பொது அமைப்புக்களை ஒன்றிணைத்து இலங்கை அரசு தொடர்பில் ஐநா சபையில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டுக்கான முன்னாயர்த்த கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 3 ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 40 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது எனவும் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் வகையில் சர்வதேச விசாரணை இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐக்கியநாடுகள் சபை தீர்மானங்கள் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் ஏற்பாட்டில்இ பொது அமைப்புக்களை ஒன்றிணைத்து மாபெரும் மாநாடு ஒன்று அண்மையில் இடம்பெறவுள்ளது.
குறித்த மாநாட்டுக்கான முன்னாயர்த்த கலந்துரையாடலில் நாட்டிலுள்ள பொது அமைப்புக்கள் இமதகுருமார்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள்இ பல்கலை மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை வழங்குமாறு வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.