சிறீலங்காவின் போர்குற்ற சாட்சியங்கள் ஆயிரம் வார்த்தைகள் எழுதினாலும் சொல்ல முடியாத உணர்வுகளின் ஒளிப்படத் தொகுப்பு இது நியவாழ்க்கையில் சில நம்மை வாயடைத்து போக செய்யும். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்கள் அடங்கியவை நம் மனதில் அழியா நினைவாக எப்போது நினைத்தாலும் கண்ணெதிரே ஒரு கானல் நீர் போல தோன்றி மறையும்.
ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையில் வெறித்தாண்டவமாடிய சிறீலங்கா அரசு ஈழத் தமிழர்களுக்கு இழைத்த குற்றங்கள் பற்றிய, சான்றுகள், ஆயிரம் வார்த்தைகள் சொல்வதை ஒரு புகைப்படம் உணர்த்தி விடும். மக்களிடம் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் புகைப்படத்துக்கு மட்டுமே உண்டு. பல சமயங்களில் அழவும் வைத்துவிடும்.
இலங்கையில் போரின் போது நடைபெற்ற குற்ற செயல்களின் உண்மை நிலையை அவற்றில் சில புகைப்படங்கள் அந்த காலத்திலேயே உலகளவில் வைரலானது மட்டுமின்றி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
அரச பயங்கரவாதம் தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமித்து மக்கள் குடியிருப்புக்கள் மீது நடாத்திய விமான குண்டு வீச்சுகளையும், மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையும், கொத்துக்குண்டு, பொஸ்பரஸ் குண்டு, எறிகணை,உந்துகணைத் தாக்குதல்கள் மட்டுமல்லாது சிங்களப்படைகள் கண்மூடித்தனமான நேரடித் தாக்குதலையும் மேற்கொண்டிருந்தன. கிபிர், மிக் போன்ற போர் விமானங்கள், எம்.ஐ.24 உலங்குவானூர்திகள், கனரக ஆட்டிலறிகள், பீரங்கிகள்இகடற்படையினரின் பீரங்கி மற்றும் மோட்டார் உட்பட சிங்கள காலாட் படையினரின் நீண்ட தூரவீச்சுக்கொண்ட துப்பாக்கிகளாலும் சரமாரியான தாக்குதல் நடத்தப்பட்ட உணவு, குடிநீருக்கான பற்றாக் குறைகள், மருத்துவ நெருக்கடிகள்,இருப்பிடம் இல்லாத வீதி வாழ்வு, பதுங்குகுழி வாழ்வு, என இன்னும் பலவற்றை பட்டியல் படுத்தி சொல்லமுடியும்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிவரை போராடிய போராளிகளையும் பொதுமக்களையும் நச்சு குண்டுகள் மூலம் அழித்தொழித்தமையும், அங்கு பாதுகாப்பு வலயம் என கூறப்பட்ட பகுதிகளில் மக்களை வந்து தங்குமாறு கூறிய சிங்களம் அதேவேளை உலக நாடுகளினால் தடை செய்யப்பட்ட இரசாயன எறிகுண்டுகளை இரவு பகல் பராது இடைவிடாது வீசி பல்லாயிரக்கணக்கான மக்களை பச்சிளம் பாலகர் உள்ளிட்ட குழந்தைகள் பாதுகாப்பு வலயத்தில் கொன்றழித்து சிறீலங்கா படையினர் மேற்கொண்ட போர்க் குற்றங்கள், மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, தமிழ் மக்கள் சாட்சியம் மனித உரிமை மீறல், ஈரமின்றி சிங்கள கொடூர இராணுவத்தினர் நடத்தியுள்ள கோர எறிகணை தாக்குதலில் நிர்வாணமாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்தையும் பெண்கள் என்றும் பாரமால் அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி, களங்கப்படுத்தி கொன்றனர். உலகில் எங்குமே நடைபெறா கோரச் சாவைத் தமிழினம் சந்தித்து.
சம்பவங்களை நிழல் படங்களாகவும் ஓளிப்படங்களாகவும் கனோளி என அந்த கொடுமைநிறைந்த துயரங்களை ஆவணப்படுத்திய புகைப்படப் பிரிவு, நிதர்சனப்பிரிவு, ஊடகப்பிரிவு மற்றும் ஆவணப்படுத்தல் பிரிவு போராளிகள். பணியாளர்களும் இறுதிவரை தமது பணிகளை செய்யும்போது படுகொலை செய்ப்பட்ட போராளிகளையும் பணியாளர்களக்கம் இந்த நேரத்தில் நன்றிகளையும் இரங்களையும் தெரிவுத்தக் கொள்கின்றேன்.
பதிவாகியிருக்கும் நிழல்ப்படங்களை களத்திலும், தளத்திலும் எடுத்த பல போராளிகள் இன்றும் எம்முடன் உயிருடன் இருக்கின்றார்கள். அவர்கள் தங்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு மறைந்து வாழ்கின்றார்கள். போராளிகளினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஏற்கனவே ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டு இணையங்களில் வெளி வந்த படங்களையும் இதில் இணைத்துள்ளேன்.இந்த படங்களை எடுத்த போராளிகள் மற்றும் பணியாளார்கள் ஊடகவியளார்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
போர்காலம் தந்த நெருக்கடியில் பறிபோன இடங்கள், காட்சிகள், நினைவுகள், ஆகியவற்றைப் பதிவு இறுதி யுத்தகாலப்பகுதியில் தங்களது குடும்பங்களின் சுமைகளையும் தாங்கி ஊடகப்பணியையும் செய்து தங்களது உயிரை இழந்த ஊடகப்பணியாளர்களின் குடும்பங்களுக்கு ஊடகவியளாலர்கள் அனைவரும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இராணுவம் இழைத்த கொடுமைகள், சட்டத்திற்கு புறம்பான கொலைகள், போர்குற்றங்கள், என்பன தற்போது மெல்லமெல்ல வெளியாக ஆரம்பித்துள்ளது. இக்கொலைகளுக்கு என்றாவது ஒரு நாள் இலங்கை இராணுவம் பதில்சொல்லியே ஆகவேண்டும். மகிந்தர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் அன்று தான் கொல்லப்பட்ட மக்களின் ஆத்மா சாந்தியடையும்.
நிக்சன் / நிலவன்
மன்னிக்கவும் இக் கோப்பில் சில மாற்றங்கள் உள்ளமையால் முழுமையான படங்களை பார்க்க முடியாது தொடர்ந்து இணைந்திருங்கள்.