2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி பார்ப்பது ‘ஹராம்’ என்று பிரச்சாரம் செய்யத்தொடங்கியது. இந்தச் செயல்பாடு பிரச்சாரத்தோடு நின்றுவிடவில்லை. வீடு வீடாகச் சென்று அன்டனாக்களை உடைப்பது, சீடி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களை எச்சரிக்கை செய்துஇ கடைகளை எரிப்பது என்று வன்முறையாக மாறியது.
கறுப்பு அபாயாக்களையும், நீண்ட அங்கிகளையும் கொண்டுவந்து இதுதான் இஸ்லாமிய உடை என்று யாரோ சில வியாபாரிகள் அறிமுகம் செய்தார்கள். எங்கள் இறுதித் தூதர் முஹம்மத் நபி அவர்கள் வாழ்ந்த மண்ணில் பெண்கள் எல்லாம் இதைத்தான் அணிகின்றார்கள். இது எங்கள் கலாசாரம் என்று ஏற்பதற்கு பெண்களையும் பிள்ளைகளையும் பழக்கப்படுத்தினார்கள். இது பெண்களுக்குப் பாதுகாப்பான கௌரவமான உடை என்பதான உணர்வை வலிந்து உருவாக்கிப் பெண்கள் வாயாலேயே சொல்லும்படி மூளைச்சலவை நடந்தது. பாடசாலை மாணவிகளும்இ பல்கலைக்கழகம் செல்லும் மாணவிகளும் கறுப்பு அங்கியை மட்டுந்தான் கட்டாயமாக அணியவேண்டும் என்று வெள்ளிக்கிழமை ஜூம்மாக்களில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்துப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இது எங்கள் ஊரில் மட்டும் நிகழ்ந்த சம்பவமில்லை. பெரும்பாலாக முஸ்லிம்கள் வாழும் எல்லா ஊரிலும் இப்படித்தான் நடந்தது.
திடீரென்று முளைத்த சிந்தனைப் பள்ளிகளுக்கு அரபு நாடுகளிலிருந்து நிதி வசூலாகி வந்தது. வெறும் நூறு இருநூறோ ரூபாய்களை மட்டும் நன்கொடையாக செலுத்தி நாங்கள் கற்ற குர்ஆனை மாதாந்தம் மூவாயிரம் செலுத்திக் கற்கும் நிலை உருவாக்கப்பட்டது. மத கல்வி அவசியமேயின்றி முன்னிறுத்தப்பட்டது. வியாபாரமானது. கிலாபத் பற்றிய எண்ணங்கள் இளைஞர்களிடையே விதைக்கப்பட்டு இந்த பூமி முஸ்லிம்களால் ஆழப்படவேண்டியது என்ற பிரம்மை திணிக்கப்பட்டது. சில உலமாக்கள் சொத்துக்கள் சேர்த்தார்கள். எங்களுக்குத் தெரிய பாங்கு முழங்கிக் கொண்டிருந்த சம்பளமே இல்லாத மௌலவிகள் வெளிநாடுகளுக்குப் போய் வந்தார்கள். அவர்கள் வீடுகளுக்குப் பாக்கிஸ்தானிலிருந்தும் மத்திய கிழக்கிலிருந்தும் நண்பர்கள் வந்து தங்கிச் சென்றார்கள். அவ்வப்போது ஆடு மாடு அறுத்து விருந்துகள் நடத்தினார்கள். கஞ்சாவை அம்மியில் அரைத்து இறைச்சிக் கறி சமைத்த வாசம் எங்கள் மூக்குத் துவாரங்களை அரித்துக் கொண்டு காற்றிலேறிப் போனது.
இவர்களுக்குள் இந்த சிந்தனை மாற்றங்கள் எப்படித் திடிரெனத் தோன்றின என்று சிந்திப்பதில் யாருக்கும் ஆர்வம் இருக்கவில்லை.
சிங்கள மக்கள் சீத்தையையா அணிகின்றார்கள்? அவர்களது கலாசாரத்தில் மாற்றம் உண்டாகவில்லையாஇ நாங்கள் அபாயா அணிந்தால் தீவிரவாதமா என்று அபாயா திணிக்கப்பட்ட அரசியலுக்கு முட்டுக் கொடுப்பதை வெட்கமேயின்றி நிகழ்த்தி வெற்றி கண்டவர்கள் முகங்கள் எல்லாம் வரிசையாக கண்களில் வந்து போகின்றன.
மதத்தின் பெயராலான இத்தகைய சின்னச்சின்ன எக்ஸ்ட்ரீம் செயல்பாடுகளின் ஊற்றுக்கண்களை ஆழமாக நோக்கத் தவறியதோடுஇ அமெரிக்கா 9/11 தாக்குதலுக்குப் பின்னர் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகப் பார்க்கும் சூழ்நிலையை, இஸ்லாமோபோபியா போன்ற அரசியல்களைப் பேசுவதை மனிதாபிமானச் செயற்பாடாக கருதியவர்கள் எல்லாம்கூட இன்றைய இலங்கை முஸ்லிம்களின் அரசியல் நிலைக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களே.
இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து பேசுகின்ற எழுதுகின்றவர்களை மேலைத்தேய கைக்கூலிகள் என்றவர்கள், உண்மையையை உரக்கப் பேசிய எழுதியவர்களின் கழுத்துகள் நெறிக்கப்பட்டும்இ சமூக ஊடகங்களிலும், வாழ்விலும் அவமானப்படுத்தப்பட்டபோதும் மௌனித்திருந்தவர்கள்கூட இதன் பின்னால் இருக்கிறார்கள்.
இப்போது வெள்ளம் தலைக்கு மேல்! நாடகங்களின் அரங்குகளை மாற்றவேண்டிய தருணம்.
இலங்கை முஸ்லிம்களின் எதிர்வினைகளை மூன்று வகையாகப் பார்க்க முடிகின்றது.
1) தப்பிக்கும் தந்திரம்
2) குற்றஞ்சுமத்துதல்
3) எதிர்காலம் குறித்த அச்சம்
இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதத்திற்கு எதிராக அழத் தொடங்கியிருக்கி(றோம்)றார்கள். இது தப்பித்தல்,அச்சம் சார்ந்தது.
குண்டு வைத்தவர்கள் தீவிரவாதிகள், கொல்லப்படவேண்டியவர்கள்இ அவர்கள் முஸ்லிம்கள் அல்ல, இஸ்லாம் தீவிரவாத மார்க்கமல்ல என்பதெல்லாம் தப்பித்தல் மற்றும் குற்றச் சுமத்தல் உளவியல் சார்ந்தவை.
தீவிரவாதிகளுக்கு மதமில்லை. அவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்படவேண்டும் என்று தப்பிக்க முற்படும் பச்சோந்திகளாக முஸ்லிம்கள் மாறவேண்டியது காலத்தின் தேவையாகியிருக்கிறது.
தீவிரவாதக் கருத்துக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் எதிர்வினையாற்றி இருக்கிறோமா என்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைக் கேளுங்கள். மௌனமாக இருந்தவர்கள்கூட தீவிரவாதத்தை ஆதரித்தவர்கள் என்பேன். சமூக ஊடகங்களில் வெளியான மத தீவிரவாத கருத்துக்களை நமக்கென்ன என்றும்இ யாரோ ஒருவன் உளருகிறான் என்றும் பொறுப்பற்று இருந்த நீங்கள் இப்போது நல்லிணக்கம் பேசுகிறீர்கள். தீவிரவாதிகளைக் கொல்லவேண்டும் என்கிறீர்கள்.
முளையிலேயே கிள்ளி எறியவேண்டியதைஇ அதற்கான வாய்ப்புகள் இருந்தும் நீங்கள் செய்ய முன்வரவில்லை. கழுத்திற்கு கத்தி வந்துவிட்ட பிற்பாடே தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும் வன்முறைகளுக்கு மார்க்கத்தில் இடமில்லை என்று கத்துகிறீர்கள். தேவைக்கு அதிகமாக சிந்தனைப் பள்ளிகள் வந்தபோது, அபாயா, முகமூடிகள் வந்தபோது அதனைக் கலாசார மாற்றம் என்பதாக அங்கீகரித்தவர்கள்இ அவற்றை எல்லாம் நம் கைகளில் கொணர்ந்து சேர்த்த அதே மனிதர்களால் தீனுக்கான போர் நடத்தப்படும்போது தனித்து நிற்கப் பார்ப்பது அறிவு முரணில்லையா? வழக்கம்போல அரசாங்கத்தின் சதி, மேலைத்தேய சதி என்றெல்லாம் புலனாய்வு விசாரணைகளை நமக்கு நாமே செய்து திருப்திப்பட்டுக் கொள்ள விளைவதால் எவ்வளவு தூரம் நம்மை நாம் நியாயப்படுத்திக் கொள்ளமுடியும்? அரசும் மேலைத்தேயமும் இயக்கும் பொம்மைகளாக நம் இளைஞர்களை இழுத்துச் சென்ற காரணிகளைத் தேட ஏன் தயங்குகிறோம்?
இந்தப் பதிவு உங்களில் பலருக்கு உவப்பாக இராதென்று தெரியும். எப்போதும்போல காட்டிக் கொடுப்பவள், கைக்கூலி என்று உங்கள் இயலாமைகளைக் கோபங்களாக கொட்டிவிட்டுக் கடந்துபோவீர்கள் என்பதை அறிந்தே இருக்கிறேன்.
இந்த உண்மைகள் கசப்பானவைதான் மருந்துகள் போல. நோய் தீரவிரும்பினால் நீங்கள் ஒவ்வொருவரும் சிகிச்சையளிப்பட்டே ஆகவேண்டும். உங்கள் நோயைக் கண்டறிந்து குணப்படுத்துங்கள். நோய்க்கூறுகளுக்கு சிகிச்சையளிப்பதும், சுகதேகிபோல நடித்திருப்பதும் உங்கள் தெரிவு.
இன்னமும் தீவிரவாதிகளை அவர்கள் எங்களுடையவர்கள் அல்ல, நாங்கள் அவர்களைப் போல அல்ல என்று ‘நல்ல முஸ்லிம்’ வேசம் போடுவதில் தான் எல்லோரும் ஆர்வமாக இருக்கிறார்கள். இங்கே யார் நல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம் என்பது பிரச்சினையே அல்ல. இனி இதுபோன்ற செயல்பாடுகள் நடக்காதிருக்க என்ன செய்யப்போகிறோம், நமது பங்களிப்பு என்ன என்பவையே முக்கியம்.
எனக்கு முர்த்தத் (மதத்தை விட்டு நீங்கியவள்) என்று பத்வா தந்தவர்கள்கூட திடீர்ஞானோதய நோயினால் பாதிக்கப்பட்டு பந்தி பந்தியாக உளறிக் கொட்டிக் கொண்டிருப்பதையும் காண்கிறேன். அவர்கள் முர்தத் என்று சொல்லிவிட்டதால் நான் இஸ்லாத்தைவிட்டும் விலகிவிடவில்லை. இங்கே ஒப்பாரி வைப்பவர்கள் யாரும் தங்களது கடந்த காலத் தவறுகளை உணர்ந்து கொண்டவர்கள் இல்லை. இது தற்காலிக தற்காப்பு மனோபாவம் மட்டுமே. இன்னும் சில வாரங்களில் இதே முகநூலில் இவர்களின் பத்வா பேக்டரிகள் இயங்குவதை நாம் காணத்தான் போகிறோம். கண்டும் காணாமலும் எல்லோரும் இருக்கத்தான் போகிறார்கள். கேள்வி எழுப்பும் பெண்களைக் குறிவைத்து வேட்டைகள் நடக்கத்தான் போகின்றன.
இந்த நாடகங்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு சற்றே நிதானமாக சிந்தித்து செயலாற்றுவதே புத்திசாலித்தனம். இலங்கையில் உள்ள இஸ்லாமியப் புத்திஜீவிகள்இ கல்வியலாளர்களுக்கு பகிரங்கமாகவொரு அழைப்பைச் செய்ய விரும்புகிறேன். தயவு செய்து உங்கள் அமைதியைக் கலையுங்கள். இஸ்லாமிய சமூகத்தையும் இளைஞர்களையும் வழிநடத்தும் பொறுப்பைக் கையிலெடுங்கள்.
தாக்குதல் பற்றி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டும் பொறுப்புடன் செயற்படாத அரசைக் கண்டித்து ‘வெட்கப்பட்டு இப்படிப்பட்ட அரசிலிருந்து பதவி விலகுகிறேன்’ என்று சொல்லத்தகுந்த நேர்மையான அமைச்சர்களோ பாராளுமன்ற உறுப்பினர்களோ இந்த நாட்டில் இல்லை என்பதற்காக மீண்டுமொரு முறை தலைகுனிவோம். இவர்களால் செய்ய முடியாத பல சமூக மாற்றங்களை அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கற்ற சமூகத்தால் நிகழ்த்தமுடியும்.
அப்படி முன்னெடுக்கப்பட வேண்டிய சில பணிகள்:
இலங்கையிலுள்ள இஸ்லாமிய இயக்கங்கள், சிந்தனைப் பள்ளிகள் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறைமைக்குள் கொண்டுவரப்படவேண்டும். இதற்கென கல்வியலாளர்கள்இ மார்க்க அறிஞர்களைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுச் சிந்தனைப் பள்ளிகளின் பாடவிதானங்கள்இ செயற்பாடுகள் அனைத்தும் சான்றுறிதிப்படுத்தும் நடைமுறை கொண்டுவரப்படுதல் வேண்டும்.
இந்த முறைமைக்குள் வர விரும்பாத சிந்தனைப் பள்ளிகள் சமரசமின்றி மூடப்பட வேண்டும்.
சிந்தனைப் பள்ளிகள் , அனைத்து மதரசா ஆசிரியர்களினதும் கல்வித் தகைமை தெளிவான ஒழுங்கிற்குள் கொண்டுவரப்பட்டு நியமனங்கள் செய்யப்படுதல் வேண்டும்.
சிந்தனைப் பள்ளிகளின் கட்டணங்கள் நெறிப்படுத்தப்பட்டு அவற்றின் கணக்கறிக்கைகள் மக்கள் பார்வைக்குரியதாக்கப்படுதல் வேண்டும்.
சிந்தனைப் பள்ளி மாணவர் அனுமதிக்கான வயதெல்லை முறைப்படுத்தப்பட்டு 10 வயதுக்கு குறைந்த பிள்ளைகளை மதரசாக்களில் சேர்ப்பது தடைசெய்யப்பட வேண்டும். பிள்ளைகளின் கற்றல் நேரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும். அதிகாலை ஐந்து மணிக்கே சிந்தனைப் பள்ளிகளுக்கு குழந்தைகளை ஓடச்செய்யும் பெற்றோர் தண்டிக்கப்படவேண்டும்.
அரபு நாடுகளிலிருந்துஃ வெளிநாடுகளிலிருந்து வரும் நிதி முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களின் செயற்பாடுகள் பல்கலைக்கழக மானியத்தினால் நெறிப்படுத்தப்பட வேண்டும்.
இன்னமும் தீவிரவாதிகளை அவர்கள் எங்களுடையவர்கள் அல்லஇ நாங்கள் அவர்களைப் போல அல்ல என்று ‘நல்ல முஸ்லிம்’ வேசம் போடுவதில் தான் எல்லோரும் ஆர்வமாக இருக்கிறார்கள். இங்கே யார் நல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம் என்பது பிரச்சினையே அல்ல. இனி இதுபோன்ற செயல்பாடுகள் நடக்காதிருக்க என்ன செய்யப்போகிறோம்இ நமது பங்களிப்பு என்ன என்பவையே முக்கியம்.
எனக்கு முர்த்தத் (மதத்தை விட்டு நீங்கியவள்) என்று பத்வா தந்தவர்கள்கூட திடீர்ஞானோதய நோயினால் பாதிக்கப்பட்டு பந்தி பந்தியாக உளறிக் கொட்டிக் கொண்டிருப்பதையும் காண்கிறேன். அவர்கள் முர்தத் என்று சொல்லிவிட்டதால் நான் இஸ்லாத்தைவிட்டும் விலகிவிடவில்லை. இங்கே ஒப்பாரி வைப்பவர்கள் யாரும் தங்களது கடந்த காலத் தவறுகளை உணர்ந்து கொண்டவர்கள் இல்லை. இது தற்காலிக தற்காப்பு மனோபாவம் மட்டுமே. இன்னும் சில வாரங்களில் இதே முகநூலில் இவர்களின் பத்வா பேக்டரிகள் இயங்குவதை நாம் காணத்தான் போகிறோம். கண்டும் காணாமலும் எல்லோரும் இருக்கத்தான் போகிறார்கள். கேள்வி எழுப்பும் பெண்களைக் குறிவைத்து வேட்டைகள் நடக்கத்தான் போகின்றன.
இந்த நாடகங்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு சற்றே நிதானமாக சிந்தித்து செயலாற்றுவதே புத்திசாலித்தனம். இலங்கையில் உள்ள இஸ்லாமியப் புத்திஜீவிகள்இ கல்வியலாளர்களுக்கு பகிரங்கமாகவொரு அழைப்பைச் செய்ய விரும்புகிறேன். தயவு செய்து உங்கள் அமைதியைக் கலையுங்கள். இஸ்லாமிய சமூகத்தையும் இளைஞர்களையும் வழிநடத்தும் பொறுப்பைக் கையிலெடுங்கள்.
தாக்குதல் பற்றி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டும் பொறுப்புடன் செயற்படாத அரசைக் கண்டித்து ‘வெட்கப்பட்டு இப்படிப்பட்ட அரசிலிருந்து பதவி விலகுகிறேன்’ என்று சொல்லத்தகுந்த நேர்மையான அமைச்சர்களோ பாராளுமன்ற உறுப்பினர்களோ இந்த நாட்டில் இல்லை என்பதற்காக மீண்டுமொரு முறை தலைகுனிவோம். இவர்களால் செய்ய முடியாத பல சமூக மாற்றங்களை அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கற்ற சமூகத்தால் நிகழ்த்தமுடியும்.
முஸ்லிம் பெண்களின் உடை தொடர்பாக அரசு தீர்மானம் இயற்ற அனுமதிக்க முடியாது. அதேபோல முஸ்லிம் மஜ்லிஸ்களும் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகளின் ஆடைத் தெரிவில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிடக்கூடாதென்ற கட்டாய நிபந்தனை வேண்டும்.
முஸ்லிம் பெண்களின் உடை தொடர்பாக அரசு தீர்மானம் இயற்ற அனுமதிக்க முடியாது. அதேபோல முஸ்லிம் மஜ்லிஸ்களும் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகளின் ஆடைத் தெரிவில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிடக்கூடாதென்ற கட்டாய நிபந்தனை வேண்டும்.
ஒருவன் மனித வெடிகுண்டாக மாறுவதென்பது ஒரே இரவில் நடந்து முடிகின்ற ஒன்றல்ல. அது நீண்ட காலமாக நடந்திருக்க வேண்டிய ஒரு மாறுதல். அவனது பேச்சுஇ செயல் என்று எல்லாவற்றிலும் அது வெளிப்பட்டிருக்கும். இன்றைக்குள்ள நம் வாழ்வு முறையில் பிறர் மீதான அக்கறை என்பது ஒரு அநாவசிய செயற்பாடு போன்றதாக மாறிவிட்டிருக்கிறது. ‘பிரைவசி’ என்ற பிரயோகம் ஒருவரைத் தனிமைப்படுத்துவது என்பதுபோன்ற நிலையை சமகால நாகரீகப் போக்குத் தோற்றுவித்துள்ளது. பிறரின் சுதந்திரத்தில் தலையிடுகின்ற அறமற்ற போக்கும் ‘நமக்கென்ன’ என்ற அலட்சியப் போக்கும் ஒன்றானது என்று எண்ணத் தொடங்கியதால் நாம் ஒவ்வொருவருமே தனிமைப்பட்டு நிற்கிறோம். நம் உணர்வுகளை நாம் பகிர்ந்து கொள்வதில்லை. பிறரின் உணர்வுகளை செவிமடுப்பதுமில்லை. இன்றைய வாழ்க்கை முறையில் அதற்கான நேரமும் இல்லை என்றாகிவிட்டிருக்கிறது. இந்த இடைவெளிகள் நம் ஒவ்வொருவரையும் சிறைப்படுத்தி வைத்திருப்பதிலிருந்து நம்மை நாமே மீ்ட்டுக் கொள்வது காலத்தின் தேவையாக இருக்கின்றது.
உரையாடல்கள் அற்றுப்போன உலகில் ஸ்மார்ட் போன்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புன்னகை, சிரிப்பு, காதல்இ அழுகை, ஏமாற்றம், வெறுப்பு, கோபம் போன்ற அனைத்து உணர்வுகளையும் ஸ்மார்ட் போன்களில் இருக்கும் ‘சிம்போல்ஸ்’களைத் தட்டி வெளிப்படுத்திவிட்டு நகர்கிறோம். நம் உளக்காயங்கள் என்னஇ நம் தேடல் என்ன என்ற தெளிவே இல்லாமல் நாட்கள் நகர்ந்துவிடுகின்ற இந்த வாழ்விலிருந்து நம்மையும் நம் அன்புக்குரியவர்களையும் தேடி அடைய வேண்டியது எத்தனை அவசியம் என்பதை காலம் பல்வேறு விதமாக உணர்த்திக் கொண்டேயிருக்கின்றது
– ஸர்மிலா ஸெய்யித்,
எழுத்தாளர் இலங்கை .