‘ஐயோ ஐயோ டொக்டரை யாராவது காப்பாத்துங்க. காப்பாத்துங்க’ என்று. அப்போதும் நீதான் ஓடிவந்தாய். அந்த வைத்தியனின் உடலைவிட்டு உயிர் போய்விட்டது என்பதை கணப்பொழுதில் உறுதிப்படுத்தினாய். எனினும் நீ அவனது சாவுக்காகப் புலம்பிக் கொண்டிருக்கவில்லை. ஆகவேண்டிய காரியத்தைப் பார்ப்பதிலேயே கருத்தாக இருந்தாய். அவன் செய்த குறை வேலையை நீ தொடர்ந்தாய். எனது நெஞ்சில் இறக்கிய ரியூப்பிலிருந்து வெளியேவந்த குருதியை மீண்டும் எனக்கே ஏற்றினாய்…………….என்ற என்னுடைய நாவலிருந்து
சீறிவரும் சன்னங்களையும் சிதறி வெடிக்கும் குண்டுகளையும் பிளம்புகளாகக் கண்டேன்! – மிதயா கானவி
அது முள்ளிவாய்க்கால் பாடசாலையில் இயங்கிய மருத்துவமனைதான். வாசலில் கால்வைக்கிறேன் அவ்விடத்திலும் எறிகணை வெடிப்பு என் வாழ்வைப்போல பூமியும் இருண்டு விட்டதை உணர்ந்தேன். எனினும் சற்றுநேரத்தில் பொழுது மங்கிவிட்டதால் சீறிவரும் சன்னங்களையும் சிதறி வெடிக்கும் குண்டுகளையும் பிளம்புகளாகக் கண்டேன். நான் பவிதாவுடன் நிலத்தில் விழுந்து காதுகளை பொத்திக் கொண்டேன்.
அந்த விநாடியில் எனது பின்னந் தலையில் காயம் பட்டது.
இரத்தம் சூடாகக் குபுகுபுத்தது. எழத்தான் முயற்சித்தேன். முடியவில்லை. அப்படியே ஒருபக்கமாய் உருக்குலைந்து சரிந்தேன். எனது மங்கிய பார்வையில் நீதான் ஓடிவந்து என்முன்னால் நின்றாய். அப்போது கூட நீ மிகுந்த நிதானம் மிக்கவளாய்த் தெரிந்தாய்.
எனக்கு நினைவு திரும்பியபோது இளம் வைத்தியன் ஒருவன் எனக்கு மருந்து கட்டிக் கொண்டிருந்தான்.
‘உங்களது நெஞ்சுக் காயத்திற்கு ரியூப் போட வேணும். நல்லகாலம் கொஞ்சம் முந்தி வந்திட்டிங்கள்.’ என்றான்.
வெடிச்சத்தங்கள் காதைப் பிளக்கும் வேளையிலும் அவன் நிதானமாக என்னுடன் கதைத்துக் கொண்டிருந்தான். சுள்ளென என் விலாவில் வலித்ததை உணர்ந்து அருண்டேன். சற்றுநேரத்தில் அவ்விடம் விறைத்துவிட்டது. அதனைத் தொடர்ந்து அவன் என் மார்பினுள் ரியூப்பை செலுத்தும் முயற்சியில் இறங்கினான். ரியூப் சரசரவென உள்ளிறங்கியதை உணர்ந்தேன். அச்சமும் வேதனையும் என்னை பாடாய்;படுத்த தலையை மறுபுறம் திருப்பிக் கொண்டேன்.
அடுத்த கட்டிலில் நீ என் பவிதாக் குட்டிக்கு வைத்தியம் செய்து கொண்டிருந்தாய்.
‘ஆ. என் பவிதாக்குட்டி உயிரோடு இருக்கிறாள். அது போதும் அதுபோதும்’ என்று என் உள்மனது சொல்வதை உணர்ந்தேன்.
வெடியோசைகளை நித்தம் நித்தம் கேட்டு பழக்கப்பட்டு விட்டாலும் திடீரென மருத்துவமனைக் கட்டிடத்தின் பகுதியில் விழுந்த எறிகணை எல்லோரையும் ஒருகணம் உலுப்பிவிட்டிருந்தது. காயப்பட்டுக்கிடந்தவர்களின் கதறல் ஒலி வானத்தைப் பிழந்துவிடும்போல அதிர்ந்தது. சிலகணம் மூடிவிட்ட கண்களை நான் திறந்தபோது எனக்கு வைத்தியம் செய்துகொண்டிருந்த வைத்தினின் நெஞ்சில் இரத்தம். அவனது மார்பில் சிதறுதுண்டேதும் பாய்ந்திருக்க வேண்டும். படாரெனக் கீழே விழுந்தான்.
அவனது மூக்கிலும் கடைவாயிலும் இரத்தம் வெளியேறியது. கையில் பிடித்த கத்தரிக்கோலும் கழுத்தில் தொங்கிய ஸ்டெதஸ்கோப்புமாய் அப்படியே அவன் நிலத்தில் அமைதியாகிக் கிடந்தான். அதைக் கண்டவுடன் நான் என்னை அறியாமல் கத்தினேன்.
அது முள்ளிவாய்க்கால் பாடசாலையில் இயங்கிய மருத்துவமனைதான். வாசலில் கால்வைக்கிறேன் அவ்விடத்திலும் எறிகணை வெடிப்பு என் வாழ்வைப்போல பூமியும் இருண்டு விட்டதை உணர்ந்தேன். எனினும் சற்றுநேரத்தில் பொழுது மங்கிவிட்டதால் சீறிவரும் சன்னங்களையும் சிதறி வெடிக்கும் குண்டுகளையும் பிளம்புகளாகக் கண்டேன். நான் பவிதாவுடன் நிலத்தில் விழுந்து காதுகளை பொத்திக் கொண்டேன்.அந்த விநாடியில் எனது பின்னந் தலையில் காயம் பட்டது.
இரத்தம் சூடாகக் குபுகுபுத்தது. எழத்தான் முயற்சித்தேன். முடியவில்லை. அப்படியே ஒருபக்கமாய் உருக்குலைந்து சரிந்தேன். எனது மங்கிய பார்வையில் நீதான் ஓடிவந்து என்முன்னால் நின்றாய். அப்போது கூட நீ மிகுந்த நிதானம் மிக்கவளாய்த் தெரிந்தாய்.
எனக்கு நினைவு திரும்பியபோது இளம் வைத்தியன் ஒருவன் எனக்கு மருந்து கட்டிக் கொண்டிருந்தான்.
‘உங்களது நெஞ்சுக் காயத்திற்கு ரியூப் போட வேணும். நல்லகாலம் கொஞ்சம் முந்தி வந்திட்டிங்கள்.’ என்றான்.
வெடிச்சத்தங்கள் காதைப் பிளக்கும் வேளையிலும் அவன் நிதானமாக என்னுடன் கதைத்துக் கொண்டிருந்தான். சுள்ளென என் விலாவில் வலித்ததை உணர்ந்து அருண்டேன். சற்றுநேரத்தில் அவ்விடம் விறைத்துவிட்டது. அதனைத் தொடர்ந்து அவன் என் மார்பினுள் ரியூப்பை செலுத்தும் முயற்சியில் இறங்கினான். ரியூப் சரசரவென உள்ளிறங்கியதை உணர்ந்தேன். அச்சமும் வேதனையும் என்னை பாடாய்;படுத்த தலையை மறுபுறம் திருப்பிக் கொண்டேன்.
அடுத்த கட்டிலில் நீ என் பவிதாக் குட்டிக்கு வைத்தியம் செய்து கொண்டிருந்தாய்.
‘ஆ. என் பவிதாக்குட்டி உயிரோடு இருக்கிறாள். அது போதும் அதுபோதும்’ என்று என் உள்மனது சொல்வதை உணர்ந்தேன்.
வெடியோசைகளை நித்தம் நித்தம் கேட்டு பழக்கப்பட்டு விட்டாலும் திடீரென மருத்துவமனைக் கட்டிடத்தின் பகுதியில் விழுந்த எறிகணை எல்லோரையும் ஒருகணம் உலுப்பிவிட்டிருந்தது. காயப்பட்டுக்கிடந்தவர்களின் கதறல் ஒலி வானத்தைப் பிழந்துவிடும்போல அதிர்ந்தது. சிலகணம் மூடிவிட்ட கண்களை நான் திறந்தபோது எனக்கு வைத்தியம் செய்துகொண்டிருந்த வைத்தினின் நெஞ்சில் இரத்தம். அவனது மார்பில் சிதறுதுண்டேதும் பாய்ந்திருக்க வேண்டும். படாரெனக் கீழே விழுந்தான்.
அவனது மூக்கிலும் கடைவாயிலும் இரத்தம் வெளியேறியது. கையில் பிடித்த கத்தரிக்கோலும் கழுத்தில் தொங்கிய ஸ்டெதஸ்கோப்புமாய் அப்படியே அவன் நிலத்தில் அமைதியாகிக் கிடந்தான். அதைக் கண்டவுடன் நான் என்னை அறியாமல் கத்தினேன்.
‘ஐயோ ஐயோ டொக்டரை யாராவது காப்பாத்துங்க. காப்பாத்துங்க’ என்று. அப்போதும் நீதான் ஓடிவந்தாய். அந்த வைத்தியனின் உடலைவிட்டு உயிர் போய்விட்டது என்பதை கணப்பொழுதில் உறுதிப்படுத்தினாய். எனினும் நீ அவனது சாவுக்காகப் புலம்பிக் கொண்டிருக்கவில்லை. ஆகவேண்டிய காரியத்தைப் பார்ப்பதிலேயே கருத்தாக இருந்தாய். அவன் செய்த குறை வேலையை நீ தொடர்ந்தாய். எனது நெஞ்சில் இறக்கிய ரியூப்பிலிருந்து வெளியேவந்த குருதியை மீண்டும் எனக்கே ஏற்றினாய்