கொழும்பு, தெமட்டகொடை காவற் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் இன்று இடம்பெற்ற 8 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 188 பேர் உயிரிழந்துள்ளதுடன் 469 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கையில் இன்று காலை ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து நண்பகல் இரண்டு மணியளவில், தெகிவலையில் மேலும் ஒரு குண்டுவெடிப்பு நடந்துள்ளது. மேலும், தெமடகொட பகுதியில் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தெகிவலையில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு எதிரே உள்ள கட்டடம் ஒன்றில் இந்த குண்டு வெடித்துள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரியல் பூங்கா மூடப்பட்டது. மேலும், தெமடகொட பகுதியில் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 3 காவற்துறை அதிகாரிகள் பலியாகியுள்ளனர். மூவர் காயம் அடைந்து வைதஹ்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.
2ஆம் இணைப்பு – இலங்கைக் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 160 பேர் பலி, 370 பேர் காயம்…
இலங்கையின் பல பாகங்களில் பாரிய குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 6 வெடிப்பு சம்பவங்களிலும் சுமார் 160 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை இலங்கையின் 6 இடங்களில் பாரிய வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், 2. நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகிய தேவாலயங்களிலும் குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களான ஷங்கரில்ல ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், மற்றும் லிலும் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலிலும் குறித்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அந்த வகையில் கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்த 40 பேரின் சடலங்கள் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது காயமடைந்த 295 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கொச்சிக்கடையில் 40 பேர் பலி
கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்பில் சிக்கி 160 க்கும் மேற்பட்டடோர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர்கொழும்பில் 68 பேர் பலி
இதேவேளை, நீர்கொழும்பு, கட்டான தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
68 பேருடைய சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக கட்டான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார். இதன்போது உயிரிழந்த மேலும் 25 பேரின் சடலங்கள் கட்டான தேவாலயத்தில் உள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களான ஷங்கரில்ல ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், மற்றும் லிலும் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலிலும் குறித்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மட்டக்களப்பில் 27பேர் பலி
இதேவேளை, மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 73 பேர் காயமடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசலையில் 27 பேருடைய சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக மட்டு.வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளதுடன், மேலும் 73 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற 6 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சிக்கி இதுவரை 370 வரையில் காயமடைந்துள்ளதுடன், இவர்களுள் 9 பேர் வெளிநாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கட்டுநாயக்கா பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்பட்ட தகவல் உண்மையாற்றது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 6 குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் இதுவரை சுமார் 160 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகிய தேவாலயங்களிலும் குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களான ஷங்கரில்ல ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டலிலும் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலிலும் குறித்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அந்த வகையில் கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்த 40 பேரின் சடலங்கள் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது காயமடைந்த 295 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நீர்கொழும்பில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 68 பேருடைய சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக கட்டான காவல் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார். இதன்போது உயிரிழந்த மேலும் 25 பேரின் சடலங்கள் கட்டான தேவாலயத்தில் உள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இந் நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசலையில் 27 பேருடைய சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக மட்டு.வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளதுடன், மேலும் 73 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த 6 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சிக்கி இதுவரை 370 வரையில் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது