புனித மடுமாதா தேவாலயத்தில் 20.11.1999 அன்று இரவு திட்டமிட்ட வகையில் சிறீலங்கா இராணுவத்தால் கோரப்படுகொலைகள் நடத்தி முடிக்கபட்டன. இச்சம்பவத்தில் ஸ்தலத்திலேயே 37 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் அது 44 ஆக அதிகரித்தது. 60 பேர் வரையானோர் படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இச்சம்பவமானது உலகெங்கிலுமுள்ள மடுமாதாவினது பக்தர்களுக்கும் மற்றும் பலருக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
சந்திரிக்கா தலைமையிலான சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் ஆரம்பமான காலத்தில் இருந்து இற்றை வரைக்கும் தமிழர் தாயகம் எங்கும் 1800ற்கும் அதிகமான வழிபாட்டு தளங்கள் குண்டு வீசி அழிக்கப்பட்டுள்ளன. தேவாலயங்கள் கோயில்கள் என்பன பெரும் படுகொலைகளை நடாத்தும் சிறீலங்கா அரச படைகளின் கொலைக்களங்களாக மாற்றப்பட்டுள்ளன. யாழ் யாகப்பர் ஆலயத்தில், நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்திலும் நடந்த பெரும் படுகொலைகள் வரிசையில் மடுத்திருப்பதியில் நடந்த கோரமும் இணைந்து கொண்டது.
சிறீலங்கா இராணுவம் தமிழீழத்தில் உள்ள இந்து, கிறிஸ்தவ ஆலயங்களை அழிப்பதும் மாசுபடுத்துவதும், கோவில் தேவாலயங்களை இடித்துத் தள்ளுவதும் வழமையான ஒன்றே. வழிபாட்டுத் தளங்களைப் படைத்தங்ககங்களாகப் பாவிப்பதும், விக்கிரகங்கள், சொரூபங்களை அகற்றுவதும் யாவரும் அறிந்ததே. இவையாவும் இனவாத அடக்குமுறையின் ஒரு வடிவமே.
இன்று ஐஎஸ் தீவிரவாதிகள் தேவாலயங்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களுக்கு கண்டணங்களையும் கோபங்களையும் அடையும் சிங்கள மக்களும் உலக மக்களும் என்று தமிழ் மக்களின் வழிபாட்டிடங்களை தாக்கிய சிங்கள அரசபயங்கரவாதிகளை பற்றி பேசப்போகிறார்கள்.
எங்களுக்காகவும் கொஞ்சம் வேண்டுங்கள் “Pray For Tamileelam”
நன்றி – தாரகம்