அவுஸ்திரேலியா சிட்னியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு
அவுஸ்திரேலியா, சிட்னியில் உள்ள Red gum hall, lane street, Wentworthville மண்டபத்தில் முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின் போது உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் நினைவு கூரும் நிகழ்வும் மிகவும் எழுச்சியுடன் இடம்பெற்றது .இதில் பல நூற்றுக்கணக்கான மக்கள் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் மரணித்த எமது உறவுகளை நினைவுகூர்ந்தனர்.
முதல் நிகழ்வாக பொதுச்சுடரினை லோகேஸ்வரன் பரமசிவம் அவர்கள் ஏற்றிவைக்க அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியக் கொடியை லெஸ்லி குணரட்ணம் அவர்களும் தமிழிழ தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவைச்சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர் யோகராசா அவர்களும் ஏற்றிவைத்தனர். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. ஈகைச்சுடரினை சிவகுமார் டக்கியன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது தமது உயிர்களை தமிழீழ விடுதலைக்காகவும் மண்ணுக்காகவும் விலையாக கொடுத்த நூறு ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களை நினைவில் நிறுத்தி உணர்வுபூர்வமாக மலர்வணக்கத்தை ரட்ணசிங்கம் குமரன் அவர்கள் ஆரம்பித்து வைக்க வரிசையாக காத்திருந்த அணைத்து மக்களும் மலர்வணக்கத்தை செலுத்திய வேளையில் முள்ளிவாய்க்காள் நினைவேந்தல் பாடல்கள் ஒலிக்கப்பட்டது.
தமிழீழ மண்ணில் எமது மக்கள் பட்ட துன்பங்களை சொல்லில் கூறமுடியாத அளவுக்கு நடைபெற்ற கொடுமைகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்காலில் முட்கம்பிக் கூட்டுக்குள் வந்து சேர்ந்தவர்களின் துயரத்தை மனதில் நிறுத்தி…. றொக்வுட் தமிழர் நினைவிடத்திலிருந்து நடைபயணமாக 20 கிலோ மீற்றர் தூரத்தை கால் நடையாக 5 இளையோர்கள் நினைவஞ்சலி நடைபெற்ற இடத்தை வந்தடைந்து மலர்அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.
இன்நிலையில் நடைபயனத்தில் கலந்து கொண்ட செல்வி ஐனனி ஜெயமோகன் அவர்கள் ஆங்கிலத்தில் உணர்வுபூர்வமாக உரையாற்றினார். நடைபயனத்தின் நோக்கம் பற்றியும் எமது அடுத்த சந்ததியினர் மீண்டெழுந்துள்ளார்கள் என்பதையும் ஆங்கிலத்திலும் உரையாற்றினார்.
தொடர்ந்து கிறான்வில் தொகுதியின் மாநிலஅவை உறுப்பினர் Julia Finn கருத்துரை வழங்கினார். தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அடக்குமுறைகளை விளங்கிக்கொள்வதாகவும் இன்னமும் தமிழர்களுக்கான பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றது எனவும் அதற்காக தான் குரல்கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.
காலபவனம் கலைநிலையத்தின் திருமதி சுகந்தி தயாசிலன் அவர்களின் நடனப்பள்ளி மாணவிகள் தாய் மண்ணை முத்தமிட வேண்டும் தமிழ் மண்ணை சுற்றி வர வேண்டும் என்ற ஏக்கத்தால் தவிக்கும் ஓர் நடனத்தை வழங்கியிருந்தார்கள்.
தமிழர் ஒருங்கிணைப்பு குழுவைச்சேர்ந்த ஊடக பேச்சாளர் கலாநிதி சாம்பவி அவர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் துயர் தோய்ந்த அவலம் நிரம்பிய கூட்டுநினைவுகள் ஒரு மக்கள் கூட்டத்தின் ஆழ்மனதில் காலம் காலமாக நிலைத்து நிற்கக் கூடியவை. வரலாற்றை மாற்றும் சக்தி கொண்டவை. யூத மக்களின் தமக்கான தனி அரசு என்ற கனவு நாசி இனப்படுகொலையின்பின் தான் சாத்தியமாகியது. ஏன பல உதரணங்களுடன் உரையாற்றினார்.
நிகழ்வின் சிறப்புபேச்சாளராக தமிழகத்தில் இருந்த வருகைதந்த எழுத்தாளர் அ. முத்துக்கிருஷ்ணன் அவர்கள் உரையாற்றும் போது ஈழத்திலும் தமிழகத்திலும் வாழும் ஈழ மக்கள்படும் துயர துன்பங்களையும் எமது மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலமைகளை பூலோக அரசியலில் மக்கள் போராட்டங்கள் பற்றியும் தெளிவாக விளக்கம் அளித்தார். பல நாடுகளுக்குச் சென்று எமது தமிழ் மக்களின் துன்பங்களையும் இனஅழிப்பை பற்றியும் கூறி தமிழீழம் அமையவேண்டியதற்கான காரணங்களையும் எடுத்துக்கூறி அதற்கான முன்னேடுப்பாய் தமிழர்கள் நாம் ஒன்றினைய வேண்டும் என்று கோரிக்கைகளையும் முன்வைத்தார்.அத்தோடு தமிழ்நாட்டிலுள்ள 80000 மேற்பட்ட ஈழத்து தமிழர்கள் அகதிகளாக அன்றி அத்துமீறியவர்களாகவே கணிக்கப்பட்டு வைத்திருக்கப்படுகின்றார்கள் எனவும் அவர்களது விடிவிற்காகவும் நாங்கள் உழகை;கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இறுதியக எமது போராட்டத்தை நாம் அனைவரும் ஒன்றினைந்து எமது இலட்சியத்தை அடையும்வரை பயணிப்போம் என உறுதி எடுத்துக்கொள்ளுவோம் என உறுதி எடுக்கப்பட்டது.பின் கொடியிறக்கலுடன் இன் நினைவு தினம் நிறைவுபெற்றது.
படங்கள் – சிவராஜ் சிவா