நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மரியன் ஹகென் ஶ்ரீலங்காவுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து காத்திரமான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமென நம்பப்படுகிறது.
மரியன் ஹகென் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
குறித்த விஜயத்தின்போது சிங்கள் இனவாத பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நிதியமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபடுவாரெனவும் கூறப்படுகின்றது.
மேலும் காணாமல் போனோருக்கான பணியகம், மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூக மற்றும் வணிகப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
இதேவேளை வடதமிழீழத்திற்கு விஜயம் மேற்கொண்டு, யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் குறித்து பார்வையிடவுள்ளதோடு, அவர்களின் பிரச்சினையை உரிய அதிகாரிகளிடம் எடுத்துச் செல்வாரென்றும் நம்பப்படுகிறது.
ஶ்ரீலங்காவில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காத்திரமான பங்கை வகித்திருந்த நோர்வே, இரு தரப்பினருக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.