யாழ்ப்பாணம் நல்லூரடிப் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடித்திருந்த மூன்று பேர் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க நாட்டச் சேர்ந்தவர், முஸ்லிம் இளைஞர் மற்றும் தமிழ் பெண் ஆகியோரே இதன் போது கைது செய்யப்பட்டவர்கள் ஆவார்.
ஒருவர் வெளிமாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞர் என்பது தெரியவந்தது. அவர் தொழில் நிமிர்த்தம் யாழ்ப்பாணத்திற்கு வந்தாகவும் தெரிவித்தார்.
மூவரில் மற்ருமொருவர் தமிழ் பெண் என்றும், சாட்டிப் பகுதியில் உள்ள ஒரு குரபீடத்தில் பணிபுரிபவர் என்றும் தெரியவந்தது.
மற்றவர் அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர் என்றும், அவர் சுற்றுலா நோக்கத்துடன் வந்தவர் என்றும் பொலிஸாரிடத்தில் தெரிவித்தார்.
கைதான ஒவ்வொருவரும் முன்னுக்கு பின் முரனான தகவல்களை தெரிவித்ததை அடுத்து, அவர்களை தடுத்து வைத்து தொடர் விசாரணை செய்யுமாறு பொறுப்பதிகாரி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் 3 பேரும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.