எட்டாம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாள் மிகவும் உருக்கமான முறையில் அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நினைவுகூரப்பட்டது, பேர்த் பாலமுருகன் ஆலய வெளி மண்டபத்தில் நிகழ்ந்த அனுஷ்டிப்பில் மக்கள் உணர்வோடு பங்குகொண்டிருந்தனர்.மேற்கு அவுஸ்திரேலிய தமிழர் பேரவையால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வை திரு சி . நிமல் தொகுத்து வழங்கினார். மாலை 7 . 30 க்கு அவுஸ்திரேலிய , மற்றும் தமிழீழ தேசிய கொடியேற்றலோடு நிகழ்வு ஆரம்பமானது , தொடர்ந்து இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட அனைத்து உறவுகளுக்குமாக பொதுச்சுடரேற்றப்பட்டது. அத்தோடு மக்கள் மலர்தூவி , விளக்கேற்றி , மரணித்த உறவுகள் ஆன்ம ஈடேற்றம் பெற அஞ்சலி செய்தார்கள். தமிழினவழிப்பு நினைவுநாள் உரையினை திரு . இளையவன்னியன் நிகழ்த்தினார். எமது மக்கள் அனுபவித்த பெருந்துயரை நடனத்தின் மூலம் காட்ச்சிப்படுத்திய குழுநடனத்தை தொடர்ந்து கொடியிறக்கத்தோடு நிகழ்வு நிறைவுபெற்றது.