முல்லைத்தீவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளப்பகுதியில் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் நன்நீர் மீன்பிடித்தலுக்காக தடை செய்யப்பட்ட சட்ட விரோதமான வைத்திருந்த குற்றத்திற்காக குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 15 இலட்சம் ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ் சுற்றி வளைப்பினை தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் பிராந்திய நீரியல் விரிவாக்கல் அலுவலகத்தின் நீர் உயிரின செய்கை விரிவாக்கல் அதிகாரி யோகநாதன் நிசாந்தன் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்களுடனும் மடுகந்தை விஷேட அதிரடிபடையின் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் அமுனுபுரவின் நெறிப்படுத்தலில் விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து இச் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட வலை மற்றும் நபர்களை (07.03 ) அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.