நெஞ்சில் உரங்கொண்டு
அச்சமின்றிப் –பிஞ்சு
மேனியின் நெஞ்சில்….
அஞ்சிடாமல் அத்தனையும் ஏந்தினாயோ ?
சின்னஞ்சிறு மலரே …
சித்திர வண்ண வடிவழகே …
வன்நெஞ்சு கொண்டவனே …
உன்னைப் பு-சிக்க
உத்தமர் கோடி போதுமா ?
எத்தனை வீரத் தழும்புகள்
உந்தன் நெஞ்சினில்?…
சலனமற்றுச் சாவை
எதிர்கொண்டவனே….
கணப்பொழுது கண்ணுறங்கு-
உந்தன் வலிமறந்து கண்ணுறங்கு…..
- நிலவன் 2010