தீவிரவாத தாக்குதலுக்கு சாத்தியம் இருப்பதாக வெளிநாட்டு உளவுத்துறை ஒன்று ஏப்ரல் 4ம் திகதி விரிவான அறிக்கையை வழங்கியது.
முஸ்லிம்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்று கருத முடியாது. முஸ்லிம் குடிமக்களை பாதுகாக்க வேண்டும்.
பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு செயலரும் உளவுத்துறை அறிக்கையை எனக்கு வழங்கவில்லை. அவர்கள், தமது கடமைகளில் தோல்வியடைந்துள்ளனர். அவர்கள் கடிதங்களை ஒருவருக்கொருவர் அனுபிக்கொண்டனர். சிங்கப்பூரில் இருக்கும் போது கடிதங்களை சமூக வலைத்தளங்களிலேயே அறிந்தேன்.
புதிய பாதுகாப்பு செயலர் நியமிக்கப்படுவார். இன்று பொலிஸ்மா அதிபர் பதவி விகுவார் என எதிர்பார்க்கிறேன். இத், தவறுகளின் பொறுப்பை நான் ஏற்க மறுக்கவில்லை. அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.
இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் மொத்தம் 130-140 பேர் இஸ்லாமிய தீவிரவாத சந்தேக நபர்கள் இருப்பதாக தகவல்.
போதை பொருட்களுக்கு எதிரான எனது செயல்பாடு குண்டு வெடிப்பில் ஒரு பங்கு வகித்திருக்கலாம்.
இப்போது இருக்கும் சட்டங்கள் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை தடை செய்ய போதுமானதில்லை. விரைவில் புதிய சட்டம் நிறைவேற்றப்படும்.
அமெரிக்காவினால் கூட செப்டம்பர் 11 தாக்குதலை தடுக்க முடியவில்லை. இப்பூமியில் சக்தி வாய்ந்த தேசங்களும் துன்பப்பட்டுள்ளது.
அரசுக்கும் எனக்கும் இடையில் பிளவுகள் ஏற்பட முக்கியமான காரணங்களில் ஒன்று பாதுகாப்பு படைகளின் பவீனத்தை எதிர்ப்பதாகும்.
மாவனல்ல சம்பவத்தில் அறுவர் கைது செய்யப்பட்டனர். ஆதாரம் இல்லாததால் இருவர் விடுவிக்கப்பட்டனர். எந்த அரசியல் தவையீடும் இல்லை.
தற்போதுள்ள நிலையில் இலங்கையில் அனைத்து வீடுகளிலும் தேடுதல் முன்னெடுக்கப்படும். மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்.
“மைத்திரிபால சிறிசேன,
வெளிநாட்டு ஊடகவியலாளர்,
மாநாடு”.