இருபது ஆண்டுகளாக விமானியாக வேலை பார்த்துக் கொண்டே ஆட்சி பொறுப்பை நடத்தி வருவதாக நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
மன்னர் ஆட்சி இடம் பெறும் நெதர்லாந்தில் நாடாளுமன்ற முறைப்படியே ஆட்சி நிர்வாகம் நடைபெற்று வருகிறது.
மன்னர் நாட்டின் தலைவராக இருந்த போதிலும், அதிகாரங்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமரிடம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
நெதர்லாந்து நாட்டின் தற்போது மன்னராக இருப்பவர் வில்லியம் அலெக்சாண்டர்.
ராணியான பீட்ரிக்ஸ்(79) பதவி விலகியதால், வாரிசு அடிப்படையில் வில்லியம்ஸ் நாட்டின் மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வில்லியம்ஸ் சமீபத்திய பேட்டியில், தான் 20 ஆண்டு காலமாக விமானியாக பணி புரிந்து வருவதாகவும், பணிக்கு செல்லும்போது தான் ஒரு மன்னர் என்பதையே மறந்து விடுவதாகவும், ஆட்சி பொறுப்பில் தனக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்தையும் மறந்து விட்டு பொறுப்புடன் தன்னுடைய வேலையை தொடர்ந்து வருவதாக கூறியுள்ளார்.
வில்லியம் ஆரம்பத்தில் துணை விமானியாக இருந்து படிப்படியாக விமானத்தை ஓட்டுவதற்கு கற்றுக்கொண்டுள்ளார்.
மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டும் விமானியாக பணி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.