நூறு பாட்டிசைக்கும் பேறு தந்தாய்
வேறென்ன வேண்டும் இந்த உலகத்திலே
ஈழத்தின் தமிழிசை – அரங்கேற்று விழா
உளம் கனிந்து தலை சாய்த்து நன்றி கூறும் வேளையிது………….
அன்பான நண்பர்களே….
கடந்த பதினைந்து ஆண்டு கால தேடலும் இரண்டு ஆண்டு காலக் கடின பயிற்சியும் கொண்ட ஈழத்தின் தமிழிசை – நூறு பாடல் அரங்கேற்றம் யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கல்லூரியில் அரங்கு நிறைந்த இரசிகர்களின் முன்னிலையில் 21.04.2019 அன்று காலை 9.00மணிக்கு இனிதே தொடங்கியது.
ஈழத்தின் வரலாற்றில் ஆறு அடி உயரமான தமிழ்த் தாயின் சிலையானது முதல் முதலாக அமைக்கப்பட்டு கலைத்தூது நீ.மரியசேவியர் அடிகளாரால் திரைநீக்கம் செய்யப்பட்டு தமிழன்னை வழிபாடு நிகழ்த்தப்பட்டு அகத்தியர் அடிகளாரால் தீப வழிபாடு நிகழ்த்தப்பட்டுப் புனிதப்படுத்தப்பட்டதுடன் 36 கலைஞர்களும் தமிழன்னைக்கு விளக்கேற்றி வணங்கி அரங்கேற்றத்திற்குத் தயாரானார்கள்.
என்னுடன் இணைந்து எனது மாணவர்களான ஸ்ரீ.மதுராங்கி,
அ.அமிர்தசிந்துஜன்,
க.ரஜீவன்,
மு.துஸ்யந்தன்,
சி.மதுஜா,
ந.சங்கீதவாணி,
மு.அனுச்சித்திரா,
ப.சாரங்கன்,
க.சுடரோன் ஆகியோர் குரலிசையாளர்களாகவும்
அ.ஜெயராமன்,
சு.கோபிதாஸ்,
கா.குகபரன்,
மா.பிரவீனா,
ப.சியாம்கிருஸ்ணா,
கே.வேலதீபன் ஆகியோர் வயலின் இசைக் கலைஞர்களாகவும்
மா.சிதம்பரநாதன்,
அ.செல்வரத்தினம்,
சதா.வேல்மாறன்,
க.கஜன், வ.ரமணா,
க.நந்தகுமார்,
சி.செந்தூரன்,
நா.சிவசுந்தரசர்மா,
நா.மாதவன்,
கு.ரவிசங்கர்,
ந.சதீஸ்குமார்,
வெ.பிரபாகரசர்மா,
ம.லோகேந்திரன்,
கே.பிரணவன்,
ச.பிரணவன்,
து.சுபேஸ்,
வி.இராகவன்,
பா.ஞானவேல்,
அ.சண்முகப்பிரியன்,
ஞா.வசந் ஆகியோர் தாள இசைக் கருவியாளர்களாகவும் நிகழ்வை அணிசெய்தனர்.
இந்த நிகழ்வில்
சுவாமி விபுலானந்தர்,
ஆறுமுகநாவலர்,
யோக சுவாமிகள், அருட்கவி சீ.விநாசித்தம்பிப் புலவர்,
இயலிசைவாரிதி ந.வீரமணி ஐயர், வசாவிளான் கல்லடி வேலுப்பிள்ளை, நவாலியூர் சோமசுந்தரப் புலவர், பொன்னாலை வே.க.கிருஸ்ணபிள்ளை, மஹாகவி உருத்திரமூர்த்தி,
கவிஞர் நீலாவணன்,
கவிஞர் இ.முருகையன்,
வித்துவான் க.சொக்கன்,
பொன்னாலை சிவகுருநாதன்,
சங்கீதபூசணம் ஏ.கே.ஏரம்பமூர்த்தி, சங்கீதபூசணம் ச.பாலசிங்கம், சங்கீதபூசணம் எல்.திலகநாயகம் போல், சிற்பி சரவணபவன், பண்டிதர் மு.கணபதிப்பிள்ளை,
முழக்கர் முருகப்பா,
சிவநேசன் கந்தையா,
கவிஞர் மூளாயூர் தி.தவம்,
அகத்தியர் அடிகள்,
கலைத்தூது மரியசேவியர் அடிகள்,
கவிஞர் சோ.பத்மநாதன்,
ஆசுகவி செ.சிவசுப்பிரமணியம்,
தமிழ்மணி அகளங்கன்,
சங்கீதவித்துவான் பொன்.ஸ்ரீவாமதேவன், சங்கீதரத்தினம் க.ப.சின்னராசா, சங்கீதரத்தினம் மா.சிதம்பரநாதன்,
கவிஞர் கண.எதிர்வீரசிங்கம், கவிஞர் க.மயில்வாகனம்,
நுண்கலைமாணி மோகனா பாலசுப்பிரமணியம்,
செல்வி கா.மணிமேகலாதேவி,
வசாவிளான் தவமைந்தன் ஆகியோரின் நூறு பாடல்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன.
இவற்றுள் 07 பாடல்கள் ஏற்கனவே இசைவடிம் பெற்றவைகளாக இருந்தன.
ஏனைய 93 பாடல்கள் என்னால் இசையூட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளில் 120இற்கும் அதிகமான வகுப்புக்களில் கற்பிக்கப்பட்டன.
34 கவிராயர்களின் நூறு பாடல்கள் ஆற்றுகை செய்யப்பட்ட இந்த அரங்கேற்ற நிகழ்வில் 26 கருவிக் கலைஞர்களும் 10 குரலிசையாளர்களும் ஓரணியில் திரண்டிருந்தனர்.
எங்கள் தேசிய அடையாளமான தமிழிசைக்கான இந்த அரங்கேற்றமானது 10 மணித்தியாலங்கள் கொண்டதாக, 21 விதமான இசை அரங்குகளாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
ஈழத்தின் கலைத்துறை வரலாற்றில் இந்நிகழ்வானது புதியதோர் வரலாற்றை எழுதும் நிகழ்வாக அமைந்தது எனப் பல கல்வியாளர்களும் கலைஞர்களும் கூறிக் கொண்டனர்.
…………………………………………………………
உயிர்த்த ஞாயிறு தினத்தின் ஈழத்தின் தமிழிசையும் உயிர் பெறட்டும் எனப் பலரும் எண்ணியிருந்த வேளை அன்று கலை பல நூறு உயிர்களை நாம் இழக்கப் போகிறோம் என்று எவரும் நினைத்திருக்கவில்லை. நிகழ்வின் ஏற்பாட்டாளர்களாகிய எங்களையும் அரங்கை நிறைத்திருந்த பார்வையாளர்களையும் இந்தச் செய்திகள் நிலைகுலையச் செய்தன.
இறந்தவர்களின் ஆன்மா சாந்தி பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றே
…………………………
காலை 9.00 மணிக்குத் தொடங்கிய அரங்கேற்ற நிகழ்வு வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டு மாலை 5.30 மணியளவில் அனைத்துக் கலைஞர்களும் அரங்கில் ஒன்றாக அமர்ந்து நூறாவது பாட்டினை இசைத்து 8.30 மணித்தியாலங்கள் தொடர்ந்து தமிழிசை விருந்தளித்து மங்களம் பாடி நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது.
இந்த அரங்கேற்ற நிகழ்வுக்காக என்னுடன் துணிந்து பயணித்த எனது மாணவச் செல்வங்களுக்கும் அருகிருந்து உதவி புரிந்த ரமணரகு, மாதவன், செந்தூரன், தேவேந்திரராஜா ஆகியோருக்கும் துணையிசைக் கலைஞர்களுக்கும் ஒலியமைப்பாளர் குமணனுக்கும் ஒளிப்பாதிவாளர் ரமணரகுவிற்கும் மண்டப உரிமையாளர் இலங்கைவேந்தன் இராதா அண்ணருக்கும் ஏனைய எனது நண்பர்கள் அனைவருக்கும் பல கோடி நன்றிகள்.
அன்றைய தினம் வருகை தந்து பல விதமான பணிகளை மேற்கொண்ட பி.மாதினி, நா.மதியழகன் ஆகியோருக்கும் கஸ்தூரி, யோகாஞ்சனா, பாக்கியலட்சுமி போன்ற பல மாணவர்களுக்கும் (அனைவரது பெயர்களையும் குறிப்பிட முடியவில்லை, மன்னிக்கவும்) இனிய நன்றிகள்.
ஈழத்தின் தமிழிசை என்பது எங்கள் உயிரோடு கலந்த உணர்வில் பிசைந்த எழுத்தில் எடுத்தியம்ப முடியாத கண்ணுக்குப் புலப்படாத ”ஒன்று”.
எத்தனை தடைகள் வந்தாலும் ஈழத்தின் தமிழிசை உலகின் கடைசி எல்லை வரை உரத்து ஒலிக்கும்.
இது நிச்சயம் பலிக்கும்.
……………………………………….
ஈழத்தின் தமிழிசை அரங்கேற்று விழா
நூறு பாடல்களின் பட்டியல்
முதலாவது இசையரங்கு
1. இனிதான தமிழ் பாடவே
இராகம் : பகுதாரி,
தாளம்: ஆதி,
இயலிசை அழகு : வசாவிளான் தவமைந்தன்
குரலிசையாளர்கள் :
த.றொபேட், க.ரஜீவன், மு.துஸ்யந்தன், ஸ்ரீ.மதுராங்கி,அ.அமிர்தசிந்துஜன், சி.மதுஜா,மு.அனுச்சித்திரா,
ந.சங்கீதவாணி, ப.சாரங்கன்
துணையிசைக் கலைஞர்கள்
வயலின்: அ.ஜெயராமன்,
மிருதங்கம் : க.கஜன்,
கஞ்சிரா : நா.சிவசுந்தரசர்மா
முகர்சிங் : சி.செந்தூரன்,
தம்புரா : க.சுடரோன்
……………………………………………………
இரண்டாவது இசை நிகழ்வு
2. நினையாய் வாழி தோழி
இராகம் : சங்கராபரணம்
தாளம் : மிஸ்ரசாபு
இயலழகு : சங்கப் புலவர் பூதந்தேவனார்
இசையழகு : வசாவிளான் தவமைந்தன்
3. ஆதாரம் நீயென்று அறிந்தேன்
இராகம் : வாசஸ்பதி
தாளம் : ஆதி
இயலழகு : அகத்தியர் அடிகள்
இசையழகு : வசாவிளான் தவமைந்தன்
4. ஏற்குமோ திருவருளுக்கு
இராகம் : தோடி
தாளம் : ஆதி
இயலழகு : யோக சுவாமிகள்
இசையழகு : வசாவிளான் தவமைந்தன்
5. என்ன வேண்டுமோ
இராகம் : கதனகுதூகலம்
தாளம் : ஆதி
இயல் அழகு : அருட்கவி சீ.விநாசித்தம்பிப் புலவர்
இசை அழகு :
வசாவிளான் தவமைந்தன்
6. பாதம் தூக்கி ஆடும் நாதனே
இராகம் : ரீதிகௌளை
தாளம் : ரூபகம்
இயலிசை அழகு :
வசாவிளான் தவமைந்தன்
7. வந்தனமே ஸ்ரீ நந்தகுமாரா
இராகம் : கானமூர்த்தி
தாளம் : ஆதி
இயலழகு : பொன்னாலை சிவகுருநாதன்
இசையழகு : வசாவிளான் தவமைந்தன்
8. நிருமல பரசிவ சண்முகா
இராகம் : சுருட்டி
தாளம் : ஆதி
இயலழகு : ஆறுமுக நாவலர்
இசையழகு : வசாவிளான் தவமைந்தன்
குரலிசையாளர் : த.றொபேட்
துணையிசையாளர்கள்
வயலின் : சு.கோபிதாஸ்,
மிருதங்கம் : மா.சிதம்பரநாதன் ,
கஞ்சிரா : நா.சிவசுந்தரசர்மா,
கடம் : நா.மாதவன் ,
முகர்சிங் : சி.செந்தூரன்
தம்புரா : க.ரஜீவன்
………………………………………………
மூன்றாவது இசை நிகழ்வு
9. தானவர்ணம்
இராகம் : பகுதாரி
தாளம் : ஆதி
இயலிசை அழகு :வசாவிளான் தவமைந்தன்
10. நீ தா அருள் மகாமாரி
இராகம் : சாருகேசி
தாளம் : மிஸ்ரசாபு
இயலிசை அழகு
:சங்கீதபூசணம் ச.பாலசிங்கம்
11. இராஜாதி ராஜன் ஸ்ரீ நடராஜன்
இராகம் : காம்போதி
தாளம் : ஆதி
இயலழகு : யோகசுவாமிகள்
இசையழகு : வசாவிளான் தவமைந்தன்
12. எத்தனை பிறவி இங்கு தந்தாலும்
இராகம் : சரஸ்வதி
தாளம் : ஆதி
இயலழகு : அருட்கவி சீ.விநாசித்தம்பிப் புலவர்
இசையழகு : வசாவிளான் தவமைந்தன்
13. நாதாநின் பாதமே
இராகம் : கீரவாணி
தாளம் : மிஸ்ரசாபு
இயலிசை அழகு : வசாவிளான் தவமைந்தன்
14. ஓம் சிவாயநம சிதம்பரநாதா
இராகம் : சுபபந்துவராளி
தாளம் : ஆதி
இயலழகு : அருட்கவி சீ.விநாசித்தம்பிப் புலவர்
இசையழகு : வசாவிளான் தவமைந்தன்
15. என் மனத்திலே ஆடிடும் கந்தா
இராகம் : கரஹரப்பிரியா
தாளம் : கண்டசாபு
இயலிசை அழகு : வசாவிளான் தவமைந்தன்
குரலிசையாளர் : ஸ்ரீ.மதுராங்கி
துணைக் கலைஞர்கள்
வயலின் : கா.குகபரன்,
மிருதங்கம் : க.கஜன்,
கஞ்சிரா : அ.சண்முகப்பிரியன்,
கடம் : கு.ரவிசங்கர்,
தம்புரா : சி.மதுஜா
………………………………………………
நான்காவது இசையரங்கு
16. அம்பா ஜெகதம்பா
இராகம் : கீரவாணி
தாளம் : ஆதி
இயலழகு : இயலிசை வாரிதி ந.வீரமணி ஐயர்
இசையழகு : வசாவிளான் தவமைந்தன்
17. எனக் கின்பமே வா
இராகம் : ஆந்தோளிகா
தாளம் : ரூபகம்
இயலழகு : யோக சுவாமிகள்
இசையழகு : வசாவிளான் தவமைந்தன்
18. முத்தழகன் முருகனுடன்
இராகம் : ஹிந்தோளம்
தாளம் : மிஸ்ரசாபு
இயலழகு : ஆசுகவி செ.சிவசுப்பிரமணியம்
இசையழகு : நுண்கலைமாணி சாரதா பரஞ்சோதி
19. நீயேகதி அல்லால்
இராகம் : கரஹரப்பிரியா
தாளம் : ஆதி
இயலிசை அழகு : சங்கீதவித்துவான் பொன்.ஸ்ரீவாமதேவன்
20. பூவில் அமர்ந்த கலைமகளே
இராகம் : ரஞ்சனி
தாளம் : ஆதி
இயலழகு : மூளாயூர் தி.தவம்
இசையழகு : வசாவிளான் தவமைந்தன்
21. சரவணபவ சண்முககுக
இராகம் : ஸ்ரீ
தாளம் : ரூபகம்
இயல் அழகு : அருட்கவி விநாசித்தம்பிப் புலவர்
இசையழகு : வசாவிளான் தவமைந்தன்
குரலிசையாளர் : த.றொபேட்
வயலின் : அ.ஜெயராமன்,
மிருதங்கம் : நா.மாதவன் ,
கஞ்சிரா : அ.சண்முகப்பிரியன்,
கடம்: அ.செல்வரத்தினம் ,
தம்புரா : க.ரஜீவன்
…………………………………………………
ஐந்தாவது இசை நிகழ்வு
22. தானவர்ணம்
இராகம் : பிலஹரி
தாளம் : ஆதி
இயலிசை அழகு :வசாவிளான் தவமைந்தன்
23. வேண்டும் வரம் தருவாய்
இராகம் : ஹம்சத்வனி
தாளம் : ஆதி
இயலழகு : சங்கீதரத்தினம் க.ப.சின்னராசா
இசையழகு : வசாவிளான் தவமைந்தன்
24. உன் திருவடி நம்பினேன்
இராகம் : ஹேமவதி
தாளம் : கண்டசாபு
இயலிசை அழகு : வசாவிளான் தவமைந்தன்
25. சரவண பவகுகனே
இராகம் : வசந்தா
தாளம் : ஆதி
இயலழகு : ஏ.கே.ஏரம்பமூர்த்தி
இசையழகு : வசாவிளான் தவமைந்தன்
26. வாராத காரணம்
இராகம் : லதாங்கி
தாளம் : மிஸ்ரசாபு
இயலிசை அழகு : வசாவிளான் தவமைந்தன்
27. தாண்டவனே
இராகம் : சாருகேசி
தாளம் : ஆதி
இயலிசை அழகு : வசாவிளான் தவமைந்தன்
28. ராமதூத ஹனுமானே
இராகம் : ஹம்சானந்தி
தாளம் : ஆதி
இயலிசை அழகு : வசாவிளான் தவமைந்தன்
குரலிசையாளர் : அ.அமிர்தசிந்துஜன்
துணையிசையாளர்கள்
வயலின் : அ.ஜெயராமன்,
மிருதங்கம் : நா.சிவசுந்தரசர்மா,
கஞ்சிரா : வி.ராகவன்,
கடம் : நா.மாதவன்,
தம்புரா : மு.துஸ்யந்தன்
…………………………………………………
ஆறாவது இசை நிகழ்வு
29. தானவர்ணம்
இராகம் : கம்பீரநாட்டை
தாளம் : ஆதி
இயலிசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
30. ஆனைமுகனே சரணம்
இராகம் : ஆபோகி
தாளம் : ஆதி
இயலிசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
31. வரவேண்டும் ஆறு
இராகம் : சிம்மேந்திரமத்திமம்
தாளம் : ஆதி
இயல் அழகு : ஏ.கே.ஏரம்பமூர்த்தி
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
32. அலங்கார வேலனை
இராகம் : கரஹரப்பிரியா
தாளம் : ஆதி
இயல் அழகு : அருட்கவி சீ.விநாசித்தம்பிப் புலவர்
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
33. இன்னமும் வன் கண்மை
இராகம் : பூர்விகல்யாணி
தாளம் : ஆதி
இயல் அழகு : உடுப்பிட்டி சிவசம்புப் புலவர்
இசை அழகு : வசாவிளான் தவமைந்தன்
34. திருவடி சரணம் அம்மா
இராகம் : நாட்டைக்குறிஞ்சி
தாளம் : ஆதி
இயல் அழகு : இயலிசை வாரிதி ந.வீரமணி ஐயர்
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
குரலிசையாளர் : சி.மதுஜா
துணையிசையாளர்கள்
வயலின் : ப.சியாம்கிருஸ்ணா,
மிருதங்கம் : ந.சதீஸ்குமார்,
கஞ்சிரா :ஞா.வசந்,
முகர்சிங் : க.நந்தகுமார்,
தம்புரா: ஸ்ரீ.மதுராங்கி
………………………………………………
ஏழாவது இசை நிகழ்வு
35. அகரமும்
இராகம் : ஹம்சத்வனி
தாளம் : கண்டசாபு
இயல் அழகு : அருட்கவி சீ.விநாசித்தம்பிப் புலவர்
இசை அழகு : வசாவிளான் தவமைந்தன்
36. சென்மம்
இராகம் : லலிதா
தாளம் : மிஸ்ரசாபு
இயல் அழகு : வசாவிளான் கல்லடி வேலுப்பிள்ளை
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
37. அழகா என்றால்
இராகம் : சாருமதி
தாளம் : ஆதி
இயல் அழகு : அருட்கவி சீ.விநாசித்தம்பிப் புலவர்
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
38. இனிக்க இனிக்க
இராகம் : திலங்
தாளம் : ஆதி
இயல் அழகு : இயலிசை வாரிதி ந.வீரமணி ஐயர்
இசை அழகு : வசாவிளான் தவமைந்தன்
39. வெள்ளைநிற மல்லிகையோ
இராகமாலிகை
தாளம் : ஆதி
இயலழகு : சுவாமி விபுலானந்த அடிகள்
இசையழகு : சங்கீதபூசணம் கே.ஆர்.நடராசா
குரலிசையாளர் : த.றொபேட்
துணையிசையாளர்கள்
வயலின் : கா.குகபரன்,
மிருதங்கம் : சி.செந்தூரன்,
கஞ்சிரா :பா.ஞானவேல்,
கடம்: நா.மாதவன்,
தம்புரா : க.ரஜீவன்
…………………………………………………
எட்டாவது இசை நிகழ்வு
40. தானவர்ணம்
இராகம் : ஹம்சவினோதினி
தாளம் : ஆதி
இயலிசை அழகு : வசாவிளான் தவமைந்தன்
41. பதசரணம்
இராகம் : நாகஸ்வராளி
தாளம் : ஆதி
இயலிசை அழகு : வசாவிளான் தவமைந்தன்
42. வா வா என
இராகம் : சண்முகப்பிரியா
தாளம் : கண்டசாபு
இயலிசை அழகு : வசாவிளான் தவமைந்தன்
43. மாதவாஹரே
இராகம் : கல்யாணவசந்தம்
தாளம் : ரூபகம்
இயல் அழகு : பொன்னாலை சிவகுருநாதன்
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
44. வரம்தர வேண்டும்
இராகம் : நளினகாந்தி
தாளம் : ஆதி
இயல் அழகு : கவிஞர் க.மயில்வாகனம்
இசை அழகு : வசாவிளான் தவமைந்தன்
குரலிசையாளர் : மு.துஸ்யந்தன்
துணையிசையாளர்கள்
வயலின் : கே.வேலதீபன் ,
மிருதங்கம் : கு.ரவிசங்கர்,
கஞ்சிரா : பா.ஞானவேல்,
முகர்சிங் : து.சுபேஸ்,
தம்புரா : அ.அமிர்தசிந்துஜன்
…………………………………………………
ஒன்பதாவது இசை நிகழ்வு
45. வேழமுகனின்
இராகம் : நாட்டை
தாளம் : ரூபகம்
இயலிசைஅழகு: வசாவிளான் தவமைந்தன்
46. ஆனந்த தாண்டவம்
இராகம் : கல்யாணி
தாளம் : ரூபகம்
இயல் அழகு : அருட்கவி சீ.விநாசித்தம்பிப் புலவர்
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
47. உருகாதா உனது மனம்
இராகம் : தேஸ்
தாளம் : ஆதி
இயலிசை அழகு : சங்கீதபூசணம் ச.பாலசிங்கம்
48. வேத முதல்வனே
இராகம் : பந்துவராளி
தாளம் : ஆதி
இயல் அழகு : சங்கீதரத்தினம் க.ப.சின்னராசா
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
49. வாராய் கிளியே
இராகம் : வலஜி
தாளம் : ஆதி
இயல் அழகு : கணபதிப்பிள்ளை
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
50. குருநாதா
இராகம் : லதாங்கி
தாளம் : ஆதி
இயல் அழகு : அருட்கவி சீ.விநாசித்த்பிப் புலவர்
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
குரலிசையாளர் : க.ரஜீவன்
துணையிசையாளர்கள்
வயலின் : ப.சியாம்கிருஸ்ணா
மிருதங்கம் : சி.செந்தூரன்,
கஞ்சிரா : அ.சண்முகப்பிரியன்,
முகர்சிங் : க.நந்தகுமார்,
தம்புரா : த.றொபேட்
…………………………………………………
பத்தாவது இசை நிகழ்வு
51. முழுமுதற் பொருளே
இராகம் : ஹம்சத்வனி
தாளம் : ஆதி
இயல் அழகு : சிற்பி சரவணபவன்
இசை அழகு : சங்கீதவித்துவான் பொன்.ஸ்ரீவாமதேவன்
52. பதவர்ணம்
இராகமாலிகை
தாளம் : ஆதி
இயலிசை அழகு : வசாவிளான் தவமைந்தன்
53. பூசிக்க வேண்டுமையே
இராகம் : ஆபோகி
தாளம் : ஆதி
இயல் அழகு : வரகவி பொன்னாலை வே.க.கிருஸ்ணபிள்ளை
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
54. தமிழிசை தனைக்காத்து
இராகம் : கௌளை
தாளம் : ஆதி
இயலிசை அழகு : சங்கீதபூசணம் எல்.திலகநாயகம் போல்
55. எண்ணி எண்ணி
இராகம் : சந்த்ரகௌன்ஸ்
தாளம் : ஆதி
இயல் அழகு : தமிழ்மணி அகளங்கன்
இசை அழகு : வசாவிளான் தவமைந்தன்
குரலிசையாளர் : த.றொபேட்
வயலின் : கே.வேலதீபன்
மிருதங்கம் : நா.சிவசுந்தரசர்மா
கஞ்சிரா : வி.ராகவன்
கடம் : கு.ரவிசங்கர்
தம்புரா : மு.துஸ்யந்தன்
………………………………………………
பதினோராவது இசை நிகழ்வு
56. சந்தத் திருப்புகழால்
இராகம் : தர்மவதி
தாளம் : ஆதி
இயலிசை அழகு :
சங்கீதரத்தினம் க.ப.சின்னராசா
57. சதாசிவனை சதா துதிக்க
இராகம் : மோகனம்
தாளம் : ஆதி
இயல் அழகு :
அருட்கவி சீ.விநாசித்தம்பிப் புலவர்
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
58. நீலாயதாட்சி
இராகம் : பூர்விகல்யாணி
தாளம் : ஆதி
இயல் அழகு : பொன்னாலை சிவகுருநாதன்
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
59. கதிதருவாய்
இராகம் : பிலஹரி
தாளம் : ரூபகம்
இயல் அழகு :
அருட்கவி சீ.விநாசித்தம்பிப் புலவர்
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
60. காணும் இடமெல்லாம்
இராகம் : ஆபேரி
தாளம் : மிஸ்ரசாபு
இயல் அழகு :
முள்ளியவளை சிவனேசன் கந்தையா
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
குரலிசையாளர்கள்; : ந.சங்கீதவாணி, மு.அனுச்சித்திரா
வயலின் : மா.பிரவீனா,
மிருதங்கம் : ச.பிரணவன்,
கஞ்சிரா : நா.சிவசுந்தரசர்மா,
முகர்சிங் : சி.செந்தூரன்,
தம்புரா : சி.மதுஜா
……………………………………………
பன்னிரண்டாவது இசை நிகழ்வு
61. தொட்டதினால்
இராகம் : ஆரபி
தாளம் : ஆதி
இயல் அழகு :
முள்ளியவளை சிவனேசன் கந்தையா
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
62. சங்கரசிவ
இராகம் : அமிர்தவர்சினி
தாளம் : ரூபகம்
இயல் அழகு : பொன்னாலை சிவகுருநாதன்
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
63. ரங்கனின்
இராகம் : பிருந்தாவனி
தாளம் : மிஸ்ரசாபு
இயல் அழகு : யோக சுவாமிகள்
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
64. ஆடுமயிலே
இராகம் : ஹம்சாநந்தி
தாளம் : ஆதி
இயல் அழகு : யோக சுவாமிகள்
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
குரலிசையாளர்கள் : த.றொபேட், ப.சாரங்கன், க.சுடரோன்
வயலின் : அ.ஜெயராமன்,
மிருதங்கம் : வ.ரமணா,
கடம் : வெ.பிரபாகரசர்மா,
முகர்சிங் : து.சுபேஸ்,
தம்புரா : அ.அமிர்தசிந்துஜன்
…………………………………………………
பதின்மூன்றாவது இசை நிகழ்வு
65. வீரமாமயில்
இராகம் : கௌரிமனோஹரி
தாளம் : ஆதி
இயல் அழகு : யோக சுவாமிகள்
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
66. மோகன லாவண்ய
இராகம் : மோகனம்
தாளம் : ரூபகம்
இயல் அழகு :
இயலிசை வாரிதி ந.வீரமணி ஐயர்
இசைஅழகு: வசாவிளான் தவமைந்தன்
67. சிற்றம்பலத்துள் ஆடும்
இராகம் : பிலஹரி
தாளம் : ஆதி
இயல் அழகு :
அருட்கவி சீ.விநாசித்தம்பிப் புலவர்
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
68. உனைப் பாடும் பாடல்
இராகம் : கல்யாணவசந்தம்
தாளம் : ஆதி
இயல் அழகு : சங்கீதபூசணம் முழக்கர் முருகப்பா
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
69. கமல மலருறை
இராகம் : கர்நாடக தேவகாந்தாரி
தாளம் : ஆதி
இயல் அழகு : ஏ.கே.ஏரம்பமூர்த்தி
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
70. சொல்லெடுத்து
இராகம் : கருணாரஞ்சனி
தாளம் : ஆதி
இயல் அழகு : கவிஞர் கண.எதிர்வீரசிங்கம்
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
குரலிசையாளர்கள்
ஸ்ரீ.மதுராங்கி, சி.மதுஜா
வயலின் : மா.பிரவீனா,
மிருதங்கம் : கே.பிரணவன்,
கஞ்சிரா : வி.ராகவன்,
முகர்சிங் : க.நந்தகுமார்,
தம்புரா: ந.சங்கீதவாணி
…………………………………………………
பதின் நான்காவது இசை நிகழ்வு
71. இராகம் தானம் பல்லவி
இராகம் : கல்யாணி
தாளம் : ஆதி
இயல் அழகு : தண்ணுமைவேந்தன் மா.சிதம்பரநாதன்
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
குரலிசையாளர் : த.றொபேட்
வயலின் : சு.கோபிதாஸ்,
மிருதங்கம் : க.கஜன்,
கஞ்சிரா : நா.சிவசுந்தரசர்மா,
கடம்: நா.மாதவன்,
முகர்சிங்: சி.செந்தூரன்,
தம்புரா : க.ரஜீவன்
…………………………………………
பதினைந்தாவது இசை நிகழ்வு
72. ஞாலமென்னும்
இராகம் : சரசாங்கி
தாளம் : ஆதி
இயல் அழகு :
கலைத்தூது நீ.மரியசேவியர் அடிகள்
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
73. மழலை இன்
இராகம் : ஹம்சவினோதினி
தாளம் : ஆதி
இயல் அழகு : கவிஞர் நீலாவணன்
இசை அழகு : வசாவிளான் தவமைந்தன்
74. புகுவாய் தமிழில்
இராகம் : நாசிகாபூசணி
தாளம் : ஆதி
இயல் அழகு : கவிஞர் இ.முருகையன்
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
75. ஈழநாடே
இராகம் : சங்கராபரணம்
தாளம் : ஆதி
இயல் அழகு : மஹாகவி உருத்திரமூர்த்தி
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
குரலிசையாளர் : த.றொபேட்
வயலின் : ப.சியாம்கிருஸ்ணா
மிருதங்கம் : வ.ரமணா
தபேலா : சதா.வேல்மாறன்
கடம் : கு.ரவிசங்கர்
தம்புரா : க.ரஜீவன்
……………………………………………
பதினாறாவது இசை நிகழ்வு
76. வா சகியே
இராகம் : ஹாபி
தாளம் : மிஸ்ரசாபு
இயலிசை அழகு:
வசாவிளான் தவமைந்தன்
77. எப்படி மறந்தானோ
இராகம் : சிந்துபைரவி
தாளம் : ஆதி
இயலிசை அழகு :
வசாவிளான் தவமைந்தன்
78. அந்திமயங்கும் நேரம்
இராகம் : நீதிமதி
தாளம் : ஆதி
இயல் அழகு : அகத்தியர் அடிகள்
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
79. பரிமளமே துயில்
இராகம் : மோஹனாங்கி
தாளம் : ஆதி (திஸ்ரநடை)
இயல் அழகு : கலாநிதி க.சொக்கலிங்கம்
இசை அழகு : வசாவிளான் தவமைந்தன்
குரலிசையாளர்கள்; : ஸ்ரீ.மதுராங்கி, சி.மதுஜா, ந.சங்கீதவாணி, மு.அனுச்சித்திரா
வயலின் : கா.குகபரன்
மிருதங்கம் : ம.லோகேந்திரன்
கஞ்சிரா : அ.சண்முகப்பிரியன்
கடம்: கு.ரவிசங்கர்
தம்புரா : க.சுடரோன்
………………………………………………
பதினேழாவது இசை நிகழ்வு
80. சொல்லடா வாய்திறந்து
இராகம் : தேஸ்
தாளம் : ஆதி
இயல் அழகு : நுண்கலைமாணி மோகனா பாலசுப்பிரமணியம்
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
81. மனதினில் நிறைந்த
இராகம் : ஹமீர்கல்யாணி
தாளம் : ஆதி
இயலிசை அழகு :
வசாவிளான் தவமைந்தன்
82. எல்லை மீறிய
இராகம் : பிருந்தாவனி
தாளம் : ஆதி
இயலிசை அழகு :
வசாவிளான் தவமைந்தன்
83. தாலாட்டு
இராகம் : நீலாம்பரி
தாளம் : மிஸ்ரசாபு
இயல் அழகு :
நவாலியூர் சோமசுந்தரப் புலவர்
இசை அழகு : வசாவிளான் தவமைந்தன்
குரலிசையாளர்கள் : த.றொபேட், மு.துஸ்யந்தன், அ.அமிர்தசிந்துஜன், ப.சாரங்கன், க.சுடரோன்
வயலின் : கே.வேலதீபன், மிருதங்கம் :க.நந்தகுமார், கஞ்சிரா : ஞா.வசந்
தம்புரா : க.ரஜீவன்
………………………………………………
பதினெட்டாவது இசை நிகழ்வு
84. நல்லூரான் கிருபை
இராகம் : சிந்துபைரவி
தாளம் : மிஸ்ரசாபு
இயல் அழகு : யோக சுவாமிகள்
இசை அழகு : வசாவிளான் தவமைந்தன்
85. நாராயணா நமோ
இராகம் : தேஸ்
தாளம் : ஆதி
இயல் அழகு : ஏ.கே.ஏரம்பமூர்த்தி
இசை அழகு : வசாவிளான் தவமைந்தன்
86. ஞான ஊஞ்சல்
இராகம் : கல்யாணி
தாளம் : ஆதி (திஸ்ர நடை)
இயல் அழகு :
அருட்கவி சீ.விநாசித்தம்பிப் புலவர்
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
87. ஓம்நமோ நாராயணா
இராகம் : வகுளாபரணம்
தாளம் : ஆதி
இயல் அழகு : யோக சுவாமிகள்
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
88. ஓம் ஓம் ஓமென்றே
இராகம் : யமன்கல்யாணி
தாளம் : ஆதி (திஸ்ர நடை)
இயல் அழகு : செல்வி கா.மங்களாதேவி
இசை அழகு : வசாவிளான் தவமைந்தன்
குரலிசையாளர்கள் : த.றொபேட், க.ரஜீவன், மு.துஸ்யந்தன், ஸ்ரீ.மதுராங்கி, அ.அமிர்தசிந்துஜன், சி.மதுஜா, மு.அனுச்சித்திரா, ந.சங்கீதவாணி, ப.சாரங்கன்
வயலின் : அ.ஜெயராமன்,
மிருதங்கம் : நா.மாதவன்,
தபேலா : சதா.வேல்மாறன்,
தம்புரா : க.சுடரோன்
………………………………………………
பத்தொன்பதாவது இசை நிகழ்வு
89. தில்லானா ததீம்த
இராகம் : நிரோஸ்ரா
தாளம் : ஆதி
இயலிசை அழகு:
வசாவிளான் தவமைந்தன்
90. த்ருதோம் னனனதீம்
இராகம் : வர்ணரூபிணி
தாளம் : ஆதி
இயலிசை அழகு :
வசாவிளான் தவமைந்தன்
91. ஜெணுததீம், தக ஜெணுததீம்
இராகம் : ஜனசம்போதினி
தாளம் : ஆதி
இயலிசை அழகு
வசாவிளான் தவமைந்தன்
குரலிசையாளர்கள் :
த.றொபேட், க.ரஜீவன், மு.துஸ்யந்தன், ஸ்ரீ.மதுராங்கி, அ.அமிர்தசிந்துஜன், சி.மதுஜா, மு.அனுச்சித்திரா, ந.சங்கீதவாணி, க.சுடரோன்;
வயலின் : அ.ஜெயராமன்,
மிருதங்கம் : வ.ரமணா,
கஞ்சிரா : நா.சிவசுந்தரசர்மா,
கடம் : கு.ரவிசங்கர்,
முகர்சிங் : சி.செந்தூரன் ,
தம்புரா : ப.சாரங்கன்
…………………………………………
இருபதாவது இசை நிகழ்வு
92. சிகரம்தடவுகதிர்
இராகம் : ஹரிகாம்போதியின் சாயல்
தாளம் : ஆதி (மிஸ்ர நடை)
இயல் அழகு : கவிஞர் சோ.பத்மநாதன்
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
93. புள்ளி மயில்
இராகம் : மாயாமாளவகௌளை
தாளம் : ஆதி (மிஸ்ர நடை)
இயல் அழகு : கவிஞர் சோ.பத்மநாதன்
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
94. தூவி மயில்
இராகம் : சிந்துபைரவி
தாளம் : மிஸ்ரசாபு
இயல் அழகு : கவிஞர் சோ.பத்மநாதன்
இசை அழகு : சங்கீதவித்துவான் பொன்.ஸ்ரீவாமதேவன்
95. ஆறுமுகமாட
இராகம் : மோகனகல்யாணி
தாளம் : ஆதி (கண்ட நடை)
இயல் அழகு :
நவாலியூர் சோமசுந்தரப் புலவர்
இசை அழகு : வசாவிளான் தவமைந்தன்
96. நாலானவேத
இராகம் : சல்லாபம்
தாளம் : ஆதி
இயல் அழகு : கவிஞர் சோ.பத்மநாதன்
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
97. அரியொடு பிரமன்
இராகம் : பெஹாக்
தாளம் : ஆதி
இயல் அழகு :
நவாலியூர் சோமசுந்தரப் புலவர்
இசை அழகு : வசாவிளான் தவமைந்தன்
98. அருகு மல
இராகம் : ஹம்சநாதம்
தாளம் : சதுஸ்ர ஏகம் (கண்ட நடை)
இயல் அழகு :
அருட்கவி சீ.விநாசித்தம்பிப் புலவர்
இசை அழகு: வசாவிளான் தவமைந்தன்
குரலிசையாளர்கள் :த.றொபேட், க.ரஜீவன், மு.துஸ்யந்தன், ஸ்ரீ.மதுராங்கி, அ.அமிர்தசிந்துஜன், சி.மதுஜா, மு.அனுச்சித்திரா, ந.சங்கீதவாணி, க.சுடரோன்;
வயலின் : கா.குகபரன்,
மிருதங்கம் : க.கஜன்,
கஞ்சிரா : நா.சிவசுந்தரசர்மா,
கடம் : கு.ரவிசங்கர்,
முகர்சிங் : சி.செந்தூரன்,
தம்புரா : க.சுடரோன்
…………………………………………………
இருபத்தோராவது இசை நிகழ்வு
99. நந்திக் கடல் அருகமர்ந்த கண்ணகியம்மா
இராகமாலிகை
தாளம் : ஆதி
இயலிசை அழகு :
வசாவிளான் தவமைந்தன்
100. நூறாவது பாடல்
இராகம் : கீரவாணி
தாளம் : ஆதி
இயலிசை அழகு : வசாவிளான் தவமைந்தன்
அனைத்துக் கலைஞர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்வர்
மங்களம்