இந்தோனேசியாவுக்கு சுற்றுலா விசா மூலம் வருகைத் தந்த மூன்று சீனர்கள், அவ்விசாவை தவறாக பயன்படுத்தி காரணத்திற்காக இந்தோனேசியாவின் பட்டாம்(Batam) பகுதியிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
“கைது செய்யப்பட்ட மூன்று சீனர்களில் இருவர் ஆண்கள் மற்றும் ஒருவர் பெண்” எனக் கூறியுள்ள பட்டாம் குடிவரவத்துறை தலைமை அதிகாரி லக்கி அகுங் பினர்டோ அவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார்.
பட்டாம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜகார்த்தா விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மூவரும், அங்கிருந்து சீனாவின் பூசோஹ் சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
முன்னதாக, பட்டாம் பகுதியில் சுற்றுலா விசா மூலம் நுழைந்த இந்த மூன்று சீனர்களும் பிளாஸ்டிக் கழிவை நிர்வகிக்கும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.
பிரச்னைக்குரிய நாடுகடத்தல் நடவடிக்கைகள் அனைத்தும் ஜகார்த்தா விமான நிலையம் வழியாகவே மேற்கொள்ளப்படுகின்ற அடிப்படையில், இவர்களும் அந்த விமான நிலையம் வழியாகவே நாடுகடத்தப்பட்டுள்ளதாக பட்டாம் குடிவரவுத்துறை அதிகாரி லக்கி சுட்டிக்காட்டியுள்ளார்