) பயன்படுத்தலாம். முன்னர் கூறப்பட்ட விளைவுகளை பிள்ளையில் கண்டால் பிள்ளையானது கற்றல்சார் மன அழுத்தத்தில் பாதிப்புற்று இருப்பதனை காணலாம்.
மாணவர்களின் மத்தியில் Academic stress இனை உணரும் சந்தர்ப்பங்களில் பல சமாளித்தல் திறன்கள் இயல்பாகவே எழுகின்றன. அவை நேரான, எதிரான, வகையிலும், காண்பபடும் என fontana 1995, good Brophy 1986 தம் ஆய்வுகளிள் குறிப்பிட்டுள்ளனர். அதில் தீமையான வழியில் அதனை சமாளித்தலில் போதைப்பொருள், மதுபானம், அதிகமாக, குறைவாக உணவினை, உட்கொள்ளுதல், நித்திரை மாத்திரைகளினை உபயோகித்தல், இவ்வகையான சூழலினை முற்றுமுழுதுமாக புறக்கணித்தல், முரண்பாடான நடத்தைகளை மேற்கொள்வதன் வாயிலாக தவிர்த்தல், சிலவேளைகளில் தற்கொலையும் செய்து கொள்ளல் என்பவற்றை குறிப்பிட்டுள்ளார்.
நேரான வகையினால் சமாளிக்கும் திறன்களாக ஏற்றுக்கொள்ளல், திட்டமிடல், நேரான எண்ண சிந்தனைகள் கட்டாயம் மாணவரிடையே காணப்பட்டால் தான் கற்றல் சார் மன அழுத்தத்தினை எதிர்கொள்ளலாம். என Sreera mareddy குறிப்பிட்டுள்ளார். இதனை தவிர உண்மையுள்ள அடையக்கூடிய இலக்குகளை முன்வைத்து செயற்படுதல், இலக்கினை எட்டியவுடன் வெகுமதியினை வழங்குதல், பரீட்சை காலங்களினை தவிர்த்து எந்தநாளும் Revision மேற்கொள்ளுதல், Organization of Materrials, வகுப்பறையும் முழுக்கவனம் செலுத்துதல், குறிப்புகளை எடுத்தல் என்பவையினை நேராக கையாளும் முறைகளாக குறிப்பிட்டுள்ளனர். மாணவர்கள் தவறான வழிகளில் கைக்கொள்வதினை தவிர்ப்பதில் பெற்றோர், ஆசிரியரது உதவி தேவைப்படுகின்றது. பெற்றோர் ஆசிரியர் தம் எண்ணப்பாடுகளை புகுத்துவதனை தவிர்த்து அவர்களையே தெரிவு செய்து அதில் முன்னேற இடமளிக்க வேண்டும்.Passer & Smith (2007) என்போர் சரியான கல்வியியல் சார் தொழில் வல்லுனர்கள், மாணவர்களில் கற்றல்சார் அழுத்தத்தினை மாணவர்களே கையாள அவசியமாகும் என்கின்றனர்.
Campbell & Svenson என்போர் வினைதிறனான கற்றல் நுட்பங்களையும், பழக்க வழக்கங்களையும் கற்றல் சார் இடர்பாடுகளின் போது பயன்படுத்தப்பட வேண்டும் என்றார். மாணவர்களினது விருப்ப தெரிவுகளுக்கு முக்கியதுவம் கொடுக்கப்படுதல் வேண்டும். இதற்கு எல்லாம் மேலாக கற்போனிடத்தில் சிறந்த நேர முகாமைத்துவம் காணப்பட வேண்டும் இதனுள் நேரத்திற்கு செயற்பாடுகளை செய்தல், செய்ய வேண்டியவற்றினை சரியான வகையில் அட்டவணைப்படுத்தல், தயாரித்தல், தயார்ப்படுத்தப்படும் அட்டவணை நல்ல பொழுதுபோக்கு அம்சங்களினை உள்ளடக்கியதாக காணப்படவேண்டும். பரீட்சைக்கு முதல் நாள் கற்றலினை தவிர்த்தல் வேண்டும்.
UC Barkley என்பவர், கடந்த ஆண்டுகளில் மாத்திரம் 45% பட்டதாரிகள் இவ் கல்வி சார் மன அழுத்தத்தினால் மனவெழுச்சி ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். என அறிக்கையிட்டுள்ளார். இதற்கான காரணியாக ஆரோக்கியமற்ற நடத்தையினை குறிப்பிட்டுள்ளனர். எல்லா வயது மாணவர்களும் காலை உணவினை உள்ளெடுத்தல், சிறிது நேரம் உடற்பயிற்சியை மேற்கொள்ளுதல், என்பவற்றோடு முகப்புத்தகம் போன்ற வலைத்தளங்கள் தொலைக்காட்சிகளை அதிகம் பார்ப்பதனை தவிர்க்க வேண்டும். அவை ஒரு போதும் ஆரோக்கியமான பொழுதுபோக்காக மாறாது. இதற்கு மாற்றீடாக புத்தகம், பத்திரிகை படித்தல், விளையாட்டுஈ தோட்ட வளர்ப்பு என்பனவற்றை மேம்படுத்த வேண்டும்.
கல்வியியல் சார் மனஅழுத்தமாக உணரும் போது கட்டாயம் இடைவெளி ஒன்றினை எடுத்தல் வேண்டும். மூளையின் ஓய்வின்மையும் ஒரு காரணி என்பதனை நாம் அவதானித்தோம். ஆகவே நேரத்திற்கு இரவில் நித்திரை கொள்ளுதல், சுமார் 7 மணித்தியாலங்கள் அவசியமாகின்றது. தொலைப்பேசி, தொலைக்காட்சியினை அதிகம், அதிலும் அருகில் இருந்து பார்ப்பதனை தவிர்க்க வேண்டும் ஏனெனில் அவை கண், நித்திரை குழப்பங்களை ஏற்படுத்திவிடும்.
Stittelman எனும் psychotherapist பல மாணவர்களினை மன அழுத்தத்தில் இருந்து மீட்ட அமெரிக்காவின் பிரபல மருத்துவர் இவர் Take a time for Self – care , Learn to change your thinking , take assignment one baby step at a time, Lower your goal, stay balanced during your exam periods எனும் ஐந்து விழிமுறைகளினை கொண்டு இலகுவில் கல்விசார் மன அழுத்தத்தினை கையாளலாம் என குறிப்பிட்டுள்ளார். மாணவர்கள், பெற்றோர், தம்திறமை, அறிந்து அதனை கொண்டு செயற்பட வேண்டும். மேலும் தன் சிந்தனையே தனக்காக மன அழுத்தத்திற்கான காரணியாகின்றது. ஆகையால் சுயமதிப்பு, நல்ல நேரான சிந்தனைகள் கட்டாயம் அவசியமாகின்றது.
இதனை போலவே நல்ல சுநடயஒயவழைn வுநஉhnஙைரநள இனை பயன்படுத்தலாம். அதில் தியானம், யோகா போன்றவற்றினை கைக்கொள்ளலாம். இதனை தவிர பெற்றோர் ஆசிரியரது பங்களிப்பு அளப்பரியது. அவர்களுக்கு உதவவேண்டிய பொறுப்பு அவர்களுடையதே, மாணவர்களினது திறமையும், விருப்பினை கொண்டு மேம்படுத்தல் வேண்டும் குறிப்பாக உடல், குறைபாடுகளை கொண்ட குழந்தைகளிற்கு விஷேட வள, முயற்சி, கவனம் அவசியமாகின்றது.
இவ்வகையில் முன்னர் விளைவுகளில் குறிப்பிட்டிருந்ததன் படி கற்றல் சார் அழுத்தமானது நன்மையான, தீமையான விளைவுகளை ஏற்படுத்தவல்லது. இவ் கட்டுரையில் அதிகம் அவை ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகள், கையாளும் முறை குறித்தே எடுத்து கூறப்பட்டுள்ளது. ஏனெனில் இயல்பு நிலையில் இருந்து சிறிது எப்போதேனும் எழும் கல்விசார் மன அழுத்தத்தினை விட பிள்ளைகள் அதிகமாக எந்நேரமும் கல்விசார் மன அழுத்தத்தினை உணர்கின்றனர். ஆகவே அதிகமாக இதனை எதிர்மறையானதாகவே நோக்கப்படுகின்றது.
இவ்வகை மன அழுத்தத்தினை சரியான வகையில் கையாள்வதன் மூலம் அதனை நிவர்த்தி செய்து சாதனையை எட்டலாம்.
Reference
Cullen, Lisa. “Stress Makes you stupid”; Time.com. N.P., 6 Aug. 2007, (Web Resource).
Beilock.S.L.(2008); “Math Performance in Streesful situation current Directions in psychological science; 17, 339 – 343.
Gladys Nakalema, joseph Senyonga, “ Academic stress It’s causes and Result at ugand’ Africa Journal of teacher Education, Vol.03, No : 03
Gerdi, weidner, carl – warlter kohlmanna, Elke Dotzauers Lawrence R.Burns, “ The ettects of academic stree on Health behaviors in young adults, Journal at Anexty stree & coping, Vol 09, 1996.
Adre.R. cbhen, N, (1993)> “ Psychoneuroimmunology conditioning and stree.Aunal review of psychology, 44 : 53 – 85 (Web med)
Sigurd w. hystad, jarle Eid jon.C. Laberg “ Academic stress and health, Exploring the moderating role of personality Hardiness” Journal of Scandinavian journal of Educational Research vol.53. 2009.
Sarita, Sonia, “Academic stress among students. Role and Responsibilities of parents”, International Journal of applied research 2015, 1(10) ; 385 – 388
Krishan Lal, “Academic stress Among Adolescent in relation to Inteligence and demographic factors, American Internation Joural of Research in Humanities, Arts and social sciences, issn 2328 – 3739 (http:// www iasir.net)
Smritikana mitra ghosh, “Academic stree among government and private high school students” , The International Journal of Indian Psychology, vol, 03, January march 2016.