வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இருந்து இன்று பொதுமக்கள் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்காலுக்கு சென்றுள்ளனர்.
அங்கு சென்றவர்கள் யுத்தத்தில் உயிர்நீத்த மக்களுக்காக கட்டப்பட்ட பொது நினைவிடத்தில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதன்போது உயிரிழந்தவர்களின் பெயர்விபரங்களை வெள்ளை(மாதிரி) அரச இலைகளில் எழுதி பொது நினைவு வளாகத்தில் தொங்கவிட்டு தமது கவலையை வெளிப்படுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதே வேளை காணமற்போனோரின் விபரங்களை பச்சைநிற (மாதிரி) அரச இலைகளில் எழுதி அங்கு காட்சிப்படுத்தியுள்ளனர்.
மேலும் இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும், இருப்பவர்களின் வாழ்வு அமைதிக்காகவும் சிறப்பு இறைவழிபாட்டில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.