சூரியனின் வடக்கு நோக்கிய தொடர்பான இயக்கம் காரணமாக நாளை ஏப்ரல் 05ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றது.
இதனால் அப்பகுதியில் அதிக வெப்பத்துடனான சூழல் காணப்படும்.
வெளியில் செல்லும் மக்கள் தமது பாதுகாப்பை கருத்திற்கொண்டு செல்லுமாறும், கடும் வெப்பம் நிலவும் இடங்களில் வெகுநேரம் இருப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.