ஐ.நா மனித உரிமை பேரவையில் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட நியாயப்படுத்தப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட்டன என்ற கோரிக்கை முற்றும் முழுதும் பொய்யானவிடயம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
அண்மையில் கூட ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் கூட இராணுவத்திடம் எவ்வளவு காணிகள் இருக்கின்றது எவ்வளவு காணிகள் தற்போது விடுவிக்க முடியும் என்பது தொடர்பான வரைவை இராணுவம் ஒப்படைத்திருந்தது. அப்படி இருக்கின்ற போது ஐநா மனித உரிமை பேரவையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை தெரிவித்து ஐநா மனித உரிமை பேரவையை வேறு வழிகளை திசை திருப்பும் ஒரு நடவடிகையாகவே அவர்களுடைய கருத்து அமைந்ததாக நான் கருதுகின்றன்.
மன்னார் மாவட்டத்தில் மட்டும் அல்லாது கிளிநொச்சி முல்லைத்தீவு குறிப்பாக கிளிநொச்சியின் மத்திய கல்லூரியின் கிளிநொச்சியின் பாடசாலைகள் கூட இராணுவமயமாக்கப்பட்டுள்ளது அதே போன்று மன்னார் முள்ளிக்குளம் கேப்பாபிலவு சிலாவத்துறை தலைமன்னார் போன்ற அதிகபடியான காணிகள் ஒரு சில காணிகள் விடுவிக்கப்பட்டாலும் அதிக படியான மக்களுடைய காணிகள் மக்கள் விவசாயம் செய்த காணிகள் மக்களுக்கு தேவையான பொதுவான காணிகள் என பல முக்கியமான காணிகளை இராணுவம் தம் வசம் வைத்துள்ளது விவசாய பண்ணைகள் உதாரணமாக வெள்ளாங்குளத்தில் 500 ஏக்கர் மேற்பட்ட விவசாய பண்ணைகள் கிட்டத்தட்ட 1000 பேர் வேலை செய்யக்கூடிய அந்த பண்ணைகள் கூட இன்று இராணுவ வசம் இருக்கின்றது.
ஆகவே ஐநா சபையில் அரசாங்கம் தெரிவித்த கூற்றை நான் முற்றும் முழுதாக மறுக்கின்றேன் அதே நேரத்தில் கடற்படை முகாம்கள் இராணுவ முகாம்களை தங்களுடைய நிரந்தர முகாம்களாக மக்களுடைய காணிகளை நிரந்தர சுவீகரிப்பின் மூலம் அரச வர்தமானியின் மூலம் அவர்கள் தங்கள் சொந்த முகாம்களாக ஆக்குவதற்கு நடவடிக்கை எடுக்கின்றார்கள்.
அதற்கு மிக முக்கியமான காரணம் அந்த இடங்களில் காணாமல் ஆக்கப்பட்ட எங்களுடைய உறவுகள் அந்த இடத்தில் சில வேளைகளில் இருக்கலாம் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இருக்கின்றது. உதாரணமாக மன்னார் பிரதேசத்தில் சனிவிலெச் எனும் கடற்படை முகாமில் அதிகளவிலான காணாமல் ஆக்கப்பட்டோருடைய விசாரணைகள் அங்குவைத்து விசாரிக்கப்பட்டுள்ளன அதற்கான ஆதரம் உள்ளது.
ஆகவே இதே போன்று பல்வேறுதரப்பட்ட முகாம்களில் இப்பிடியான விடயங்கள் இருக்கின்றது ஆகவே இந்த முகாம்களை முதலில் மன்னார் மனித புதைகுழி போல ஒவ்வோரு இராணுவ முகாமுக்குள்ளும் ஒரு ஆய்வு செய்ய வேண்டும் என்பது எனது கோரிக்கை எனவும் தெரிவித்திருந்தார்.