தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான மன்னார் மடுப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை 29/01/2008 அன்று பிற்பகல், வழமைபோல் பேரூந்தில் சென்ற சிறுவர்கள் பிற்பகல் பாடசாலை முடிந்ததும் இலுப்பக்கடவையிலிருந்து மடு நோக்கிச் சென்று கொண்டிருந்த அதே பேரூந்தில் ஆனந்தமாக வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர், பேரூந்து மடுவை அண்மித்ததும், 2.25-2.30 மணியளவில் சிறீலங்கா ஆழ ஊடுருவும் அணியினரால் இப்பேரூந்தின் மீது கிளைமோர்த் தாக்குதல் நடாத்தப்பட்டது. இதில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்ககள், பாடசாலைச் சிற்றூழியர்கள், மருத்துவ உதவியாளர்கள், பேரூந்தின் ஓட்டுநர், பேருந்தின் நடத்துனர், மடுத்தேவாலய உழவூர்தி ஓட்டுநர் உட்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். 13 மாணவர்கள் உள்ளடங்கலாக 21பேர் படுகாயமடைந்தனர்.
இத்தாக்குதல் நடைபெற்ற சில நிமிடங்களில் தள்ளாடி முகாமிலுள்ள இராணுவத்தினர் அப்பகுதி நோக்கி எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர். இதனால் பெரும் சிரமங்களின் மத்தியிலேயே அப்பகுதி மக்கள் படுகாயமடைந்தவர்களை பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின் அங்கிருந்து உடனடியாக முழங்காவில் வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தவர்களை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். இவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் 3 மாணவர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டவர்களில் ஜெனிஸ்ரன் பீரிஸ் என்ற சிறுவன் பெப்ரவரி 3ஆம் திகதி உயிரிழந்தார். மேலும் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட பாடசாலை அதிபர் பெப்ரவரி 5ஆம் திகதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்தது.
கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்கள்:-
01.மேரி ஜோசப்பின், பெண், 31, பொதுமகன்
02.றீற்றா, பெண், 39, மடு மருத்துவமனைத் தாதி
03.கி.ஜெராட், ஆண், 32, சாரதி
04.சுரேஸ், ஆண், 25, நடத்துனர்
05.ராஜசூரியன் அரசி, பெண், 37, கல்வித் திணைக்கள ஊழியர்
06.சுந்தரம், ஆண், 61, மடு மருத்துவமனைக் காவலாளி
07.சத்சன், ஆண், 11மாணவன்
08.கு.பேஸ்மன், ஆண், 11, மாணவன்
09.சு.பேணாட் ஜோர்ச், ஆண், 16, மாணவன்
10.பே.யூட் கொண்ஸ்ரன், ஆண், 16, மாணவன்
11.பே.ஜெனி ஆண் 13மாணவன்
12.ப.ஜனார்த்தன், ஆண், 13, மாணவன்
13.மில்ரன், ஆண், 16, மாணவன்
14.யொ.புருனோஸ், ஆண், 13, மாணவன்
15.யொ.பறீற்ரோ, ஆண், 15, மாணவன்
16.றொசான், ஆண், 12, மாணவன்
17.பி.சமசன், ஆண், 16, மாணவன்
18.அ.ஜெனிற்ரன் பீரிஸ், ஆண், 12, மாணவன்
19.கோ.லம்பேட், பெண், 51, பாடசாலை அதிபர்
காயமடைந்தவர்களின் விபரங்கள்:-
01.கு.வியூலின், பெண், மாணவி
02.ர.தர்சிகா, பெண், 16, மாணவி
03.பி.மதுசாளின், பெண், 16, மாணவி
04.அனித்தா பெண், 16, மாணவி
05.யுதர்சிகா, பெண் 12, மாணவி
06.கு.தர்சிகா, பெண், 13, மாணவி
07.பொ.புன்சிற்ரா, பெண், 16, மாணவி
08.தே.டியு.ஸ்லஸ், ஆண், 15, மாணவன்
09.மா.கிருசாந், ஆண், 8, மாணவன்
10.ருசிற்றா, பெண், 38, ஆசிரியர் காணொளி
11.யுகிலா, பெண், 35, ஆசிரியர்
12.அருட்சகோதரி நிர்மலா ரஞ்சினி, பெண், 36, ஆசிரியர்
13.கு.குணசீலி, பெண், 45, ஆசிரியர்
14.ஞானசூரியர், ஆண், 35, தபால் ஊளியர்
15.ஜசிற்ரா பெண், 55, பொதுமகன்
16.பாக்கியநாதன், ஆண், 60, பொதுமகன்