மண்டை ஓடுகளும் மனித எலும்புகளும்
நிறைந்த புதை குழிகள் தான் எச்சங்கள்
மனித நேயம் செத்து மடியும் எம்
நாட்டின் மர நிழலில் கூட நிம்மதியில்லை
ஆண்டாண்டுகாலமாக எங்கள் முதியோர்
ஆதியில் தடம் பதித்திட்ட சுவடுகளையெல்லாம்
ஒரு நொடிப்பொழுதில் அழித்துவிட்டு
ஆணவமாய் நிற்கின்றானே!
கொத்துக் கொத்தாய் வீதியிலே
செத்துச் செத்து வீழ்ந்தோமே
விக்கி விக்கி அழுதோ
மரணம் எனும் வெறுமைக்கு
உவமையாய்ப் போனோமே!
பிணத் தோப்புக் குவியலிலே
யாருக்கென நாம் அழுவோம்
ஓரமாய்ப் பிணங்களைக் கிடத்தி விட்டு
எஞ்சியோரை தேடுகிறது உறவு!
எச்சம் ஏனும் கிடைக்காதோ என
தப்பிப் பிழைத்தவர்களையும்
விட்டு வைக்காது தேடுகிறது
இந்தப் பிணம் தின்னி அரசாங்கம்.
– நிலவன்.