சிறிலங்கா அரச பயங்கரவாதிகளால் முள்ளிவாய்க்கால் பகுதியில் இயங்கிவந்த வைத்தியசாலை தாக்கப்பட்டு இன்றோடு பத்தாண்டுகள் ஆகின்றன.
முள்ளிவாய்க்கால் பகுதியில் பாடசாலையில் நடந்து வந்த வைத்தியசாலை சிறிலங்கா இராணுவத்தின் தொடர் எறிகணைவீச்சை மே 2 தொடக்கம் சந்திக்க ஆரம்பித்தது ஏற்கனவே பூரண மருத்துவ வசதிகளின்றி இயங்கி வந்த வைத்தியசாலை 2009ம் ஆண்டு இதே நாள் கடுமையான எறிகணை வீச்சை சந்தித்தது.