ஶ்ரீலங்காவில் பயங்கரவாதிகள் பல இடங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு 2 ஆவது முறையாக எச்சரித்துள்ளது.
இவ்வாறு அமெரிக்கா ஒரேநாளில் தமது பிரஜைகளுக்கு இரு தடவைகள் பயங்கரவாத எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
குறித்த எச்சரிக்கையில் பயங்கரவாதக்குழுக்கள் தொடர் தாக்குதல்களை இலங்கையில் நடத்தக்கூடும். எவ்வித அறிவித்தலுமின்றி சுற்றுலா தலங்கள், போக்குவரத்து தரிப்பிடங்கள், சந்தைகள், பல்பொருள் அங்காடிகள், ஹோட்டல்கள், விடுதிகள், உணவகங்கள், வழிபாட்டு நிலையங்கள், பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், கலை நிகழ்வுகள் இடம்பெறக்கூடிய இடங்கள், கல்வி நிலையங்கள், விமானநிலையம், வைத்தியசாலைகள், மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் இவ்வாறு பயங்கரவாதிகள் தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் சற்றுமுன் வெளியிட்டுள்ள தகவலில், நாளை (26) முதல் 28 ஆம் திகதி வரை) வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், சன நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களை இவ்வார இறுதியில் (Weekends) தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளது. அத்துடன்வெளிநாட்டவர்கள் அதிகம் இருக்கும் இடங்கள் குறித்தும் முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
Security Alert: U.S. Embassy Colombo, Sri Lanka U.S. Embassy Colombo Location: Sri Lanka Event: Sri Lankan authorities are reporting that additional attacks may occur targeting places of worship. Avoid these areas over the weekend, starting tomorrow, April 26th through Sunday, April 28th. Continue to remain vigilant and avoid large crowds. Actions to Take: Be aware of your surroundings. Stay alert in locations frequented by tourists. Review your personal security plans. Notify friends and family of your safety. Follow the instructions of local authorities. Monitor local media for updates. Assistance: U.S. Embassy – Colombo, Sri Lanka +94 11 249-8500 Phone +94 077-725-6307 Phone (after hours) [email protected] State Department – Consular Affairs 888-407-4747 or 202-501-4444 Sri Lanka Country Information Enroll in the Smart Traveler Enrollment Program (STEP) to receive Alerts and make it easier to locate you in an emergency. Follow the Department of State on Facebook and Twitter. Review the Crime and Safety Report for Sri Lanka. U.S. citizens who travel abroad should always have a contingency plan for emergency situations. Review the Traveler’s Checklist