முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றும் போது வட மாகாண நிர்வாகத்திற்கு உட்பட்ட செயலகம் ஒன்றின் பணியாளர் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த முனைந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றும் போது வட மாகாண நிர்வாகத்திற்கு உட்பட்ட செயலகம் ஒன்றின் பணியாளர் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த முனைந்தார்.
முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின் போது மரணித்த உறவுகளின் அஞ்சலிக்காக வட மாகாண சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில அனைவரும் பங்கு கொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் கலந்து கொண்டு அஞ்சலியுரை ஆற்றும் போது அரச ஊழியரான தயாபரன் தன்னை ஊடகவியலாளர் எனக் கூறிக்கொண்டு வேண்டுமென்றே குழப்பினார்.
இருப்பினும் தலைவரை அநாகரிகமாக நடாத்துவதாக எண்ணி கேட்ட கேள்விக்கும் சரியான பதிலினை தலைவர் வழங்கினார்.
மிகவும் பயபக்தியாக உணர்வு பூர்வமாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் அதிகளவு மக்கள் மக்கள் பிரதிநிதிகள், சமயப் பெரியார்கள் கலந்து கொண்ட நிலையில் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டதனை வன்மையாக கண்டிக்கின்றோம் என சுமந்திரன் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.