கல்லறைக்கா?
சுடுகாட்டுக்கா?
உயிரோ பிரிந்து விட
ஊன் முற்றத்தில் கிடந்திட
இழவு சொல்லாது
பறை நாதம் கேட்காது
ஒப்பாரி பாடாது
சுண்ணத்து இடிக்காது
வாய்க்கரிசி போடாது
வழியனுப்பி வைக்காது
கொள்ளிச் சட்டி ஏந்தாது
கொள்ளிக் குடம் உடைக்காது
பல்லாக்கில் தூக்காது
பாடையிலும் வைக்காது
பார்த்துச் சொல்லிட
பக்கத்தே யாருமில்லாது
பதியில் விட்டுவிட்டு
பரிதவித்த உணர்வுடன்
தொடந்தது பயணம்
-நிலவன்