அரசியலில் பெண்கள் வகிபாகம் தொடர்பில் தாயத்தில் இருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்று கட்டுரை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அரசியலுக்கு பெண்கள் வரவேண்டும் என்றும் நோக்கில் இந்த கட்டுரையாளரால் வரையப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்தகாலத்தில் ஏற்பட்ட போர் காரணமாக 40 ஆயிரம் பெண் விதவைகள் இருப்பதாக இதன் எழுத்தாளாரால் எழுதப்பட்டுள்ளது.
பெண்கள் வறுமைக்கோட்டின் கீழ்வாழும் பலர் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்துவருவதாக சொல்லப்பட்டாலும். இதனை மீட்பதற்கு ஒரோ ஒரு வழி பெண்களின் அரசியல் பலம் அதிகரிக்கவேண்டும் என எழுத்தாளரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போர் முடிவடைந்த பின்னர் பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் இந்தபோரால் 90 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளதாக பல்வேறுதரப்பு சுட்டடிக்காட்டியுள்ள நிலையில் இதன் எண்ணிக்கையினை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளமையும் ஒரு அரசியல்சூழ்ச்சியாகவே கருதமுடியம் பத்து ஆண்டுகளில் இந்த போரின் தாக்கத்தில் இருந்து மீளமுடியாத பெண்களுக்கு இந்த அரசியல் வாதிகள் என்னதான் செய்தார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இவர்கள் தங்கள்க சொத்துக்களை பெருக்கிகொள்ளவும் தங்கள் சுகபோகவாழ்கையினை அனுபவிப்பதுமே நோக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றார்கள் இவ்வாறான அரசியல்தான் ஸ்ரீலங்காவின் அரசியல் ஆக காணப்படுகின்றது.
இவற்றை மாற்றிஅமைக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்கு உரிமை உண்டு அந்த வாக்குரிமையினை சரியாக பயன்படுத்தி அழிந்துபோன பொருளாதாரத்தினை மீண்டும் கட்டிஎழுப்பும் நோக்கில் சரியான அரசியல் தலைமைகளை தெரிவுசெய்யவேண்டிய கட்டாயத்தில் ஈழத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இவற்றை நன்கு புரிந்து அனைவரும் செயற்படவேண்டும்.
நன்றி திரனக்குரல் பத்திரிகை