வெடி பொருட்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆயுதங்கள் ஏற்றப்பட்ட 20 வாகனங்கள் சிறிலங்காவில் இருந்து வடதமிழீழத்திற்குள் நுழைந்துள்ளதாக சறிலங்கா பாதுகாப்பு பிரிவுகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதற்கமைய வவுனியாவில் வீதிகள் மறிக்கப்பட்டு நேற்று விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலை, மாலை என இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், வவுனியாவுக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான 20 வாகனங்களின் 20 இலக்கங்கள் மற்றும் தகவல்கள் பொது மக்களுக்கு காட்சியளிக்கும் வகையில் ஒட்டுவதற்கு பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வவுனியாவுக்குள் நுழையும் 4 திசைகளிலும் இந்த பாதுகாப்பு கடவைகள் நிறுத்தப்பட்டு வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் சிறிலங்கா இராணுவத்தினர் வீடுகளுக்கு சென்று சோதனையிடும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
குறிப்பாக பாரிய தடுப்புக்கள் அமைத்த போர்க்காலம் போல சோதனைச்சாவடிகள் திறக்கப்பட்ட வேளையில் எவ்வாறு வெடிபொருட்களுடன் வாகனங்கள் நுழைந்திருக்கும் என்ற பெருத்த சந்தேகம் மக்களுக்கு எளாமல் இல்லை.சிறிலங்கா இராணுவத்தின் செறிவை தமிழீழ பிரதேசங்களில் அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாகவும் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.