தமிழர் தாயகத்தின் வடக்கில் சோதனை நிலையங்கள் ஊடாக சோதனை நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டுள்ளது.
இன்னிலையில் வடபகுதியில் தமிழர் தாயகம் எங்கும் படையினர் பொலீசார் குவிக்கப்பட்டு மக்களை சோதனை செய்யும் நடவடிக்கை முடக்கிவிடப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் இறுதிபோரில் தமிழ்மக்களை அழித்த அதே படையினர் இன்று முகத்திற்கு கறுத்த துண்டுகளை கட்டிக்கொண்டு கைகவசங்களை போட்டுக்கொண்டு கறுத்த கண்ணாடி போட்டு துப்பாக்கி ஏந்தியவாறு வீதிகளில் நிக்கின்றார்கள்
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் பத்து ஆண்டுகள் நினைவில் திகைத்திருக்கும் எங்களுக்கு படையினரின் இவ்வாறன நிலைகளை பார்க்கும் போது மேலும் அச்சஉணர்வினையும் மன உளைச்சலையும் உண்டுபண்ணி நிக்கின்றது என்றும் தெரிவித்த மக்கள்
இதனை பார்க்கும் போது முள்ளிவாய்க்கால் நினைவிற்கு வந்து போகின்றது அச்சம் கொள்ள வைக்கின்றது என்று வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
வீதிகளில் சந்திகளில் பாடசாலைகளில்,அரச திணைக்களங்களுக்கு முன்னால் இவ்வாறான ஸ்ரீலங்காப்படையினர் ஆயுதம் ஏந்தி நிக்கம் காட்சிகளை பார்க்கும் போது உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக சில புத்திஜீவிகள் தெரிவித்துள்ளார்கள்.
2009 ஆம் ஆண்டு போரின் பின்னர் பத்து ஆண்டுகள் கடந்து படையினரின் இவ்வாறான நிலை மக்களை அச்சம் கொள்ளவைக்கின்றது எங்கள் பிள்ளைகளை பறிகொடுத்த படையினர் எங்கள் கண்முன்னே மீண்டும் நிற்கும் காட்சி எங்கள் உறவுகளை கொண்டு குவித்த படையினர் எங்கள் கண்முன்னே நிக்கும் காட்சி,எங்களை கொடுமைப்படுத்தி கைததுசெய்த படையினர் எங்கள் கண்முன்னே நிக்கும் காட்சி எங்கள் மனங்களில் எழுந்துள்ளது என பல மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்