”நீங்கள் இன அழிப்பு செய்தீர்கள்” என்று வாதாடிய தமிழர்களை வைத்தே ”தீவிரவாதம்” அழிய உங்கள் உதவி வேண்டும் என்று கூறி தமிழரை முட்டாள் ஆக்கும் சிங்கள தலைமையின் புத்திசாலித்தனமும் இராசதந்திரமும் தமிழரால் ஏழு தலைமுறையிலும் கற்றுக்கொள்ள முடியாது…
சிங்கள அரசியல்வாதிகளுக்கு குடைபிடிக்கும் நடுநிலை தமிழர்கள் இருக்கும்வரை தமிழரே உங்களை யாராலும் அடிச்சுக்க முடியாது…
தமிழரில் இருந்தே விடுதலை இயக்கம் தோற்றம் பெற்றது ,ஈழத்தவரின் உடமையை உரிமையை பாதுகாத்தது என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் …
நாம் தீவிரவாத நபர்களை கண்டால் உங்களுக்கு தகவல் தரமாட்டோம் என்று கூறவில்லை. உங்களிலும் பார்க்க
பொதுமக்களின் பாதுகாப்பில் அதிகூடிய அக்கறை கொண்டவர்கள் நாங்கள்… நீங்கள் சுயநல நோக்கில் எம்மை அழித்தீர்கள்
கெட்டவர்களுடன் கூட்டு வைத்தீர்கள்
நாம் ஈழ மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பானவர்களாக இருந்தோம்
எம்மை தீவிரவாதிகள் என்று உலகெங்கும் முன்மொழிந்தீர்கள்
இதனை எல்லாம் நீக்கி எம்மை விடுதலை போராட்ட இயக்கம் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்
நாம் எமது உரிமைக்காக போராடினோம் என்பதை எழுத்தில் எழுதிக்கொடுங்கள்
எம்மை இனவழிப்பு செய்தீர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்
ஈழத்தை பௌத்த சிங்கள நாடாக மாற்ற திட்டமிடும் நீங்கள் என்பதை மற்றவர்களுக்கும் சிங்கள பொது மக்களுக்கும் தெரியப்படுத்துங்கள் //
இன்றுவரை எமது நிலங்களில் ஆக்கிரமித்து இருக்கும் நீங்கள் யார் எந்த தப்பு செய்தாலும் எம்மீது(விடுதலைப்புலிகள் மீது ) பழிபோட்டுவிட்டு உங்களது தார்மீக கடமையை பாதுகாப்பு செயற்பாட்டினை ஆறவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் இதுநாள்வரையிலும் இப்போதும் செய்த குற்றத்துக்கு உங்களுக்கு என்ன தண்டனையை நீங்கள் கொடுக்க போக்கின்றீர்கள் என்று கூறுங்கள் பிறகு உங்களை எங்கே நாம் கொண்டாடுவோம் என்று நாம் கூறுகின்றோம்..
நாம் யார்க்கும் குடியல்லோம் …மண்ணில் இருந்து புதைந்த மாவீரன்
காவியா