கிளிநொச்சி தருமபுரம் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட தம்பிராச புரம் பகுதியில் காவல்துறையினரும் இரானுவத்தினரும் இணைந்து சந்தேகத்திற்கிடமான வீடொன்றை சோதனையிட்ட போது இராணுவச் சீருடை மற்றும் கைத் தொலைபேசிகள் என்பன மீட்கப் பட்டுள்ளன.
கிளிநொச்சி தருமபுரம் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட தம்பிராச புரம் பகுதியில் உள்ள வீடு ஒன்று தொடர்பில் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவல்களை யடுத்து இன்று(28-04-2019) பகல் குறித்த வீடு சோதனைக்குட்படுத்தப்பட்ட போதே வீட்டில் இருந்து இராணுவச் சீருடை மற்றும் கைத் தொலைபேசிகள் என்பன மீட்கப் பட்டுள்ளன. குறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது கொழும்பில் பணிபுரியும் முஸ்லீம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட பொருட்கள் தருமபுரம் காவல்நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தருமபுரம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்